நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Help [2011]

folder
இருக்கிற வேலையில ஒரு நல்ல ஆக்சன் படம் பார்க்கவே நேரமில்லை … இவன் என்னாடான்னா கண்ண கசக்கற பொம்மனாட்டிக படமா பார்த்து கொல்றானேன்னு நீங்க திட்டிகிட்டே வர்றது புரியுது பாஸ். போஸ்டரையும் கதையையும் பாத்துட்டு எஸ் ஆகிடுவோம்ன்னு நினைச்சுட்டு போனீங்கன்னா 2011ம் வருடத்தின் ஒரு நல்ல படத்தை தவறவிடுறீங்க. பீ கேர்ஃபுல் …
 
thumb5

இப்போ உள்ள பொருளாதாரத்திற்கு புருஷன் பொண்டாட்டி இருவரும் வேலைக்குப் போகாவிட்டால் கட்டுப்படி ஆகாது … உண்மை. ஆனால் பெரிய பெரிய போஸ்ட்டுகளில், உள்ள பணக்காரர்களின் பொண்டாட்டிங்க பண்ற அலப்பற இருக்கே … ஊர்ல சந்து பொந்துல இருக்கிற மாதர் சங்கங்கள் அனைத்திலும் மெம்பர் ஆகிக்கொள்வது. பின்னாடி ஒவ்வொரு நாளும் மீட்டிங், கெட் டுகெதர், சாரிடி ஃபங்க்சன் அப்படின்னு சொல்லிக் கொண்டு போய் ஊர்வம்பை அளந்துக் கொண்டு இருப்பது. இதுல இன்னொரு வகை கோஷ்டியும் இருக்கு. ஆன்மீகம் … அங்கங்கே புதுசு புதுசா முளைக்கும் சாமியார்களை எல்லாருக்கும் வணக்கம் வைத்தே நாட்களை ஓட்டுவது. பகவானை நம்புங்கள் … உங்களுக்கு என்ன வேண்டுமோ பகவானைக் கேளுங்கள். அவர் கைவிடமாட்டார் அப்படின்னு மனுஷி பெரிய உபதேசம் பண்ணிக் கொண்டு இருக்கும் வேளையில் புருஷன் வீட்டில் டீக்கு வழியில்லாமல் சரவண பவனில் டீ க்ளாஸை நக்கிக் கொண்டிருப்பார்.
 
இப்படி இரண்டு பேரும் ஊர் மேயும் வீடுகளில் புள்ள குட்டிகளை குளிப்பாட்டி சாப்பாடு கொடுப்பது? ஹவுஸ் மெயிட் …. மேலே சொன்னது போன்ற வீடுகளில் பொதுவான ஒரு சொல் இது … குறிப்பா நகர்ப்புறங்களில். கனவுத்தேசம் எனப்படும் The United States of Americaவின் 1960களின் காலப்பகுதியில் இருந்த ஹவுஸ்மெயிட்களின் அனுபவங்களையும், அமெரிக்கர்களின் நிறப்பிரிவினையின் முகத்தைக் காட்டும் படமே The Help.
 
thumb9

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிகிரியை முடித்துவிட்டு, ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்று எண்ணியபடி வீட்டிற்குத் திரும்பும் ஸ்கீட்டரிற்கு ஒரு அதிர்ச்சி. அவளை சிறுவயதில் இருந்து வளர்த்த கொன்ஸ்டான்டின் எனப்படும் ஹவுஸ்மெயிட் தற்பொழுது வீட்டில் இல்லை. அவள் வேலையை விட்டு அவளின் மகளோடு வாழச் சென்றுவிட்டாள் என அவளின் அம்மா சமாதானப்படுத்தினாலும், ஸ்கீட்டரின் மனது அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் திருமணமான தன் சகதோழிகளோடு நேரத்தைக் கழிக்கும் ஸ்கீட்டர், அவர்களது வீட்டில் வேலை செய்யும் கறுப்பின பெண்கள் மேல் அவளின் நண்பிகள் கொண்டுள்ள அபிப்ராயங்கள் பற்றியும், அவர்கள் காட்டும் நிறப்பிரிவினை பற்றியும் அவர்களை நடத்தும் விதம் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். சிறுவயதில் ஒரு கறுப்பினப் பெண்ணால் வளர்க்கப்பட்ட ஸ்கீட்டருக்கு, இப்பிரிவினை கோபத்தை வரவழைக்கிறது.
 
