நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Moneyball [2011]

folder
ஃபர்ஸ்ட் சுயபுராணம் -
இந்த வாரம் முழுவதும் “கண்டிப்பாக பார்க்கிறேன், டவுன்லோடுகிறேன்” அப்படின்னு சொன்ன சில ஹாலிவுட் படங்களையும், தவறவிட்ட சில நல்ல தமிழ்ப் படங்களையும் பார்த்துவிடுவது என்ற முடிவில் ஓட்டிக்கொண்டு இருந்தேன். அனேகமாக அடுத்த வாரமும் இது தொடரும். (ஏன்னா இந்த ஹாலிவுட்ரசிகன் சொன்ன வாக்கை காப்பாற்றுவான். ஹி .. ஹி ... பார்த்தவற்றை கீழே அண்மையில் பார்த்த படங்கள் பகுதியில் சொல்கிறேன்) மேலும் கருந்தேளார் பரிந்துரைத்த ஷெர்லாக் ஹோம்ஸ் நாடகத்தையும் தொடர்ந்து பார்த்து வருவதால் பதிவுகள் எழுத நேரம் பெரிதாக கைகூடி வரவில்லை. சீக்கிரம் கொஞ்சம் அதிகமாக எழுதப் பார்க்கிறேன்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இனி இன்றைய படம் -

ஸ்போர்ட்ஸ் பற்றிய கதை, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர், ப்ராட் பிட், ஓக்லாண்ட்(???) ஏஸின் 2002ம் வருட 20 தொடர் வெற்றிக்குப் பின் உள்ள உண்மைக் கதை என பல எதிர்ப்பார்ப்புகளுடன் பார்த்த படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் கொஞ்சம் நிச்சயமாக என்றுதான் சொல்லவேண்டும். ( இந்த ஸ்டைல் எங்கேயோ பார்த்த மாதிரி இல்ல? ஹி ஹி ) 

ஃபுட்போல் அளவிற்கு எனக்கு பேஸ்போல் பற்றிப் பெரிய அளவில் ஞானம் இல்லாததால் 100 வீதம் படம் என்னுடன் ஒட்டவில்லை. நிறைய சொற்கள் படம் பார்க்கும் போது எனக்கு புரியவில்லை [Playoffs, Post-Season, First Base, Getting on Base …. ] . ஆனாலும் யதார்த்தமான, உண்மைக் கதையாலும், ப்ராட் பிட்டின் நடிப்பாலும் படம் பிடித்திருந்தது. ஏதோ …  என்னால் முடிந்தவரை, புரிந்தவரை  படத்தைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை

