நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Big Bang Theory [2007-Present]– காமெடி தொலைக்காட்சி சீரீஸ்

folder

 

சென்ற தொலைக்காட்சித் தொடர் பதிவில் Dexter எனும் சீரியஸான சீரியல் கில்லர் நாடகம்  ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். அதான் இதோ இந்தமுறை கொஞ்சம் ரிலாக்ஸ்டாக சிரித்து வயிறு வலிக்க ஒரு சூப்பரான காமெடி நாடகம்.

Sitcom ன்னு நாடகங்களில் ஒரு வகை உண்டு.  ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பவங்களுக்கு இந்த சொல் மிகவும் பரிச்சயமாக இருக்கும். விளக்கமா சொல்லனும்னா Situation Comedy. மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை உருப்படவிடாமல் கட்டிவைத்திருக்கும் ஒரு விடயம். பிரமாண்டமான செட், அனிமேஷன், லொகேஷன்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, சினிமாட்டோகிராஃபி ன்னு நாம ஒரு திரையில் எதிர்ப்பார்க்கும் ஒரு விடயங்களும் இல்லாமல் ஒரு செட்டிற்குள் டைமிங்கான வார்த்தைகளை மட்டும் நம்பி பண்ணும் காமெடி. 

இன்னக்கி பார்க்கப்போறதும் இந்த மாதிரி ஒரு சிட்காம் தான். ஓகே …  ஃபாலோ மீ.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

fanart


ஏதோவொரு டாக்குடர் (அதாங்க விசர் … அடச்சீ விசயி) படம் ஒன்னுல ஒரு வசனம் வரும் (ஐயா தமிழ்ப்படங்களில் கொஞ்சம் வீக்கு). ஒரு பொண்ணு, 5 பையன் … ஒரு ரூம்ல விட்டா என்ன ஆகும்? அதே கதைதான் தான் இங்கும். பட் ஒரு சின்ன சேஞ்ச். 4 அம்மாஞ்சி பையன்களிடம் ஒரு ஃபிகரு மாட்டிக்கிட்டா என்ன பண்ணும்?

அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்டத்தில் பசடீனா எனும் நகரிலுள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கிறாங்க இரு சயின்டிஸ்ட்ஸ். டாக்டர் ஷெல்டன் கூப்பர் மற்றும் லெனர்ட் ஹொஃப்ஸ்டேடர். அவங்களுக்கு இரண்டு ஃப்ரெண்ட்ஸ் ஹௌவர்ட் வோலோவிட்ஸ் மற்றும் ராஜேஷ் கூத்ரபாலி. பொதுவாக படிப்பு கூடினவங்க பழக்கவழக்கம் போலத் தான் இவங்களின் பழக்கங்களும். கணக்கு போடுவது, கேம் விளையாடுவது, Star Trek படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது, காமிக் புத்தகங்களை தவறவிடாமல் வாசிப்பது என கீக்கி, நெர்டியான பழக்கங்கள். சுருக்கமாச் சொன்னா “கிணற்றுத் தவளைகள்”. சயின்ஸில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கக்கூடிய இவங்களின் சமூகத்திறனிற்கான மார்க் ஜீரோ.

இவங்களின் அபார்ட்மெண்ட்டுக்கு எதிர் ஃப்ளாட்டில் குடிவருகிறாள் பென்னி. இந்த நான்கு பேரின் மேதாவித்தனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பென்னி படும் பாடும், பென்னியின் சமூகத்திறனுக்கு முன் தடுமாறும் இந்த நால்வரின் அனுபவங்கள், அட்டகாசங்கள் தான் The Big Bang Theory.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


187 ஐ.க்யுவுடன் 16வயதில் Ph.D பட்டம் வென்று தான் மட்டுமே அறிவாளி மற்றவர்கள் அனைவருமே மடையர்கள் என நினைக்கும் ஷெல்டன், 23 வயதில் Ph.D பட்டம் பெற்ற lactose-Intolerant சிக்கலுள்ள லெனர்ட், எந்த நேரமும் தான் ஒரு “மன்மதக் குஞ்சு” என நினைத்துக் கொண்டிருக்கும் ராக்கெட் எஞ்சினியரான ஹேளவர்ட், மற்றும் மப்பில் இருக்கும் நேரம் தவிர பெண்களுடன் பேச இயலாத இந்தியன் Ph.D பிஸிஸிஸ்ட் ராஜேஷ். இந்த அறிவாளிகளுடன் நட்பு வைத்துக் கொள்ளவேண்டிய பென்னியின் பெரிய சாதனை அவள் வேலை செய்யும் சீஸ்கேக் ஃபாக்டரியின் மெனுவை பாடமாக்கியது (ஒரு எபிசோடில் ஷெல்டன் நக்கலடிக்க கூறும் வசனம்).