ஏபிலின் மற்றும் மின்னி ஸ்கீட்டரின் நண்பர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள். ஸ்கீட்டருக்கு அந்நகரின் லோக்கல் பத்திரிகையில் வீட்டு நிர்வாகம், சமையல் போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வேலை கிடைக்க, அதற்கு ஏபிலின்னின் உதவியை நாடுகிறாள். ஹில்லி எனப்படும் ஸ்கீட்டரின் நண்பிகளில் ஒருத்தி, கறுப்பினப் பெண்களும் வெள்ளையர்களும் ஒரு டாய்லெட்டைப் பயன்படுத்தும்போது தொற்றுநோய்கள் பரவும் எனக் கூறி வெள்ளையர்களின் வீட்டு டாய்லெட்டை கறுப்பர்கள் உபயோகிக்க அனுமதி தரக்கூடாதென்றும், அவர்களுக்கு தனியாக வீட்டுக்கு வெளியே டாய்லெட் கொடுக்கவேண்டும் எனவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறாள். ஒருமுறை ஹில்லியின் வீட்டில் வேலை செய்யும் மின்னி கடும் மழையால் வெளியே செல்ல முடியாமல், ஹில்லியின் வீட்டு டாய்லெட்டைப் பயன்படுத்தும்போது அகப்பட்டு வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.
 
thumb2 
இது போன்ற கொடுமைகளைக் கேள்விப்படும் ஸ்கீட்டர், நியு-யோர்க்கில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்றிற்கு இப்பணிப்பெண்களின் அனுபவங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் எழுதி அனுப்ப கேட்கிறாள். உண்மை அனுபவங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம் என பதில் கிடைக்க, அவளின் நண்பிகளின் வீட்டில் வேலை செய்யும் பெண்களை நாடுகிறாள். இதற்கு முதலில் உதவ முன்வருவது ஏபிலின்னும் மின்னியும். வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால், ஏபிலின்னின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பெயர்களையும், ஊரின் பெயரையும் மாற்றி எழுதுகிறார்கள்.

சமஉரிமை பற்றிப் பேசினாலே குற்றம் எனப்படும் காலக்கட்டத்தில் இவர்கள் எழுதுவது வெளியே  தெரிய ஏற்படும் விளைவுகள் தான் மீதிக்கதை.
 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ஒரு அழகான சமூகப்பிரச்சினை பற்றிய படம் காமெடியோடு வருவது மிகவும் அபூர்வம். அப்படியே படத்தை எடுத்தாலும் காமெடி அதிகமாகி சொல்லவந்த சீரியஸான விஷயத்தை சொதப்பிவிடுவார்கள். த ஹெல்ப் கையில் எடுத்திருக்கும் விடயம் 1960களில் நடந்தது எனச் சொல்லப்படுகிறது என்றாலும் இன்றும் இப்படத்தில் வருவது போன்ற நிறைய சம்பவங்களை நாம் நேரில் பார்த்துக் கொண்டுத் தான் இருக்கிறோம். அமெரிக்காக்காரன் தோலின் நிறத்தைப் பார்க்கிறான் …. இங்கு நாம் அனைவரும் நிறத்தில் ஒன்றாக இருந்தாலும், ஜாதியையும் மதத்தையும் பார்த்து வீணாப் போகிறோம்.

த ஹெல்ப்பின் மெயின் கதை பல கிளைக்கதைகளுடன் தொடர்புடையது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கைக்கான கதையும் ஃப்ளாஷ்பேக்கிலும், இடையில் வரும் டயலாக்குகளில் விவரிக்கும்போதும் எமக்கு தெரியவருகின்றன. திரைக்கதையை எழுதி, படத்தை இயக்கிவர் டேட் டெயிலர். நிறைய கிளைக்கதைகள் இருந்தாலும் நல்ல அழகான வசனங்களுடன் குழப்பமில்லாமல் தர மிகவும் பாடுபட்டிருக்கிறார் …. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
 
thumb1 
படம் மிக மெதுவாக ஆரம்பிக்கிறது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் …. வெயிட் வெயிட். இந்தப் படத்தில் வேகம் என்ற வார்த்தையே கிடையாது … இன்ட்ரஸ்டிங்கா ஆனால் (கடைசிவரை) மெதுவாக படம் நகர்கிறது. ஆங்காங்கே காமெடி தூவப்பட்டிருந்தாலும், சென்டிமெண்ட் தான் இங்கே மெயின் அப்போ இது கண்டிப்பா பெண்களுக்கான படம்தான் இல்ல?. சுருக்கமாக சொன்னால் த ஹெல்ப் காமெடி சென்டிமெண்ட் கலந்த ஒரு அழகிய திரை அனுபவம்.

