நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Oxford Murders [2008]

The-Oxford-Murders-Movie-Poster

 

இன்று நாம் பார்க்கப் போவது ஒரு அமெரிக்காவில் எடுக்கப்படாத ஒரு ஸ்பெயின் நாட்டுத் திரைப்படம். நடிப்பது ஜோன் ஹர்ட் மற்றும் லோர்ட் ஒவ் த ரிங்ஸ் புகழ் எலிஜா வுட்ஸ்.  இருங்க இருங்க … ஸ்பெயின் நாட்டு படம்னு சொன்னதும் நேக்கு லாங்குவேஜ் ப்ராப்ளம்னு சொல்லிட்டு ஓடிடாதீங்க. படம் ஃபுல்லா இங்கிலிஷ் தான்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


மார்ட்டின் ஆக்போடிற்கு புதிதாக மாற்றமாகி வரும் அமெரிக்க பட்டதாரி. அங்கு படிப்பதற்கு விருப்பம் இருந்தாலும், வர முக்கியமான காரணம் அங்கு பணிபுரியும் தத்துவவியல் லெக்சரரான ஆர்தர் செல்டமை சந்தித்து அவருடன் பணி புரிவதே. தங்கிப் படிப்பதற்கு தன் வயதான தாயாருடன் வாழும் கொக்ஸ் எனப்படும் ஒரு பெண்ணின் வீட்டினைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு லெக்சரில் ஆர்தரை சந்திக்கும் மார்ட்டின் அவரை அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து வருகிறான். ஆனால் வீட்டிற்கு வரும் இருவரையும் வரவேற்பது கொலை செய்யப்பட்ட கொக்ஸின் தாயின் பிணம்!!!

thumb4

சாதாரண கொலை தானேன்னு நாம நினைக்கும்போது ஆர்தர், விசாரணைக்கு வரும் போலிஸிடம் தனக்கு இந்த இடத்தில், இத்தனை மணிக்கு கொலை நடக்கப்போகிறது என்று ஒரு நோட் ஒன்று கிடைத்தது என்று கூற, படம் திசை மாறுகிறது. வரும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு மண்ணும் புரியாமல் இருக்க, ஆர்தரும் மார்ட்டினும் ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கொலையாளி கொலைகளைச் செய்வது அவனின் அறிவுத் திறமையைச் சோதிக்கவே என்று ஆர்தர் வாதாடுகிறார். போகப் போக மேலும் கொலைகள் நடப்பது அதிகரிக்க, கொலையாளி ஒரு சீரியல் கில்லராக ப்ரமோஷன் பெறுகிறான். மார்ட்டினுக்கும் அவன் மேல் ஒரு விதமான ஈர்ப்பு, ஆர்வம் வருகிறது.

உண்மையான கொலையாளி யார்? தன் தாயுடன் ஈடுகட்டி வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத கொக்ஸா? அல்லது தாயாரை கவனித்து பின் மார்ட்டினைக் காதலிக்கும் நர்ஸா? அல்லது மார்ட்டின் யுனிவர்சிட்டியில் சந்திக்கும் ஆர்தரால் கைவிடப்பட்ட மாணவனா? அல்லது ஆர்தரா?

thumb1
கொலையாளி இந்தக் கொலைகளைச் செய்வதற்கான காரணம் என்ன? அவனைக் கண்டுபிடிக்க முன் இன்னும் எத்தனைக் கொலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்? ஏதாச்சு சொன்னா படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதுனால நீங்க பேசாம படத்தைப் பாத்துருங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

          
படத்தில் முக்கிய இரண்டு கேரக்டர்களும் அனுபவப்பட்டவர்கள் என்பதால் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை.  எலிஜா வுட்ஸுக்கு லோர்ட் ஒவ் த ரிங்ஸ் படத்தில் போன்ற ஒரு கரெக்டர். மெதுவாக, அமைதியான ஒரு கரெக்டராக ஆரம்பித்து, ஒரு ஒப்ஸெஸிவ் கதாபாத்திரமாக மாறுவது வரை அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஜோன் ஹர்ட்டும் எல்லாம் தெரிந்த ஒரு இன்டலெக்சுவல் ப்ரொபெசராக கலக்கியிருக்கிறார்.