படம் நகர்வது பில்லி பீன் எனும் ஓக்லாண்ட் அத்லெடிக்ஸின் ஜெனரல் மனேஜரை சுற்றி. சிறுவயதில் பேஸ்போலில் ஆல்ரவுண்டராக இருந்து படத்தின் ஆரம்பத்தில் 2011ம் ஆண்டின் சீசனில் நியுயோர்க் யான்கீஸிடம் தோற்றதால் கடுப்பிலும், டீமின் முக்கிய புள்ளிகள் 3 பேர் (பேரெல்லாம் எதுக்கு இப்ப? கன்டினியு ரீடிங்) கன்டிராக்ட் பீரியட் முடிந்து லீக்கின் பெரிய டீம்களுடன் ஒப்பந்தமாவதால் டென்சனிலும் ஆபிஸில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார். நல்ல ப்ளேயர்ஸ் சிலரை எடுத்துப் போடலாம் என்றால் டீம் நிர்வாகத்திடம் சல்லிக் காசு இல்லை. ஏதாவது புது முறையை இவ்வருடம் கையாளலாம் என்றால் அவரிடம் வேலை செய்யும் ஸ்கௌட்ஸ்க்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.
thumb2 
அந்த மூவரையும் ஈடு செய்வதற்காக பில்லி Cleveland Indians டீமிடம் விளையாட்டு வீரர்களை கைமாற்றச் செல்லும்போது பீடர் ப்ராண்ட் எனும் யேல் யுனிவர்ஸிட்டி பட்டதாரியின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. பீட்டரிற்கு பேஸ்பால் வீரர்களை தெரிவு செய்வதில் ஒரு வித்தியாசமான விதம் இருப்பதை தெரிந்துகொள்ளும் பில்லி மறுநாளே பீட்டரை தன்னிடம் அஸிஸ்டென்ட் மனேஜராக வேலைக்கு சேர்த்துக் கொள்கிறான்.
பீட்டர் புள்ளிவிபரவியல் (அதாங்க Statistics) முறையை பாவித்து ப்ரொஃபெஷனலாக விளையாடாததால் மற்ற டீம்களால் ஒதுக்கப்பட்ட, மிகவும் குறைந்த விலைக்கு வாங்கக் கூடிய நல்ல திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து (சேற்றில் இருக்கும் செந்தாமரைகள்) பில்லிக்கு சொல்கிறான். ஆனால் அவர்களின் திறமைகளை அவர்கள் தற்போது எவ்வாறு விளையாடுகிறார்கள் என மதிப்பிடாமல் கம்ப்யுட்டர் மூலம் அவர்களின் புள்ளிவிபரங்களை மட்டும் வைத்து மதிப்பிடுகிறான். பில்லியின் பழைய ஸ்கௌட்ஸ்க்கு இந்த புதிய முறை பிடிக்கவில்லை. அவர்கள் ப்ளேயர்ஸ் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே வாங்கவேண்டும் என சொல்கிறார்கள்.

இதுப் போதாததற்கு ஏஸின் கோச், பில்லியுடன் ஏற்படும் கண்ட்ராக்ட் பிரச்சினையால் டீமை பழைய முறையிலேயே விளையாட வைக்கிறான். டீம் தோற்க பழி பில்லி மேல் விழுகிறது.

நடப்புச் சாம்பியனான நியுயோர்க் யான்கீஸின் பட்ஜெட்டின் 1/3 பங்கு பட்ஜெட்டுடன் பில்லியும், பீட்டரும் எவ்வாறு சீசனை சமாளித்தார்கள், பின்னர் என்ன நடந்தது என்பதை கட்டாயம் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

நூறு ரன் எடுக்க, அந்த நூறு ரன்களையும் அடிக்கக் கூடிய ஸ்டார் ப்ளேயர்ஸ் தேவையில்லை. பத்து ரன்கள் அடிக்கக்கூடிய 10 பேர் போதும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
thumb5

படத்தின் கதையை மேலோட்டமாகப் பார்த்தால் அனேகமான ஸ்போர்ட்ஸ் படங்கள் போல ஒரு நோஞ்சான் டீம் கடைசியில் எப்படி சாதிக்கிறார்கள் என்பது போல இருக்கும். மெயின் கதை பழைய மேட்டர் போல தெரிந்தாலும் என்றாலும் புள்ளிவிபரங்கள், டீமைச் சுற்றி படத்தை நகர்த்தாமல் மேனேஜரை வைத்து எடுத்தது என ஒரு புதிய பரிமாணத்தில் படத்தை கொடுத்திருக்கிறார்கள். திரைக்கதை எழுதியவர் ஸ்டீவன் செய்லியன் (The Girl With Dragon Tatoo [2011], Schindler’s List). இயக்கியவர் பென்னட் மில்லர் (2005ம் ஆண்டு சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கார் விருது).

