நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Children of Men [2006]

poster_children-of-men-poster

“வணக்கம். இன்று உலகின் மிகவும் இளமையான வயது குறைந்த மனிதனாகிய 18 வயது நிரம்பிய பேபி டியாகோ, ரசிகர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குத்திக் கொல்லப்பட்டார்”. ஒரு காபி ஷாப்பில் இந்த செய்தியை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை சுற்றி கூட்டம் சோகமாக பார்த்துக் கொண்டிருக்க, அமைதியாக வந்து முகத்தில் எந்த சலனமுமில்லாமல் காபி வாங்கிக்கொண்டு வெளியே செல்கிறான் தியோ. அவன் வெளியேறி பத்தடி தூரம் தான் நடந்திருப்பான் ……. டூம். எங்கும் புகை மண்டலம். புகைக்குள்ளால் இருந்து ஒரு பெண் தன் பிய்ந்து கிடக்கும் கையை மறுகையில் ஏந்தியவாறு வெளியே வருகிறாள்.

children_of_men_explosion

Children of Men திரைப்படத்தின் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

வருடம் 2027. வானுயர்ந்த கட்டிடங்கள், பறக்கும் கார்கள், வித்தியாசமான உடையணிந்த விகாரமடைந்த மனிதர்கள் என்று எந்தவிதமான ஹாலிவுட் ஃபியுச்சரிஸ்டிக் படமொன்றின் சம்பிரதாயங்களையும் கடைபிடிக்காமல், நாம் இன்று வாழும் உலகத்தைவிட கொஞ்சம் முன்னேறிய ஒரு உலகில் இடம்பெறுகிறது இந்தப் படம். அணுகுண்டு வெடிப்பு ஒன்றின் கதிரியக்கத் தாக்கத்தின் மூலமாக ஒட்டுமொத்த பெண்களுக்கும் இனவிருத்தி செய்யக்கூடிய திறன் இல்லாது போகிறது. கடைசியாக 18 வருடங்களுக்கு முன் பிறந்த பேபி டியாகோவும் இறந்துவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் நம்பிக்கையற்றுப் போகிறது. நேரம் மட்டு மட்டாகிறது. எதிர்காலச் சந்ததி என்ற ஒரு விடயம் இல்லாதவிடத்து முன்னேற்றத்தில் என்ன பயன் கைவிட்டுவிட்டு எல்லோரும் தம் வாழ்க்கையை சிவனே எனக் கழிக்கிறார்கள். உலகநாடுகள் எல்லாம் போரினாலும், கலகத்தினாலும் உடைந்து நொறுங்குகின்றன.

லண்டன் நகரம் …. நீதியை நிலைநாட்ட தீவிரமாக முயற்சிக்கிறது. தீவிரவாதிகள், சட்டத்தை மீறி குடியேறியவர்கள், வதிவிடம் கேட்டு அகதிகளாக வருபர்களினதும் எண்ணிக்கை அதிகமாகி தவிக்கிறது. வீதிகள் எங்கும் குப்பை. சட்டத்தை மீறி நகரினுள் குடியேறப் பார்க்கும் அகதிகள் கூடுகளில் அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். அடைக்கலம் என்ற பெயரில் அவர்களுக்கு பசியும், கொஞ்சம் அளவு மீறினால் துப்பாக்கிச் சூடுமே அவர்களுக்கு மிஞ்சுகிறது.

thumb1

இது ஒருபுறம் இருக்க நம் ஹீரோ தியோவை அவனது முன்னாள் மனைவி ஜுலியன் தொடர்பு கொள்கிறாள். ஜுலியன் ஃபிஷஸ் எனப்படும் குடியேற்றவாசிகளின் உரிமைக்காக போராடும் ஒரு தீவிரவாதக் கும்பலின் ஒரு முக்கிய உறுப்பினர் என்றும், கீகீ எனப்படும் ஒரு கறுப்பின சட்டவிரோத குடியேற்றப் பெண்ணை The Human Project எனப்படும் ஒரு குழுவிடம் சேர்த்துவிட அவனின் உதவியை நாடுகிறாள். இவர்கள் பயணிக்கும் கார் திடீரென தாக்குதலுக்கு உண்டாக  ஒரு திடீர் மரணம். தப்பித்து வரும் மீதி பிஷஸ் கூட்டத்தின் ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அப்படி கீகீல என்ன விசேஷம்னா அவங்க பர்மனன்ட் ஆகியிருக்காங்க. இல்ல இல்ல ப்ரெக்னன்ட் ஆகியிருக்காங்க. (ஐயோ என்னதான் சீரியஸா எழுத ட்ரை பண்ணினாலும் தானாவே மொக்கை போட வருதே). இதை தெரிந்து கொள்ளும் தியோ இவளுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறான்.

