நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Midnight In Paris [2011]

folder

நிறையப் பேர் வாழ்க்கையில் என்றைக்காவது கட்டாயம் இடம்பெறும் ஒரு விடயம், தன் வாழ்க்கையில் ஒரு கடந்தகாலத்தில், அல்லது அதற்கு முற்பட்ட ஒரு காலப்பகுதியில் வாழ ஆசைப்படுவது. இதற்குப் பெயர் தானுங்க நாஸ்டால்ஜியா (இப்படி ஒரு சொல் எனக்கு கருந்தேள் சொல்லித் தான் தெரியும்). எனக்கும் நாஸ்டால்ஜியா உண்டு. ஆல்பிரட் ஹிட்ச்காக், எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் சென்று அவர்களின் படங்களை புதிதாக மலைப்புடன் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும் எனப் பலமுறை நான் எண்ணியதுண்டு. கடந்து வந்த பள்ளிக்கூட நாட்களிற்கு மீண்டும் சென்று வாழ முடிந்தால்?

ஒவ்வொரு காலக்கட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு விதமான டைம் பீரியட் சுகமான ஒரு காலமாக இருந்திருக்கும்.  இதே போல ஆங்கில இலக்கியம் செழித்தது எனக் கூறப்படும் 1920ம் ஆண்டுகளின் பாரீஸ் நகரில் சென்று வாழ நினைக்கும் ஒரு எழுத்தாளனின் அனுபவங்கள் பற்றிய படமே மிட்நைட் மசாலா … சே … மிட்நைட் இன் பாரீஸ்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கில் பென்டர் ஒரு திரைஎழுத்தாளன். நாவல் ஒன்றை எழுத எண்ணி, தனக்கு நிச்சயமாகி உள்ள இனெஸ் எனும் பெண்ணுடனும் அவளின் பெற்றோருடனும் பாரீஸிற்கு விடுமுறையில் வருகிறான். படம் தொடங்கி சற்று நேரத்தில் கில்லிற்கும், இனெஸிற்கும் அவளின் கல்லூரி நண்பனான போல் என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. போல் ஒரு நடமாடும் விக்கிபீடியா போல பாரீஸின் வரலாறு, புத்தகங்கள் என அவன் காணும் எல்லா விடயங்களையும் நன்கு அறிந்தவன் போல வளவளவென்று பேசினாலும், அவன் கூறும் விடயங்களின் நம்பகத்தன்மை பற்றி கில்லிற்கு திருப்தி இல்லை. அவன் அவர்களிடம் இருந்து ஒதுங்க நினைத்தாலும், இனெஸ் போலை அறிவாளியென்று நம்பி அவனின் காலைச் சுற்றி வந்துகொண்டிருப்பதால் கில் அவளை போல் உடன் விட்டுவிட்டு தனியாக பேய் வாக்கிங் போகும் டைமில் பாரீஸின் வீதிகளில் வாக்கிங் போகிறான்.

thumb2
நடு இரவு … 12 மணி … கில்லிற்கு அருகில் ஒரு கார் வந்து நிற்கிறது. காரிற்குள் இருக்கும் 1900 காலப்பகுதி உடையணிந்த சிலர் கில்லை தம்முடன் ஏற்றிச் செல்கின்றனர். கார் நிற்கும் இடம் ஒரு ரெட்ரோ ஸ்டைல் பார். கில் காரிலிருந்து இறங்கிப் பார்த்தால், அவன் இருப்பது அவன் வாழ ஏங்கிக்கொண்டிருக்கும் 1920ம் ஆண்டில்.

பாரிற்குள் செல்லும் இவனிற்கு ஸ்கொட் ஃபிட்ஸ்கரால்ட், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கிறது. தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தையில் ஹெமிங்வே கில் எழுதிக் கொண்டிருக்கும் நாவலை சரிபார்ப்பதற்காக கர்ட்ரூட் ஸ்டெய்ன் எனும் விமர்சகர் / கவிதையாசிரியரிடம் கூட்டிச் செல்வதாக கூறுகிறான். கில் தன் புத்தகத்தை எடுக்க பாரில் இருந்து வெளியே காலடி வைத்ததும், மீண்டும் அவன் இருப்பது நிகழ்கால 2000ம் ஆண்டுகளில்.