படத்தில் டெக்னிக்கல் விடயங்கள், ஸ்டைலிஷ் மேக்கிங் என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் இரண்டரை மணி நேரம் ஸ்ஸ்ஸ்ஸ் … யப்பா படத்தை எங்கும் தொய்வில்லாமல் கொண்டு செல்வது பிரமாதமான நடிப்பு தான். நடிப்பிற்கு நான் மார்க் போடுவதானால் 99/100. (நூறு மார்க் பவர்ஸ்டார் ஒருவருக்கு மட்டுமே தரவேண்டும் என பவர்ஸ்டார் தொண்டர் சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது). ஒருவரையும் நடிப்பு கம்மி எனக் குறை சொல்லமுடியாது. மின்னியின் கதாபாத்திரத்தில் நடித்த ஒக்டேவியா ஸ்பென்ஸர், மற்றும் சீலியா ஃபுட் ஆக வரும் ஜெஸிக்காவின் அந்த இன்னெசன்ட் கலந்த நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் காமெடி முழுவதையும் ஒக்டேவியா பாரமெடுத்திருக்கிறார். அவரின் ஏற்றஇறக்கமுள்ள அக்சென்ட் இதற்கு மிகப் பெரிய பலம். அதிலும் ஹில்லி வேலையை விட்டு நீக்கியதும் மன்னிப்புக் கேட்டு சாக்லேட் பை ஒன்று செய்து கொடுத்துவிட்டு Eat-My-**பீப் (censored)** எனச் சொல்லும் இடம் அமர்க்களம். ஒக்டேவியாவின் நடிப்பின் திறமைக்கு, இவருக்கு ஆஸ்காரில் கிடைத்த சிறந்த துணைநடிகை விருதும் அத்தருணத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக ஏகோபித்த மனதுடன் கொடுத்த Standing Ovationஉம் மட்டும் போதும்.
 
thumb11 
ஆரம்பத்திலிருந்தே சென்டிமெண்ட் படம் எனக் கேள்விப்பட்டிருந்ததால் அழுதுவிடுவேனோ எனப் பயந்து பயந்தே படத்தைப் பார்த்தேன். நல்லவேளை …. ஒன்னும் ஆகல. ஆனால் படத்தின் கடைசித்தருணங்கள் … வெரி இமோஷனல். நான் கொஞ்சம் சென்ஸிடிவ்வான ஆளு. படத்துடன் சீக்கிரம் ஒன்றிவிடுவேன். எனக்கும் கொஞ்சம் ஓரிரு துளிகள் எட்டிப்பார்த்தது. எதற்கும் ஒரு ஹேங்கர்சீஃபை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு படத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய அனைத்து விடயங்களும் இப்படத்தில் இருக்கின்றது. இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் இன்றே டவுன்லோட் பண்ணியோ, அல்லது ஆன்லைனிலோ பார்த்துவிடுங்கள். மிஸ் பண்ணாதீங்க. பண்ணினால் …. உங்களுக்கு கும்பீபாகம் நிச்சயம்.



My Rating – 92/100


படத்தின் ட்ரெயிலர்


 
 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


மை கார்னர் - 

இப்பதிவு (என் மற்ற விமர்சனங்களும் சேர்த்துத் தான்) மிக நீளமாக இருப்பது போன்றோ, அல்லது கொஞ்சம் (அடப்பாவி … கொஞ்சமா??? )அறுவை/மொக்கையாக இருந்தாலோ தயவு பின்னூட்டத்தில் சொல்லுங்க. அட்லீஸ்ட் அனானியாக சரி. என் எழுத்துநடை இன்னும் செப்பமாக்க, விமர்சன நடையை சரியாக மாற்ற இது போன்ற கருத்துக்கள் மிகவும் முக்கியம்.