 

The Big Bang Theory-fanart

பெரும்பாலும் கதை இவர்கள் ஐவரைச் சுற்றியே நடந்தாலும் பின்னர் வந்த சீசன்களில் ஷெல்டனுக்கு ஜோடியாக எமி ஃபாரா ஃபௌலர் எனும் நியுராபயாலஜிஸ்டும் மற்றும் ஹௌவர்டுக்கு பெர்னடெட் எனும் மைக்ரோபயாலஜிஸ்டும் ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.  மற்றும் இடையில் அடிக்கடி வந்துப்போகும் ஷெல்டன், லெனார்ட்டின் அம்மாக்களும் கதாபாத்திரங்களில் அடக்கம்.

 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

 

அது என்ன ராசியோ தெரியல … CBS தொலைக்காட்சிக்கும் இந்த சிட்கொம் நாடகங்களுக்கும் ஏகப்பொருத்தம். எத்தனையோ நாடகங்கள் இந்தச் சேனலில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டாகியுள்ளன. Two and a Half Men, Everybody Loves Raymond, How I met your Mother என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள்.

இதை இயக்கியவர் Two and a Half Menஐ இயக்கிய அதே Chuck Lorre. மனுஷனுக்கு கடவுள் கொடுத்த வரமோ என்னமோ, சென்ஸ் ஒப் ஹியுமர் அற்புதம். சும்மா பிச்சு பெடலெடுத்துட்டாரு. Two and a Half Men இல் டபுள் மீனிங் வசனங்கில் கவனம் செலுத்தியவருக்கு புதிய ஒரு பிரச்சினை. அது சயின்ஸ். பென்னி தவிர நடிக்கும் அனைத்து பேரும் சயின்டிபிக் பீபிள் என்பதால் காமெடிக்கு ஏற்றாப்போல ஃபிஸிக்ஸ் தியரிகள், காமிக் புத்தகங்கள், படங்கள் என ஏகப்பட்ட ஹோம்வொர்க் பண்ணியிருக்காங்க.

Fanart

உங்களுக்கு ஸ்டார்வோர்ஸ், ஸ்டார்ட்ரெக் போன்ற ஹாலிவுட் க்ளாஸிக்ஸ், காமிக்ஸ், ஆன்லைன் ரோல் ப்ளேயிங் கேம்ஸ் போன்றவற்றில் கொஞ்சம் ஞானம் கொஞ்சமிருந்தால் கட்டாயம் வயிறு வலி நிச்சயம் … அட சிரிச்சு தாங்க. இல்லாட்டி அட்லீஸ்ட் கொஞ்சம் சயின்ஸ் அறிவாவது வளரும்.


நிச்சயமா இந்தத் தொடரின் ஹீரோ ஷெல்டனாக நடிக்கும் ஜிம் பார்ஸன்ஸ் தான். சான்ஸே இல்ல இவரின் நடிப்பிற்கு. ஹீ ஜஸ்ட் ஸ்டீல்ஸ் தி ஷோ. அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பிற்கு இவரின் உருவமும், பேச்சும் நடிப்பும் அப்படியே ஒத்துப் போகிறது. கண்டிப்பாக இவரின் நடிப்பு கரியரில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும். வருடாந்தம் அமெரிக்காவில் நடக்கும் நிறைய தொலைக்காட்சி விருதுகளுக்கும் எனக்கு தெரிந்து காமெடி செக்சனில் இவரின் பெயர் கட்டாயம் நொமினேட் செய்யப்பட்டிருக்கும். மேலும் அமெரிக்காவின் மிக முக்கிய சின்னத்திரை விருதான எமி அவார்ட் இல் பெஸ்ட் லீட் அக்டர் இன் காமெடி சீரிஸ்  2010, 2011ம் ஆண்டுகளில் இவருக்குத் தான் சொந்தமாகின.


tumblr_lvylokIhx81qzl9k5o2_250


எனக்குப் பிடித்த மற்ற கரெக்டர் ராஜேஷ். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவனாக வரும் இவன் சிலவேளைகளில் பேசும் போது இந்தியாவைப் குத்திக் காட்டுவது, நக்கலடிப்பது எரிச்சல் மூட்டினாலும் கட்டாயம் சிரிப்பு வரும்.   இவனுக்குள்ள சரக்கடிக்காமல் பெண்களிடம் பேசமுடியாத பிரச்சினை இதன் இன்னொரு இயக்குனரான Bill Pradyக்கும் இருந்ததாம். அதுவும் ஹேளவர்டுக்கும் இவனுக்கும் இடையில் ஒரு ஹோமோ கனெக்சன் உறவு இருப்பதுபோல சித்தரிக்கப்படும் இடங்கள் அட்டகாசம். ஆனால் ரொம்ப சீரியஸான மேட்டர் எதுவுமில்லை.

 

Raj Koothrappali: OK, Sheldon, I'm going to be leading you through a series of meditation exercises. These methods come from the ancient gurus of India and have helped me overcome my own fears.
Sheldon: And yet you can't speak to women.
Raj Koothrappali: True, but thanks to meditation I'm able to stay in the same room with them without urinating.