மறுநாள் கில் தன் அனுபவங்கள் பற்றி இனெஸிடம் பகிர்கிறான்.  ஆனால் இனெஸ் கில் ஊர் மேய்ந்துவிட்டு பொய் சொல்வதாக எண்ணி நம்ப மறுக்கிறாள். இதனால் நிரூபிக்க அவளை போல் அழைத்துச் செல்கிறான். ஆனால் நேரம் சென்றும் கார் வராததால், இனெஸ் சலித்துக் கொண்டு சென்றுவிடுகிறாள். அவள் சென்று சற்று நேரத்தில் கார் வர, மீண்டும் கில் 1920ம் ஆண்டிற்கு டைம் ட்ராவல். இம்முறை எழுதிய நாவலையும் கூடவே எடுத்துச் செல்வதால், ஸ்டெய்ன் கில்லின் புத்தகங்களை வாசித்து மேம்படுத்த ஒப்புக் கொள்கிறாள்.

இதற்கிடையில் அங்கு இருக்கும் அட்ரியானா என்ற பெண்ணினதும், கில்லினதும் கண்ணும் கண்ணும் நோக்கியா பண்ண, அவர்களுக்குள் ஒரு சிக்னல் கனெக்சன் உருவாகிறது. அட்ரியானா பிகாசோவின் (ஒலகமகா ஓவியர் ஒருத்தராம் ) காதலி. இந்தப் புதிய உறவால் மனங் குழம்பும் கில்லிற்கு தன் நிகழ்கால காதலியின் மேல் உள்ள காதல் உண்மையானதா என சந்தேகம் வருகிறது.

thumb1

ஒருமுறை நிகழ்காலத்தில் கில்லிற்கு அட்ரியானாவின் டைரி ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைக்கிறது. அதில் அட்ரியானா, தான் ஒரு அமெரிக்க எழுத்தாளனை சந்தித்தது பற்றியும் அவனிடம் காதல் வசப்பட்டது பற்றியும் எழுதியிருக்க, கில் உடனே ஆசையோடு அன்றிரவு 1920க்கு திரும்புகிறான்.

பின்னர் அங்கு சென்றபின் நடக்கும் சம்பவங்களையும், கில்லின் வாழ்க்கை எவ்வாறு திசைதிரும்பியது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் படத்தை எடுத்துப் பாருங்கள்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

கதை ரொம்ப சிம்பிளான கான்செப்ட் தான். நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கு (இதுபற்றி சி.பி தனி பதிவு போட்டு வுடி அலனிடம் அது ஏன் அப்படி, இவரு ஏன் இப்படின்னு நிறையக் கேள்வி கேப்பாருன்னு இதனால் அறியத்தருகிறேன்). இது ஃபிக்சன் இல்லை. பேண்டசி. அதனால … லாஜிக் பார்த்து பெரிய அப்பாடக்கர் ஆகும் ஐடியா எல்லாத்தையும் மூட்டை கட்டிவிடுங்க. கார்ல ஏறி இறங்கினா 1920. போற ரூமை விட்டு வெளியே வந்தா பழையபடி நிகழ்காலம். அம்புட்டுதேன்.