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்
ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

21 comments:

  1. 25வது பதிவெழுதி வெள்ளி விழாக்காணும் ஹாலிவுட்ரசிகனுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்!
    விமர்சனம் நன்று. ஆஸ்கரில் இது போடப்பட்டிருந்த போதும், மற்ற படங்கள் அளவுக்கு இதை பார்க்க வேண்டுமென்ற உந்துதல் வரவில்லை.. இப்போ நீங்க 92 கொடுத்ததை பார்த்ததுக்கப்புறம் பார்த்தே ஆகனும்-ங்கற முடிவுக்கு வந்துட்டேன். நன்றி!

    (* நிஜமாக, இது Hugoவை விட நல்லா இருக்குமா? அதுக்கு 86 மார்க்தான் போட்டிருந்தீங்க??)

    ReplyDelete
  2. @JZ

    ஹ்யுகோவை விட எனக்கு இப்படம் கொஞ்சம் அதிகம் பிடித்திருந்தது உண்மை தான். யதார்த்தமான அழகான கதைகள் மேல் எனக்கு எப்பவும் ஒரு அன்பு உண்டு. அதனால் தான் இதற்கு கொஞ்சம் மார்க் அதிகம். ஆனால் உங்கள் பார்வை மாறுபடலாம் இல்லையா?

    ReplyDelete
  3. @JZ

    வெள்ளிவிழா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க. நான் கூட கவனிக்கல ... ஹி ஹி

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே,

    // மிஸ் பண்ணாதீங்க. பண்ணினால் …. உங்களுக்கு கும்பீபாகம் நிச்சயம்.//
    ஐயோ..இவ்வளவு பெரீரீய தண்டன..உடம்பு கல்டுரூம் போலயே..படத்தை உடனே டவுன்லோடு செய்யுறேன்.ஆனால், பார்க்கதான் கொஞ்சம் லேட் ஆகும்.கும்பி நோ தம்பி.

    போக போக விமர்சனத்தில் அழகும், எளிமையும், வசீகரிக்கக்கூடிய வண்ணம் வரிகளும் அருமையான எழுத்து நடை பாணியில் கூடிக்கொண்டே போகிறது..ரொம்ப நன்று.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நானும் டவுன்லோட் பண்ணி ரொம்ப நாள் பாக்காமையே இருந்தேன்.. ஆஸ்கர் படமெல்லாம் பாக்கணும்ன்னு தான் பாத்தேன் அப்போ தான் தெரிஞ்சது எவ்ளோ மிஸ் பண்ணி இருக்கேன்னு..

    ReplyDelete
  6. //-**பீப் // இதுக்கு சென்சார் பண்ணாமையே இருந்து இருக்கலாம்

    ReplyDelete
  7. விமர்சனத்தில் அசத்தறீங்களே....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. @சமுத்ரா

    அட ... என் தளத்தின் பக்கம் எட்டிப் பார்த்தமைக்கும் கருத்திட்டமைக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  9. @...αηαη∂....

    தெரிஞ்சுருச்சா ... எல்லாருக்கும் தெரிந்துருச்சா? ஹி ஹி ...

    ReplyDelete
  10. @...αηαη∂....

    நானும் The Artist, The Warhorse படங்களை இன்னும் பார்க்கவில்லை. ஒரிஜினல் ப்ரிண்ட் வர்றவரை தான் வெயிட்டிங்.

    ReplyDelete
  11. @Kumaran

    சரி சரி ... லேட்டாகினா, ஆறின எண்ணெயில போட்டு வதக்கலாம். வருகைக்கு நன்றி குமரன்.

    ReplyDelete
  12. நகைச்சுவையாக படத்திற்க்கு விமர்சனம் எழுதி உள்ளது ரசிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அன்பான 'ஹாலிவுட் ரசிகன்' அவர்கட்கு,

    நான், இன்னமும் படம் பார்க்கவில்லை!

    எனவே, அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

    நிற்க! தாங்கள், தங்களது விமரிசனத்தைப் பற்றிய விமரிசனைத்தை விரும்பிக் கேட்டதால், கீழ்க்கண்ட வரிகள். அந்தப் பக்கம் நீ எப்படி எப்படி என 'வைவதாக' இருப்பின், வெரி சாரி.. அம்பேல்.