இப்ப ஒரு சிக்கல். இப்பொழுது கீகீ அரசாங்கம், ஃபிஷஸ் இருவருக்கும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிக முக்கியமான ஒரு சாதனம். அரசாங்கத்தின் கையில் கீகியின் பிள்ளை கிடைத்தால் சிலவேளை அவளின் கர்ப்பம் மறைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கான ஒரு பொருளாகிவிடுவாள். ஃபிஷஸ் கையில் கிடைத்தால், அவளின் குழந்தை அவர்களின் போராட்டத்திற்கு ஆட்களை சேர்க்க மிகவும் உதவும். அதுமட்டுமில்லாமல் கீகீயும் ஒரு சட்டவிரோத குடியேற்றவாசி என்பது அவர்களுக்கு கூடுதல் பலம். இதை அறிந்துகொள்ளும் தியோ, கீகீயுடன் அவ்வீட்டிலிருந்து தப்பித்துச் செல்கிறான்.

children-of-men-arizona

போராட்டம் உச்சக்கட்டத்தில் நடக்கும் ஒரு பகுதி, அகதி முகாம், இடையில் கீகீயின் பிரசவம் எனப் பல சிக்கல்களைத் தாண்டி இருவரும் எவ்வாறு The Human Project கூட்டத்தை அடைந்தனர் என்பதை மீதிக் கதை சொல்கிறது.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் எனக்குப் பிடித்த, ஆனால் கொஞ்சம் டிஸ்டர்பான விஷயம் என்னான்னா, நம்ம உலகம் எதிர்காலத்தில் எவ்வாறு மாறக்கூடியது என்று கொஞ்சம் அதிகமாக நம்பக்கூடிய விதத்தில் காட்டியது தான். ஒரு பக்கம் 2012ல உலகம் அழியுங்கிறாணுங்க. அணு ஆயுதம் டெஸ்டிங்னு மற்றப்பக்கம். போகிற போக்கைப் பார்த்தால் படத்தில் உள்ளது போல் உலகம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (சிலவேளை உலகம் இப்படித் தான் அழியுமோ?)

கதையும் திரைக்கதையும் பக்கா. படம் முடிந்தபின்னும் படத்தின் சில காட்சிகள் உங்கள் மனதில் நிற்கும். அது படத்தின் வெற்றி. நான் அகதி முகாம்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்படியிருக்கும் என்பது ஓரளவு இந்தப் படத்தைப் பார்த்த பின்பு தான் தெரிகிறது. இதுவே அப்படியென்றால் இலங்கையில், ஈராக்கில் நடந்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தால் ஈரக்குலையெல்லாம் நடுங்குகிறது. (டௌப்ட்டு படத்தில் 1மணி 23 நிமிடத்தில் ஒரு சிங்களப் பெண் இறந்த தன் மகனை மடியில் கிடத்தி சிங்களத்தில் ஒப்பாரி வைப்பது போன்ற ஒரு சீன் வருது. இதற்கு என்ன அர்த்தம்?)

children-of-menபடம் முழுவதும் சினிமேட்டோகிராஃபி புகுந்து விளையாடுகிறது. எம்மானுவேலின் ஹேன்டிகெம்மும், டைரக்டர் குவாரோனின் லாங்ஷாட்கள், செட்கள், ஷ்பெசல் எஃபெக்ட்கள் படத்திற்கு பெரும் பலம். நடிப்பு பற்றியெல்லாம் பேசி இந்த பதிவை இழுக்க விரும்பவில்லை. ஆனால் மெயின் கேரக்டர் எல்லாரையும் விட எனக்கு ஜேஸ்பராக வரும் மைக்கேல் கெயினின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுவதும் இல்லாவிட்டாலும் வரும் இடங்களில் இவரின் ஆட்சி தான்.

சுருக்கமா படத்தைப் பற்றிச் சொல்லணும்னா, நீங்க கட்டாயம் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று. ஏன்னா மனிதாபிமானத்தின் நிறைய பக்கங்களை சுரண்டிப் பார்க்கும் வகையில் அழகாக செதுக்கபட்ட திரைக்கதை நிச்சயம் ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.


படத்தின் ட்ரெயிலர் -My Rating – 84/100எக்ஸ்ட்ரா பிட்டு

கைய வச்சிகிட்டு சும்மா இருக்கமுடியாத ஒரு பயபுள்ள ஹிட்ச்காக்கின் Rear Window படத்தை வெட்டிக் கொத்தி ஒட்டி கிட்டத்தட் அனேகமான படத்தை 3 நிமிடங்களுக்குள் செதுக்கியிருக்கு. படத்தைப் பார்த்தவர்கள் இதையும் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லுங்க. மேலதிக டீடெயில்களுக்கு இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க. (மூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கத் தோணும்)


 

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை,

ஹாலிவுட்ரசிகன்

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

18 comments:

 1. இந்த படத்தை தரவிறக்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. உங்கள் விமர்சனம் படித்த பிறகு பார்க்கும் ஆவல் அதிகரித்து விட்டது. கண்டிப்பாக பார்க்கிறேன்.