ஆனா டைரக்ஷன் ஸ்டைலிலும், மேக்கிங்கிலும், பின்னணி இசையாலும் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார்கள். நான் இதுவரை வுடி அலனின் படங்கள் எதுவும் பார்த்ததில்லை. அவரோட பெஸ்ட்டு எல்லாம் ரொம்பப் பழையப் படங்களாமே? அதனால் அவர் பற்றியும், அவரின் இதற்கு முன்பான படங்கள் பற்றியும் இந்தப் பதிவில் நோ ஸ்பீக்கிங்!!! மே பீ பிறகு ஃப்ரீயா ரூம்போட்டு பேசலாம்.

thumb5 

ஆங்கில இலக்கியம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு படத்தைப் பார்ப்பது உங்களைப் இன்னும் படத்துடன் ஒன்றவைக்கும். இல்லாவிட்டால் விடிய விடிய ராமாயணம் பார்த்துவிட்டு, அதிகாலையில் ராமனுக்கு சீதை என்ன முறை வேணுமாம் எனக் கேட்டது போலத் தான் நிலைமை இருக்கும். கடைசியில் படத்தை பேபேன்னு பாத்துவிட்டு விக்கிபீடியாவை நோண்டவேண்டியது தான் (நம்ம அனுபவம் இல்லைங்க. நாங்க எல்லாம் எச்சக்கல ஃபேமிலியாக்கும்.)

முதல் 10 நிமிடங்களுக்கு காட்டப்படும் அந்த மழை நேரத்தில் பாரீஸின் காட்சிகளும், பின்னணியில் இசைக்கும் ஜாஸ் இசையும் மனதை கட்டிப்போடும் என்பது நிச்சயம். கிட்டத்தட்ட பாரீஸ் டூர் போய்விட்டு வந்தது போன்ற ஒரு ஃபீலிங். அடக்கமான அளவான நடிப்பு ஓவன் வில்சனிடம் இருந்து …  கடைசியாக எப்போதோ சன் டீவியில் The Shanghai Knights படத்தை தமிழில் போட்டபோது பார்த்த முகம். இன்னும் அப்படியே தான் மனுஷன் இருக்கார். அட்ரியானாவாக வரும் அந்தப் பெண்ணும், இனெஸாக வரும் ஃபிகரும் (எங்கேயோ பார்த்த முகம்) நல்ல அழகு. இந்த முறை ஆஸ்காரிலும் சிறந்த படம், திரைக்கதை, டைரக்ஷன் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போட்டியிட்டது. ஆனால் விருது ஒரிஜினல் திரைக்கதைக்காக, வுடி அலனுக்கு மட்டுமே கிடைத்தது ( Congratulations Woody !!! ).

எந்த விதமான பரபரப்போ, அதிரடி காட்சிகளோ, நகம் Nail-biting சீன்களே இல்லாமல் நகரும் ஒரு காவியம். ஒன்றரை மணி நேரம் போரடிக்காமல் நிச்சயம் ஒரு ப்ளெஸன்டான திரைப்பட அனுபவத்தை கொடுக்கும் …. நீங்கள் ஆக்சன் டமாக்கா பைத்தியமாக இல்லாமல் இருந்தால்.

 

My Rating – 81/100


படத்தின் ட்ரெயிலர்

ட்ரெயிலரே பாரீஸின் அழகை சொல்கிறதே !!!

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்க்க இங்கே க்ளிக்குங்க

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி ட்ரெயிலர்

ஆக்சன் பைத்தியம் என்ற வகையில் மிக மிக மிக எதிர்ப்பார்ப்புள்ள, எதிர்வரும் மே மாதம் வரவுள்ள அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாவது புதிய ட்ரெயிலர் (பழசு கீழே Upcoming Movie Trailers பகுதியில் இருக்கு). ட்ரெயிலரே ஒரு மினி-ஆக்ஷன் படம் பார்த்தது போன்ற ஒரு ஃபீலிங்கைத் தருகிறது. எப்படியாவது ஒரு நம் நாட்டு தியேட்டர்ல போட்டாங்கண்ணா போய் பார்த்துவிட வேண்டும். இந்த வருட ஃபுல்-ஆக்சன் படம்னு சொல்லக்கூடிய படம் இது தான். இவங்க சண்டை போடுவது யார்கூட என்பது தான் தெரியவில்லை. கடைசியில் வரும் அந்த, அந்த, அந்த ( அது என்னன்னே சொல்லத் தெரியல. ரோபோவா, ஏலியனா? ) அது மட்டும் தான் எனக்குத் தெரிந்த இப்போதைய க்ளு. தெரிஞ்சா சொல்லுங்க.
 