படம் எனக்குப் பிடித்திருந்தது. அதிலும் அந்தக் கடைசி ட்விஸ்ட் நான் எதிர்ப்பார்க்காதது. ஆனாலும் படத்தில் ஏகப்பட்ட கோட்பாடுகள், கணித விஞ்ஞானத் தத்துவ விடயங்களைப் பற்றிப் பேசித் தள்ளுறாங்க. சத்தியமா எனக்கு எல்லாம் புரியல. ஆனாலும் கேட்டுக் கொண்டிருக்க எரிச்சல் வராததால் ஓகே.  படம் முயல் வேகத்தில் பாயாவிட்டாலும், ஆமை வேகத்தில் நகர்ந்து வாயில் கொட்டாவி வரவிடவில்லை.

thumb5
நோட் பண்ணிக்கோங்க … The Butterfly Effect இற்கு படத்தில் முக்கியப் பங்குண்டு. எனக்குத் தெரிந்து பட்டர்ப்ளை எஃபெக்ட் பற்றி நல்லா சொன்ன படங்களில் இதுவும் ஒன்று. 

படத்தை காசு கொடுத்து சொந்தமா டீவிடி வாங்கி எல்லாம் பார்க்கப் போகாதீங்க. எங்காவது HBO, Star Movies மாதிரி டீவி சேனல்ல போட்டாப் பாருங்க. இல்ல இன்டர்நெட்ல டவுன்லோட் பண்ணிப் பாருங்க. ட்விஸ்ட்டுக்காகேவே ஒருமுறை ரசித்துப் பார்க்கலாம். ஒருமுறையிலேயே படம் புரிந்துவிடும். அதனால் முதல்முறை பார்க்கும்போதே ரசித்துப் பார்க்க ட்ரை பண்ணுங்க. இரண்டு மூணு முறை பார்க்கிற அளவுக்கு எல்லாம் இது வெர்த் பீஸ் இல்லைங்க.

My Rating – 61/100விமர்சனம் பிடித்திருந்தால் கீழே திரட்டிகளில் ஒரு ஓட்டுப் போட்டுவிடுங்க. ப்ளீஸ்.அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்,
ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

22 comments:

 1. படம் வொர்த்தோ இல்லையோ, கதை நல்ல வொர்த் போலப் படுகிறது..
  என்னமோ தெரியலை படத்தோட போஸ்டர் ரொம்பவே ஈர்க்குதுங்க.. தேடிப்பிடிச்சு ரெண்டு நாள்ல பார்த்துட்டு வந்து பெரிய கமெண்டு போடுறேன்.. அதுவரை வெயிட் பண்ணவும்!

  ReplyDelete
 2. @JZ

  கண்டிப்பா வெயிட் பண்றேன். படம் கொஞ்சம் ஸ்லோ தான். ஆனா ஒருமுறை ரசித்துப் பார்க்கலாம்.

  ReplyDelete
 3. ஐயா ஜாலி! பார்க்கத்தொடங்கிவிட்டேன்.. ஆன்லைன்.. (ஸோ இங்க லைவ் கமென்டரி போகும்..)

  * Rotten Tomatoes 10 % தான் கொடுத்திருக்காங்க.. நம்பி களத்துல இறங்கலாமா?
  * எழுத்து ஓட்டம் எல்லாமே ஸ்பானிஷ்ல இருக்கு (முழுப்படம் அப்படி இல்லை தானே..)
  * ஏதோ உலகப் போர் நடக்குது.. மறுபடியும் War Horse பபடத்தையே ஸ்டார்ட் பண்ணிட்டேனா.. ஆங்.. ஆக்ஸ்போர்ட் ஆரம்பம்!!

  ReplyDelete
 4. @JZ

  //Rotten Tomatoes 10 % தான் கொடுத்திருக்காங்க.. நம்பி களத்துல இறங்கலாமா?//

  எனக்கு படம் ஓகே ரகம் பாஸ். பிடித்திருந்தா சொல்லுங்க. பிடிக்காவிட்டாலும் சொல்லுங்க. நீங்க சொன்னா மட்டும் போதும். நீங்க சொன்னா மட்டும் போதும். (சிவாஜி ஸ்டைல்ல வாசிக்கவும்)

  //எழுத்து ஓட்டம் எல்லாமே ஸ்பானிஷ்ல இருக்கு (முழுப்படம் அப்படி இல்லை தானே..)//

  நான் டவுன்லோட் பண்ணின காப்பில எல்லாம் Englishல தான் இருக்கு.

  ReplyDelete
 5. அந்த அம்மாவோட கணவன் Harry Eagletonன்னும், அவருதான் Fractional Dimensions கான்செப்டை கண்டுபிடிச்சாருன்னம் சொல்லப்படுது.. கூகுள்ள தேடினேன்.. அப்படி யாரும் இருந்ததா தகவலையே காணோமே..
  (அடிக்கடி தொந்தரவு கொடுக்காம கொஞ்ச நேரம் பார்த்துட்டு திரும்பி வர்றேன்..)