  அந்த மூக்கு பொடச்ச ஆளு யாருப்பா?

  ReplyDelete
 2. நண்பா விமர்சனம் அருமையாகவுள்ளது...டவுன்லோட் பண்ண லிங் குடுப்பியா....

  ReplyDelete
 3. விமர்சனம் வழக்கம் போல நன்று நண்பா.. அல்ஃபொன்சோ குவாரொன் மறக்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்..
  இந்த ட்ரெயிலர் "எம்பெட்" பண்ணுவது disable செய்யப்பட்டிருப்பதால் இங்கிருந்தே "பிளே" பண்ணமுடியாது.. (வேறு ட்ரெயிலர் போடலாம்..)

  * ரியர் விண்டோ சீன் அருமை. எங்க இருந்துதான் இதெல்லாம் கேள்விப்படுறீங்களோ?

  ReplyDelete
 4. பொதுவாக அமெரிக்க சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் இருக்கும் மேட்டர்கள் இல்லாம ஓரளவுக்கு புதுசா இருக்கும்..., செமபடம்..

  ReplyDelete
 5. இரவு வணக்கம் நண்பரே,
  பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையிருக்கவே பார்க்காமல் விட்டது பெரிய குற்றம் போல..கதையை முன்னமே படித்துள்ளேன் நண்பரே..ஆனால், தங்களது எழுத்துக்கள் என்னை தூண்டவே விரைவில் பார்க்கிறேன்.
  நல்ல விமர்சனம் என்பதை மீண்டும் ஒரு முறை தங்களிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை.காரணம், நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் சிறப்பானதே..அது ஏற்கனவே என்னளவில் உறுதியாக நான் நம்பும் ஒன்று..தங்களது வெற்றிப்பணி தொடரட்டும்.வாழ்த்துக்களோடு நன்றி.

  குறிப்பு : ரியர் விண்டோ பிட்டு நல்லாருக்கே..

  ReplyDelete
 6. படம் பார்க்கத் தூண்டுகிறது விமரிசனம்!

  ReplyDelete
 7. வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. படத்தை கட்டாயம் பார்க்க முயற்சி பண்ணுங்க.

  ReplyDelete
 8. வணக்கம் நண்பா,
  அருமையான விமர்சனம்.

  மனிதாபிமானம் பற்றி உரைக்கும் படத்தை நானும் பார்க்க முயற்சிக்கிறேன்.

  எக்ஸ்ட்ரா பிட்டு சூப்பர் தலை! அழகுறப் பொருத்தியிருக்கு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நண்பருக்கு வணக்கம்......
  //புகைக்குள்ளால் இருந்து ஒரு பெண் தன் பிய்ந்து கிடக்கும் கையை மறுகையில் ஏந்தியவாறு வெளியே வருகிறாள்.//
  விமர்சனம் படிக்கும் போதே பீதிய கெளப்புதே.உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுது.இந்தப் படத்த இணையத்தில தேடிகிட்டு இருக்கேன்.

  ReplyDelete
 10. ரொம்ப நல்ல படம்,...!!! ரிலீஸ் ஆன அப்ப பார்த்தது..!!கதை மறந்தே போச்சு..!! மெமரி ரொம்ப வீக் ஆகி போச்சு :) ...
  படத்தை பத்தி ரொம்ப சுவாரிசியமா எழுதி இருக்கேங்க..

  ReplyDelete
 11. @Manimaran

  நடந்ததைச் சொன்னேன் நண்பா. படம் அவ்வளவு டெரர் இல்லை.

  ReplyDelete
 12. @ராஜ்

  என்ன ராஜ். சைலண்டா இருக்கீங்க? படம் ஒன்னும் பார்க்கலயா?

  ReplyDelete
 13. விமர்சனம் சூப்பர், படம் வித்யசமானந்தா இருக்கும் நினைக்கிறன்.

  ReplyDelete
 14. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 15. (டௌப்ட்டு – படத்தில் 1மணி 23 நிமிடத்தில் ஒரு சிங்களப் பெண் இறந்த தன் மகனை மடியில் கிடத்தி சிங்களத்தில் ஒப்பாரி வைப்பது போன்ற ஒரு சீன் வருது. இதற்கு என்ன அர்த்தம்?)

  do you have a link to this movie on IMDB

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...