We are not a team. We are a timebomb !!!!

 

தொந்தரவு இல்லாவிட்டால் ஒரு கீழே க்ளிக்கி ஒரு ஓட்டு போட்டுவிட்டு போகலாமே?

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

21 comments:

  1. நானு இந்த ஆக்சன் டமாக்கா பைத்தியம் இல்லைங்கறதால இந்த படத்தை பார்க்க போறேன்!
    (இப்பெல்லாம் எந்த படத்தை பார்க்க போனாலும் Marian Cotillardடோட முகம் அடிக்கடி க்ராஸ் ஆவுதே!)

    * அனேகமா அது ஒரு ரொபேலியனா இருக்கலாம்... கேப்டன் அமெரிக்கா, பச்சை மனிதன், இரும்பு மனிதன், கஜவீரன் தோர் இவனுங்களையே எனக்கு சுத்தமா புடிக்காது!
    (நாலு பேரும் சேர்ந்து நடிக்குற படத்துக்கு என்ன பெயர் வைப்பாங்களோ!!)

    ReplyDelete
  2. வழக்கம் போல தங்களது பாணியில் விமர்சனம் அருமை..

    // அவரோட பெஸ்ட்டு எல்லாம் ரொம்பப் பழையப் படங்களாமே? //
    ஆம் நண்பரே..நான் கூட அப்படிதான் கேள்விப்பட்டு இரண்டு படங்கள் டவுன்லோடு போட்டு வச்சிருக்கேன்..ஆனால், எது பெஸ்ட் அப்படினு தெரில..

    வர வர பதிவுகளில் சுவாரஸ்யங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன..படிப்பதற்கு சுலபமாக எளிமையாக உள்ளது.நடு நடுவே சில ஜாலிரக வரிகளை போட்டு மேலும் பல பிளஸ் மார்க்குகளை அள்ளுரீங்க.வாழ்த்துக்களோடு நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. @JZ

    எனக்கும் தமிழில் டப் பண்ணினா என்ன பெயர் போடுவானுங்கன்னு யோசனையா இருக்கு.

    ReplyDelete
  4. @Kumaran

    பார்த்துவிட்டு கண்டிப்பா விமர்சனம் எழுதுங்க. உங்க விமர்சனம் வாசி்த்தப்பறம் தான் நான் டவுன்லோட் செய்வது பற்றி யோசிக்கணும்.

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம். நானும் படம் டவுன்லோட் செய்து உள்ளேன். படம் பார்த்து விட்டு என் கருத்தை சொல்றேன்.
    //இது ஃபிக்சன் இல்லை. பேண்டசி//
    அப்ப பேண்டசி படத்துக்கு லாஜிக் மிஸ்டேக் எல்லாம் பார்க்க கூடாது.
    ஒரு டவுட் அவதார் ஃபிக்சன் படமா பேண்டசி படமா.. ??? # சும்மா தான்

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம் , வாழ்த்துக்கள் ! படத்தை டவுன்லோட் செய்து பார்க்கிறேன் ...

    ReplyDelete
  7. நாங்கலாம் பர பர சினிமா பைத்தியங்கள் தலைவா...நமக்கு இந்த படமெல்லாம் ஒத்துவராது.

    ReplyDelete
  8. Good review. Will ask for this DVD & try to see this film

    ReplyDelete
  9. விமர்சனம் வாசிப்பதாய் இல்லை! இந்தப்படம் பார்க்கவேண்டும் என்ற லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறது. பார்த்துவிட்டு வாசிக்கிறேன்.

    நீங்கள் பார்க்கும் திரைப்படங்களின் varieties ஆச்சரியப்படுத்துது...