 

Raj Koothrappali: Do you know the Kama Sutra?
Missy: The sex book?
Raj Koothrappali: The Indian sex book. If you've ever wondered, wondered who wrote the book of love, it was us.

funny-celebrity-pictures-sheldons-got-a-point

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =



இதுவரைக்கும் மொத்தம் ஐந்து சீசன்கள். (இன்னும் மூன்று வரும்னு சொல்றாங்க. நல்லது) முதல் சீசன் தவிர மற்றைய சீசன்கள் ஒவ்வொன்றும் 22நிமிட எபிசோட்கள் 23 அல்லது 24 கொண்டவை. Two and a Half Men இன் காமெடியை விட எனக்கு இதன் ஹியுமர் மிகவும் பிடித்திருந்தது. பார்க்கத் தொடங்கிய புதிதில் முதல் சீசனை ஒரே நாளில் பார்த்து முடித்தேன். இதுவரை ஒரே நாளில் முழு சீசனும் பார்க்கத் தூண்டிய இன்னொரு நாடகம் The Game of Thrones (காலை 5.30 மணிக்கு முன்னோட்டத்திற்காக வீடியோ க்வாலிட்டி பார்க்க ஆரம்பித்தது இரவு 8.30 மணிக்கு முழு சீசனும் பார்த்து முடித்தேன்). நீங்கள் காமெடிப் பிரியர் என்றால் நிச்சயம் தவறவிடக்கூடாத ஒரு நாடகம் இது. எதற்கும் சப்டைட்டிலுடன் பார்ப்பது நன்மை பயக்கும்.

டோன்ட் மிஸ் இட்!!!!


The Big Bang Theory – Comedy Bang !!!

 

எக்ஸ்ட்ரா பிட் I – இந்த நாடகம் இப்போது ஜீ-கஃபே சானலில் பகலில் ஒளிபரப்பாகிறது. வீட்டில் நேரம் கிடைத்தால் ஒரு மூன்று நான்கு எபிசோட்களைப் ட்ரையல் பாருங்கள்.

 

எக்ஸ்ட்ரா பிட் II – The Game of Thrones இன் இரண்டாவது சீசன் ஏப்ரலில் ப்ரீமியர் ஆகிறது. நானும் இப்பொழுது தான் முதல் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த சீசனில் ராணியின் தம்பியாக வரும் Tyrionஇன் பங்கு மிக அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை என்றால் கட்டாயம் ஏப்ரலிற்கு முன் பார்த்துவிடுங்கள்.  அதற்கான அட்டகாசமான டீசர் ட்ரெயிலர் கீழே.

 

A very small man can cast a very large shadow.

 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்
ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

8 comments:

  1. ஐயா கொமொன்சு போட சொல்லுறிங்க..? எத போட? நான் வந்து போயிருக்கேங்க..ஹி ஹி!!

    ReplyDelete
  2. முதலில் இந்த Seriesஐ Pennyக்காக பார்க்க (ஹி.. ஹி..)ஆரம்பித்து, இப்போது அந்த சீரியலில் அனைவரையும் பிடித்து விட்டது. நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா,

    அருமையான காமெடி சீசனைப் பார்க்கத் தூண்டும் வண்ணம் விமர்சித்து எழுதியிருக்கிறீங்க.

    டைம் இருக்கையில் நானும் டவுண்லோட் போட்டுக்கிறேன்.

    அப்புறமா, ராஜேஷ் பத்திச் சொல்லி இன்னும் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறீங்க.

    நேரம் இருக்கையில் பார்க்கிறேன் நண்பா.

    ReplyDelete
  4. பாஸ்,
    நல்ல அறிமுகம் ... ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க .....
    ஹாலிவுட் காமெடி தொலைக்காட்சி சீரீஸ் மேல
    எனக்கு அவள்ளவு ஆர்வம் இல்ல ...ஆனா நீங்க ஏற்கனவே அறிமுகப்படித்திய Dexter சீரீஸ் டவுன்லோட் பண்ணி பார்த்துகிட்டு இருக்கேன்...ரொம்ப நல்லா இருக்கு...அடுத்து The Game of Thrones பார்க்கணும் ..

    ReplyDelete
  5. ஒரு சீரியல் விமர்சனத்தை இப்படியும் விறுவிறுப்பாய் கொண்டுபோக முடியுமா?? எக்ஸலன்ட். மிஸ்பண்ணாமல் பார்க்க ட்ரை பண்றேன்.

    ReplyDelete
  6. படங்களைத்தான் விமர்சிப்பீங்கனு பார்த்தா தொடர்களையும் எழுதி பின்றீங்க..தொடரட்டும்.நன்றி.

    ReplyDelete
  7. கேள்விப்பட்டு இருக்கேன் பார்த்தது இல்லை, உங்கள் இந்த சீரீஸ் விமர்சனம் பார்க்க துண்டுகிறது. கலக்கல் சகா.

    ReplyDelete
  8. நான் ஷெல்டனின் ரசிகன். அதுவும் அவர் தலையைச் சாய்த்து விஷமமாக, அமானுசிய ஒலிகள் எழுப்பிச் சிரிப்பது அட்டகாசம். பசிங்கா!

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...