நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Real Steel [2011]

folderWWE, Smackdown, ECW, TNA,  எனப் பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். தினமும் மனிதர்கள் வலிகளை பொறுத்துக் கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்க தமக்குள் அடித்துக் கொள்வது என்பது இவற்றில் சர்வ சாதாரணம். (இவற்றில் இவர்கள் உண்மையாக  அடித்துக்கொள்வது இல்லை என்பது வேறு விடயம்).  ஆனாலும் ரத்தம் வரும்வரை கொலைவெறித்தனமாக மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, அதிலும் முக்கியமாக சாகும்வரை சண்டையிடுவது என்றால் கட்டாயம் அதை ரசிக்கும் இந்த நல்ல எண்ணம் படைத்த??? மனிதக்கூட்டம்.  எதிர்காலத்தில் இம்மனிதர்களின் கொலைவெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல், ரோபோக்களின் மூலம் சண்டையிட்டால்?? ரத்தம், காயம், உயிர்ப்பலி என ஒரு பிரச்சினையும் இல்லை.  வீணாகப் போவது வெறும் இரும்பு தானே?


அப்படி முன்னர் புகழ்பெற்ற பாக்ஸிங் வீரனாக இருந்து தற்பொழுது சோத்துக்கு சிங்கியடிக்க ரோபோ பாக்ஸிங் செய்யும் தந்தையையும், ரோபோக்களில் ஆர்வம் கொண்ட மகனையும் மையப்படுத்திய கதை தான் இந்த Real Steel.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை 

மேலே இரண்டாவது பாராவில் நான் சொன்ன இரண்டு வரிகளே போதும். அதைவைத்து நீங்கள் ஹாலிவுட் படங்களை அடிக்கடி பார்ப்பவர், ரசிப்பவர் என்றால் இந்நேரம் கதையை ஊகித்திருப்பீர்கள். எதுக்கு சும்மா. கதையை “டக்”என்று சொல்லிடுறேனே. (பதிவ கொஞ்சம் பெரிசாக்க இப்படி சிலசமயங்களில் பிட்டு போடணும். தொழில் ரகசியம்)


thumb3


சார்லி கென்டன் – புகழ் பெற்ற பாக்ஸிங் வீரர். ஏதோ செவ்வாய் தோஷமோ, ஜாதகத்துல கிரகமோ தெரியல. சர்ர்ன்னு சரிக்கி விழுந்துட்டார் (வாழ்க்கையிலப்பா) ஊரெல்லாம் கடன். என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது, ரெண்டு பேர் அவர பார்க்க வாராங்க. “உங்க மனைவி இறந்துட்டாங்க. 11 வருஷத்துக்கு முன்னாடி இல்லற வாழ்க்கையில் கிழிச்சதன் ரிசல்ட் மேக்ஸ் என்ற பேர்ல இருக்கு. கோர்ட்டுல வந்து பாரம் எடுத்துக் கொள்ளுங்க”ன்னு சொல்லிடறாங்க. சார்லியின் மனைவிக்கு பணக்கார அக்கா. அவ மகனான மேக்ஸை தத்தெடுக்க விரும்புகிறாள். அதனால மகனை தத்தெடுக்க சார்லியிடம் அக்காவின் கணவன் கேட்க ரேட் ஒன்னு பிக்ஸ் பண்ண கேட்க, “கரும்பு தின்ன கூலியா” என்பது போல வந்த தொல்லையை காசையும் வாங்கிட்டு கொடுத்துவிடுவோம் என சார்லி அட்வான்ஸும் வாங்கிடறான்.

ஆனால் மகன் மேக்ஸ் தன் தந்தை தன்னை காசுக்காக தத்துக் கொடுத்துவிட்டாரே என சார்லி மீது கோபமாக இருக்கிறான். இப்படியே கதை கொஞ்சம் கொஞ்சமா நகருது. ஒரு நாள் ரோபோ ஒன்று செய்ய சாமான் தேடப் போகும் போது, எதிர்பாராத விதமாக மேக்ஸ் ஒரு பழைய ஜெனரேஷன் ரோபோ ஒன்றை கண்டெடுக்கிறான். அது ஃபைடர் ரோபோக்கள் ப்ராக்டிஸ் செய்ய யூஸ் ஆகும் ரோபோ ஒன்று. அதற்கு உள்ள ஒரு வித்தியாசமான திறமை என்னவென்றால், அது தன்னெதிரில் உள்ளவர்களைப் பார்த்து அப்படியே இமிடேட் செய்யக்கூடியது. மேக்ஸ் அந்த ரோபோவின் திறமையை கண்டறிந்து சார்லி மூலம் குத்துச்சண்டை நுட்பங்களை அப்லோட் செய்கிறான். மேலும் அதனை இயக்க ரிமோட்-கன்ட்ரோல், Voice-Recognition என அதை மெருகேற்றுகிறான். பின்னர் WRC எனும் ரோபோச் சண்டை லீக் வர, இருவரும் அதில் எப்படி கலந்து ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை (தெரிந்த கதையை மீதியை திரையில் காண்கன்னு சொல்லி போரடிக்க வைக்க விரும்பல).