இவர்கள் தவிர படத்தின் உயிர்நாடி என்று சொல்லக்கூடியவர் ப்ராட் பிட் (மேலே ஃபோடோவில் சிரித்துக் கொண்டு இருக்கிறாரே. அவர் தான்). இவரை தெரியாதவங்க இங்கிலீஸு படம் பார்க்காதவங்க என சொல்லலாம். (Oceans சீரீஸில் வந்திருப்பார்). இவரின் நடிப்பின் வித்தியாசம் பிரமிக்கத்தக்கது. The Curious Case of Benjamin Button படத்திலும், Oceans series, Mr & Mrs. Smith படங்களிலும் இவரின் நடிப்பிற்கு உள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம். படத்தின் கரெக்டருக்கு இவர் பொருந்தாமல், அந்தக் கரெக்டர் இப்படித் தான் இருக்கும் என காட்டுவது இவரின் ஷ்பெஷாலிட்டி. படம் முழுவதும் இவர் ராஜ்ஜியம் தான். மிக அழகாக பில்லி பீன் கதாபாத்திரத்தை நடித்திருக்கிறார். தான் நம்பும் விடயத்தை  நம்பாமல் நொட்ட சொல்லிக்கொண்டு இருப்பவர்களை ஒதுக்கிவிட்டு தான் சரியென நினைப்பதை செய்து சாதிக்க நினைக்கும் வெறி, நெருங்கிப் பழகினால் விளையாட்டு வீரர்களை கைமாற்றுவது கடினம் என டீமை விட்டு ஒதுங்கியே இருப்பது என நன்றாக நடித்திருக்கிறார்.

அடுத்த பாராட்டு அவருக்கு பக்கத்தில் நிற்கும் ஜோனா ஹில்லிற்கு. Superbad படத்தில் பார்த்ததைவிட இதில் காமெடிக்கான பங்கு கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் நிறைவான நடிப்பு. ஒரு கணனி கீக் ஆக நடிக்க, பேச தனியாக ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் டியுடரிடம் ட்ரெயினிங் எடுத்தாராம். மற்றபடி படத்தில் வரும் கோச், மற்றும் விளையாட்டு வீரர்கள் தம் பாத்திரங்களை அழகாக நடித்து கொடுத்திருக்கின்றனர்.
thumb3

படத்தின் தொழில்நுட்ப விடயங்களும் நன்றாகவே இருந்தன. படத்தின் அதிகமான காட்சிகள் ஒரு பேஸ்போல் ஸ்டேடியத்தின் அடியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. பின்னணி இசை கலக்கலாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் வரும் அமைதி படத்தின் நொடிகளின் சூழலுக்கு பெரிய உதவி.

குறை என்று சொல்லப் போனால், படம் அங்கங்கே கொஞ்சம் அதிகமாக இழுக்கப்பட்டது போன்ற ஒரு ஃபீலிங். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். இடையில் வரும் ப்ராட் பிட்டிற்கும் அவரின் மகளிற்கும் இடையிலான காட்சிகள் தேவையில்லாதது போல காட்சியளித்தாலும் படத்தின் இறுதியில் பில்லியின் முடிவிற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

2012ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், ஏற்கனவே வெளிவந்த விடயங்களில் இருந்து எழுதப்பட்ட சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், Best Sound Mixing என 6 பிரிவுகளில் போட்டியிடுகிறது. கோல்டன் க்ளோப் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டாலும் தவறவிட்டுவிட்டது. Midnight in Paris (சீக்கிரம் எழுதுவேன்) தவிர மற்ற பரிந்துரைக்கப்பட்ட படங்களைப் பார்க்காததால் விருதைப் பெற எவ்வளவு சான்ஸ் இருக்கிறது என சரியாக கூற முடியவில்லை.

ஆனாலும் நேரத்தை போக்க நல்ல படம் ஒன்று தேடிக் கொண்டு இருந்தால் கட்டாயம் எடுத்துப் பாருங்கள். இரண்டு மணி நேரம் ஒதுக்கி அமைதியான மூட் உடன் பாருங்கள்.

Moneyball – 81 / 100


படத்தின் ட்ரெயிலர் :



பி.கு – யாராவது முடிந்தால் இப்பதிவு சேர்க்கப்படாத திரட்டிகளி்ல் சேர்த்துவிடுங்கப்பா. God Bless You !!!