    இனி:

    உங்களது விமரிசனம், படத்தின் பரிமாணத்தை போதுமான அளவுக்கு மேலாகவே கோடிட்டுக் காட்டுகிறது ; படம் பார் என வற்புறுத்துகிறது!

    ஒரு நல்ல விமரிசனத்தின் அளவும், தேவையும் இந்த அளவிற்குப் விவரிக்க அனுமதிப்பதில்லை!

    'நடை' பற்றி சொல்ல வேண்டுமெனில், இவ்வளவு சொற்கள் தேவையில்லை!

    விமரிசகர் என்பவர் 'கான்ஷியஸோடு', சொந்த விருப்பங்களைப்
    புறந்தள்ளிவிட்டு, படத்தினை ஊன்றிப் பார்ப்பவர். ஒன்றிவிடுபவர் அல்ல!

    உதாரணமாக: //ஆரம்பத்திலிருந்தே சென்டிமெண்ட் படம் எனக் கேள்விப்பட்டிருந்ததால் அழுதுவிடுவேனோ எனப் பயந்து பயந்தே படத்தைப் பார்த்தேன். நல்லவேளை …. ஒன்னும் ஆகல. ஆனால் படத்தின் கடைசித்தருணங்கள் … வெரி இமோஷனல். நான் கொஞ்சம் சென்ஸிடிவ்வான ஆளு. படத்துடன் சீக்கிரம் ஒன்றிவிடுவேன். எனக்கும் கொஞ்சம் ஓரிரு துளிகள் எட்டிப்பார்த்தது. எதற்கும் ஒரு ஹேங்கர்சீஃபை கையில் வைத்துக் கொள்ளுங்கள்// என்ற வரிகளில் எவற்றைச் சீர்படுத்தாலாம், எவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்பது உங்களுக்கே தெரியும் தானே?.

    எவ்வாறாயினும் சிறந்த படங்களை அடையாளம் காட்டுவது என்பது, சிரமமான, பல மணித்தியானங்களை உண்டுவிடும் வேலை!

    அத்தகைய பணியைனை மேற்கொள்ளுவதற்குத் தேவையான் திறமையும் தகுதியும் தங்களுக்கு உள்ளது! பாராட்டுக்கள்!

    தாங்கள் ஸ்ரீலங்காவா? சொற்கள் தேர்வு 'சென்னை' போலவே உள்ளது!

    ReplyDelete
  14. @Balram-Cuddalore

    தங்கள் கருத்துக்களுக்கு மிக மிக மிக ... நன்றி ஐயா.

    எதிர்வரும் பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக என் எழுத்தை சரி செய்ய முயற்சிக்கிறேன். மீண்டும் வந்து தங்கள் கருத்தை கூற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. @Balram-Cuddalore

    // விமரிசகர் என்பவர் 'கான்ஷியஸோடு', சொந்த விருப்பங்களைப்
    புறந்தள்ளிவிட்டு, படத்தினை ஊன்றிப் பார்ப்பவர். ஒன்றிவிடுபவர் அல்ல! //

    இதைத் தான் என்னால் இன்னும் சரிப்படுத்த முடியவில்லை.

    அடுத்த முறை சிரமமில்லையெனில் தவிர்த்திருக்கலாம் என நினைக்கும் வரிகளை கூறினால் அதுபோன்றவற்றை எதிர்காலத்தில் தவிர்த்துவிடுவேன்.

    நான் ஸ்ரீலங்கா தான். ஆனால் வாசிக்கும் எழுத்துக்கள் எல்லாம் சென்னையை சார்ந்து இருப்பதால், ஒட்டிக்கொண்டது போல.

    ReplyDelete
  16. படம் பார்க்காமல் கருத்து சொல்ல மனமில்லை. விமர்சனம் அருமை

    ReplyDelete
  17. ஒரு படத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய அனைத்து விடயங்களும் இப்படத்தில் இருக்கின்றது.
    ????? இது கொஞ்சம் வேறா மாதிரி தெரியுது!!!!!! சும்மா பாஸ்......

    விமர்சனம் எப்பயும் போல் அருமை.

    ReplyDelete
  18. @MuratuSingam

    வாங்க சிங்கம். ரொம்ப நாளா பிஸியாகிட்டிங்க போல. சீக்கிரம் ஒரு நல்ல படமா அறிமுகப்படுத்துங்க.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...