    ReplyDelete
  10. @ராஜ்

    குட் க்வெஸ்டின்... பேண்டஸி என்பதும் ஒருவகை ஃபிக்ஷன் தான். ஆனால் ஃபிக்சன் என்பது என்றைக்காவது சாத்தியப்படக் கூடிய ஒன்று. ஃபேண்டஸி என்பது மந்திரங்கள், ட்ராகன்கள் போன்ற நம்பமுடியாத விடயங்களைப் பற்றியது.

    அவதார் ஃபேண்டஸிக்குள் வராதென்பது என் கருத்து. ஏனெனில் மனிதன் என்றைக்காவது இன்னொரு கிரகத்திற்கு செல்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். அங்கு எப்படி இருக்குமோ யார் கண்டா?

    ReplyDelete
  11. @Lucky Limat லக்கி லிமட்

    கமெண்ட்டுக்கு நன்றி லிமட். சீக்கிரமே பரபர ஆக்சன் ஒன்று பத்தி எழுதப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. @மோகன் குமார்

    வருகைக்கு மிகவும் நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  13. @ஜேகே

    கண்டிப்பா பார்த்துவிட்டு உங்கள் பார்வையையும் சொல்லுங்க.

    ReplyDelete
  14. ரொம்ப பிடிச்ச படம் எப்பவுமே வூட்டி ஆலம் ஸ்பெஷல் தான்.., ஓவன் வில்சன் லூயி புனுவேல் , டாலி , மேட் ரே ஆகிய கேரக்டர்களுடன் பேசுவது ரொம்ப பிடித்த பகுதி.., ஒரு தடவ புனுவேலிடம் “the discreet charm of the bourgeoisie” படத்துக்கு ஐடியா குடுத்துட்டு போறது ரசிக்கும் படி இருக்கும்..,

    ReplyDelete
  15. @...αηαη∂....

    இந்தப்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஆனந்த்.

    நீங்கள் கூறும் அந்த இடம் செம. ஓவன் ஐடியா கொடுக்கும்போது லுயி குழம்பும் அந்த விதமும் அருமை.

    கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் படம்.. விமர்சனம் நல்லாயிருக்கு..

    ReplyDelete
  17. லாஜிக் மிஸ்டேக் பாக்க கூடாதுன்னு நீங்க சொல்லும்போது..இதே தமிழ் படங்களை நம்மாளுங்க விமர்சனங்கர் பேர்ல லாஜிக் ஓட்டைக்ள்னு ஒரு லிஸ்டே கொடுக்கராங்களே..ஏன் வெள்ளயா இருக்குரவன் என்ன சொன்னாலும் அது அழகுன்னு நெனைக்கிராங்களோ...சாரிபா விமர்சனம் நல்ல எளிய நடயில் இருக்கு...சின்ன டவுட்டு அதான் இந்த கமண்ட் ஹெஹெ!

    ReplyDelete
  18. @விக்கியுலகம்

    நான் சொன்னது போல இது ஃபேண்டஸி படம். அதாவது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்கள் பற்றிய வகை. ஆனால் தமிழில் அப்படி படங்களா எடுக்குறானுங்க? என்னைப் பொறுத்தவரை மாம்ஸ் ... எல்லா தமிழ்ப் படங்களிலும் லாஜிக் மிஸ்டேக்ஸ் பார்க்கலாம். ஏன்னா எல்லாமே வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை பேஸ் பண்ணித் தான் படமா எடுக்குறாங்க. தப்பிருந்தா திருத்துங்க.

    ReplyDelete
  19. விமர்சனம் நக்கலா..... சுவாரிசயமா நல்ல இருக்கு, வித்தியாசமான திரைப்படங்கள் தொடர்ந்து எழுதிட்டு வரிங்க சூப்பர்.

    ReplyDelete
  20. விமர்சனம் நக்கலா..... சுவாரிசயமா நல்ல இருக்கு, வித்தியாசமான திரைப்படங்கள் தொடர்ந்து எழுதிட்டு வரிங்க சூப்பர்.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...