  ReplyDelete
 6. என்ன படம் பாக்கலாம் பொழுது போகன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்...அறிமுகத்துக்கு நன்றி

  ReplyDelete
 7. @Lucky Limat லக்கி லிமட்

  அது வந்து இதுவரைக்கும் பார்த்துள்ள படங்களை மார்க் பண்ணிவிடலாம். பேவரைட் செய்யலாம். வாட்ச்லிஸ்டில் படங்கள் போடலாம். எல்லாம் ஒரு பீலா தான். ட்ரை பண்ணிப் பாருங்க. பாவித்தா ப்ரெண்ட் ரிக்வஸ்ட் ஒன்னு அனுப்புங்க.

  ReplyDelete
 8. @JZ

  அலன் டூரிங்னா உண்மை. ஹாரி ஈக்ள்டன் பற்றி நான் நினைப்பது என்னன்னா அவரு வந்து ஒரு ஃபிக்ஷனல் கேரக்டர். அவர கணக்கெடுக்காதீங்க.

  ReplyDelete
 9. படம் பார்த்துட்டேன் நண்பா.. இன்றைய பொழுதை ஓட்டியதற்கு நன்றி!

  படம் நாவலொன்றைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கு.. அதுனாலதான் கதை நல்லாவும், படம் சுமாராகவும் இருக்கு.. கொலைகளை அழகாக காட்டியிருந்தால், இன்னும் திரில்லாக இருந்திருக்கும்..
  இயக்குனர் வசனத்தை குறைத்து விஷுவலை கூட்டியிருக்கலாம்..
  (Main Characters ரெண்டு போரும் பேசிப்பேசியே அறுக்கிறார்கள்.. )
  Woods படம் முழுக்க ரசிக்க வைக்குறாரு.. ட்விஸ்டு கலக்கல்!

  ரொட்டன் டொமேடோஸை நம்பவே கூடாது, படம் எப்படியும் 45%-ஐ தாண்டியிருக்கனும். படத்தின் அறிமுகத்துக்கு இன்னொரு பெரிய... நன்றி!!!!

  ReplyDelete
 10. @JZ

  நீங்க தான்யா உண்மையான ஹாலிவுட்ரசிகன்.

  நீங்க எத்தன மார்க்ஸ் போடுவீங்க?

  ReplyDelete
 11. @ஹாலிவுட்ரசிகன்

  பார்க்கறதை விட பார்க்க வைக்குறது தான் பாஸ் பெரிசு. Thank You.

  Negative பக்கமும், Positive பக்கமும் ஒருமனதோட போகமுடியலை. ஸோ என்னால 55தான் கொடுக்க முடியும்!

  ReplyDelete
 12. பதிவை படிச்சு கதையை தெரிஞ்சுகிட்டேன்.புரிஞ்சுகிட்டேன்.நன்றி.

  ReplyDelete
 13. அப்ப இந்த லைவ் கமெண்டரி எல்லாம் எப்பயோ நடந்து முடிந்திருச்சிப்போலவே..ஐயோ அப்ப நாந்தான் லேட்டா..யெப்பா வட போச்சே..
  விமர்சனம் நன்று நண்பா..உண்மையாவே ரசிகன்னா அது JZ தான்..என்னமா படம் பார்க்குறீங்க ரெண்டு பேரும்.கீப் இட் அப்.
  நன்றி.

  ReplyDelete
 14. @Kumaran

  வேணும்னா படத்தைப் பார்த்துட்டு நீங்களும் ஒரு வடைய வாங்கிக்கங்க குமரன்.

  ReplyDelete
 15. இதுவரை பார்க்கல நண்பரே...பார்க்க தூண்டியதற்கு நன்றி நண்பரே....

  ReplyDelete
 16. ஓட்டுப்போட்டாச்சு.
  டி.வி.டி.யெல்லாம் வாங்க மாட்டேன்.

  ReplyDelete
 17. நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.

  ReplyDelete
 18. நல்ல விமர்சனம் ரசிகன்.

  ReplyDelete
 19. hii.. Nice Post

  Thanks for sharing

  Best Regarding.

  More Entertainment

  For latest stills videos visit ..

  www.chicha.in

  ReplyDelete
 20. இந்த படத்தை பரிந்துரை செய்ததற்கு நன்றி.இது போல் butterfly effect படத்தின் கதையை என்னால் எழுத முடியவில்லை.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...