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

  1. //மேனேஜரை வைத்து எடுத்தது என ஒரு புதிய பரிமாணத்தில்//
    கதையை வாசித்துக்கொண்டே போகும்போது Chakh De India ஞாபகம் வருகிறதே?
    சாதா கதையை எடுத்துக்கிட்டு, தரமாண படங்களை இவனுங்க மட்டும் எப்படித்தான் உருவாக்குறாங்களோ? படத்தை பார்த்துதான் புரிஞ்சுக்கனும்.. அடுத்த வாரத்துக்கு Moneyball பார்க்குறதா? Warhorse பார்க்குறதா?ங்கற கன்பியூஷன்ல இருந்தேன். சரி.. குதிரையை அப்புறமா ஓட்டுவோம்..

    *அடுத்து வரும் Midnight In Paris விமர்சனத்தை உங்கள் பாணியில் வாசிக்க வெயிட்டிங்!

    ReplyDelete
  2. @JZ
    Chak De India படம் இன்னும் பார்க்கவில்லை. ஹார்ட் டிஸ்கில் இருக்கு. சீக்கிரம் அதையும் பார்க்கணும்.

    Warhorse இதைவிட தரமான படம்னு சொன்னாங்க. நான் பார்க்கல.

    ReplyDelete
  3. @JZ

    MidNight in Paris இன்னும் எழுதவே ஆரம்பிக்கல. இன்று தான் Primer பார்க்க யோசித்திருக்கேன். அனேகமாக அடுத்த வாரம் தான் அடுத்த விமர்சனம்.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே,
    எப்படி இருக்கீங்க..நலம் அறிய ஆவல் ?
    உங்க வலை பக்கட்டு வரும் போதெல்லாம் கீழ "அடுத்து வரும் விமர்சனங்கள்" பார்ப்பேன்..அதுல கொஞ்ச நாளாகவே "மனிபோல்" இருந்தது..இப்ப வருமா அப்புறம் வருமானு காத்திருந்து ஒரு வழியா ரொம்ப சிறப்பான விமர்சனமா கொடுத்துட்டீங்க..பதிவுகள் போட வந்த மூன்று மாதங்களிலேயே இவ்வளவு அழகான எழுத்து நடை ஆச்சரியபட வைக்கிறது.தனியாக ஸ்டைலையும் கிரியட் பண்ணிட்டீங்க..குட்.

    இந்த படம் பார்க்கல நண்பரே..காரணம், கொஞ்ச நாளா பழைய படங்களா பார்த்துட்டு வாரேன்..ஆனால், ஸ்போர்ட்ஸ் படமுனா எனக்கு ஆசைகள் உண்டு.நல்ல படமுனா மிஸ் பண்ணாம பார்த்துடுவேன்..இந்த படத்தையும் பார்த்திட வேண்டியதுதான்..பட் சிறிது லேட் ஆகும்.

    தொடரட்டும் தங்கள் பணி..வாழ்த்துக்களோடு குமரன்.

    @@ ஸ்போர்ட்ஸ் படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் ஒன்றாக ஜெரி மக்கையர் படத்தை சொல்லலாம்.டோம் குரூஸ் நடித்த இந்த படத்தை பற்றி பதிவுலகத்துக்கு வந்த பொழுதில் எழுதியுள்ளேன்.@@

    Jerry Maguire (1996) - குட் மூவி

    ReplyDelete
  5. @Kumaran

    நான் நல்லாத் தான் இருக்கேன் (இப்போதைக்கு) குமரன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. படம் ரொம்ப மெதுவா போகும் போல. நான் இன்னும் பார்க்கவில்லை. உண்மைய சொல்லணும்னா இப்ப தான் கேள்வி படுறேன்.
    ஆனா இதே மாதிரி "வெண்ணிலா கபடி குழு" அப்படின்னு தமிழ்ல ஒரு படம் வந்துச்சு. ரொம்ப நல்லா இருக்கும்...
    இங்க கிரிக்கெட் மாதிரி அங்க பேஸ் பால்..எனக்கும் அத பத்தி ஐடியா இல்ல

    ReplyDelete
  7. /////யாராவது முடிந்தால் இப்பதிவு சேர்க்கப்படாத திரட்டிகளி்ல் சேர்த்துவிடுங்கப்பா. God Bless You !!!///

    எல்லா திரட்டியிலும் பதிவு இணைக்க பட்டு உள்ளது....

    .com & .in திரட்டி பிரச்சினை தீர்வுக்கு இந்த பதிவை பாருங்க....

    http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

    ReplyDelete
  8. @ராஜ்

    எனக்கு என் ப்ளாக் ஓப்பன் பண்ணும்போது .com ஆகத் தான் வருது.

    .in மூலமா வாரவங்களுக்கு தமிழ்மணம் ரேட்டிங் பண்ணும்போது ஏதாவது ப்ராப்ளம் வருமா?

    ReplyDelete
  9. @ஹாலிவுட்ரசிகன்

    ஆமா, பாஸ்
    .in முலமா வரவங்களுக்கு தமிழ்மணம் (Submit to Tamil Manam) அப்படின்னு கட்டும். Vote போட முடியாது.. உடான்ஸ் Like, Indli
    பரிந்திரை கூட பண்ண முடியாது...
    நான் குடுத்த லிங்க்ல போய் பார்தேங்கன்னா ...இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு குடுத்து இருப்பாங்க. அதன் படி செஞ்சு பாருங்க..
    .in .com எதுல ஓபன் செஞ்சாலும் Vote box, திரட்டி எல்லாம் பழைய மாதிரி காட்டும்...

    எதுக்கும் ஒரு Template backup எடுத்துக்காங்க.. பிரச்சனை வந்தா கூட சரி பண்ணிக்கலாம்...

    If you wish to open our Blog as .in

    Try http://hollywoodrasigan.blogspot.in/ncr

    to open as .com

    Try: http://hollywoodrasigan.blogspot.in/ncr

    ReplyDelete
  10. @ராஜ்

    A Small Typo:

    to open as .com

    Try: http://hollywoodrasigan.blogspot.com/ncr

    ReplyDelete
  11. நீங்கள் சொல்வதை பார்த்தால் பொழுது போகும் போலவே... நான் ஏதோ டாகுமெண்டரி படம் போல இருக்கும் என நினைத்து விட்டுவிட்டேன். ஓகே டோரரெண்டே துணை

    ReplyDelete
  12. வணக்கம் நண்பா,
    மணிபால் படம் பார்க்கவில்லை! விமர்ச்சனத்திலே படத்தின் நகர்வு பத்தி சொல்லியிருக்கிறீங்க.
    எனக்கும் இந்தப் படம் அவ்வளவாக புடிக்கலை! மிட் நைட் இன் பாரிஸ் இன்னமும் பார்க்கலை! உங்களின் விமர்சனத்தின் கீழுள்ள டிஸ்கி பார்க்கும் போது தான் நினைவிற்கு வந்திருக்கு. பார்க்க ட்ரை பண்றேன்.

    ReplyDelete
  13. நீங்க இவ்ளோ சூப்பரா எழுதறீங்க... இவ்ளோ படம் பார்த்திருக்கீங்க.. gud!:-)

    ReplyDelete
  14. இவ்வாரம் ரிலீஸ் ஆகிறது. பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete
  15. நான் இன்னும் இந்த திரைப்படம் பார்க்கவில்லை ,இருந்தாலும் உங்க விமர்சனம் அழகு :-)

    ReplyDelete
  16. @ravi shankar j

    தவறவிடக்கூடாத அருமையான படம் என்று சொல்வதற்கில்லை. நல்ல நடிப்பிற்காக பார்க்கலாம். நேரமிருந்தால் ஒதுக்கி அமைதியாகப் பாருங்கள்.

    ReplyDelete
  17. Good show by Brad pitt, thanks for ur review

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...