thumb7


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


முதலாவதாக கதையைப் பற்றிப் பார்ப்போம். திரைக்கதை என்னவோ நாம ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என பலதரப்பட்ட மொழிகளில் பார்த்து சலித்து போன கதை தான். நோஞ்சான் போல இருக்கும் ஹீரோ (இங்கு ரோபோ). ஃபைட் பண்ணி ஜெயித்துக் கொண்டு போகும். கடைசியில் பெரிய வில்லனிடம் அடி வாங்கி அடி வாங்கி (பத்ரி,  M. குமரன்) கடைசில எப்படியாவது ஜெயிச்சுருவாரு. ஆனால் அதை சுவாரஸ்யமாக அலட்டாமல் மக்களுக்கு (முக்கியமாக குழந்தைகளுக்கு) கொண்டு சேர்த்த பணியை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்.

சார்லியாக வருபவர் XMen சீரிஸில் Wolverine ஆக நடித்த John Hughman. வழக்கம் போல கலக்குகிறார். முதலில் அவருக்கேற்ற முரட்டு அலட்சியத்தன்மையுடனான கரெக்டராகட்டும், பின்னர் தவறை உணர்ந்து ரோபோவுடன் போட்டிகளில் கலக்குவதாகட்டும், தனக்கு இடப்பட்ட பணியை நன்றாகவே செய்கிறார். அதே சமயத்தில் முதலில் மேக்ஸ் மேலே கோபமாக இருந்தாலும் பின்னர் ஒரு தந்தை-மகன் உறவு வளரும்போது நல்ல கரெக்டராக மாறிவிடுகிறார்.  (நேக்கு என்னமோ இவர் Wolverineஇல் வரும் காட்சிகள் போன்றவற்றிக்கே சரிப்பட்டு வருவார் போல தோணுது) மேக்ஸாக வரும் சிறுவனும், Atomஎனும் ரோபோவும் செய்யும் போட்டிகளுக்கு முன்பான டான்ஸ் போன்றவை என் போன்ற??? சிறு பிள்ளைகளை ரசிக்கவைக்கும்.  கடைசியில் வழக்கமான நம் தமிழ்ப்படங்கள் போல ரோபோ விழுந்து விழுந்து அடிவாங்கும்போது இதோ இன்னும் கொஞ்சம் நேரத்தில் …….. ஒரே குத்து … ஜெயித்து விடுவார். படம் முடிந்துவிடும் என தெரிந்தாலும் ஃபைட் சீன்கள் கொஞ்சம் ரசிக்கவே வைக்கிறது. இல்லையென்றால் கடைசி ஃபைட் முடிந்தபின் Atomஇன் வெற்றிக்காக என் மனம் சந்தோஷப்பட்டது ஏன்???

thumb10

கிராபிக்ஸ் நல்லாவே பண்ணியிருக்காங்க. ஆனால் படத்தின் அந்த Futuristic லுக் ரோபோக்களில் மட்டுமே தெரிகிறது. மற்றபடி படத்தில் வரும் இடங்கள், கார், போன்களுக்கும் தற்போதுள்ள நிலைமைக்கும் பெரிதாக வித்தியாசப்படவில்லை.

பெரியவர்களுக்கு இந்தப் படம் எந்தளவு பிடிக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் சுட்டிகள் நல்லா ரசிப்பாங்க. குடும்பத்துடன் ஒரு விடுமுறையில் படம் பார்க்கவேண்டும் என்றால் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்.

Title: Real Steel Cast: Hugh Jackman, Dakota Goyo, Evangeline Lilly
Language: English
Release Date: October 7, 2011
Directed By: Shawn Levy
Runtime: 127 min
Distributed by : Touchstone Pictures (USA)
Budget: $110 million
Box Office: $292,493,410



Real Steel : 64/100


டிஸ்கி - இந்தப் படம் போல நான் விமர்சனம் எழுதிய சில படங்களும் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டிருப்பதால் புதிதாக “அண்மையில் பார்த்தவை” என்ற Gadgetஇனை ப்ளாக்கின் இடது பக்கம் போட்டுள்ளேன். அதிலுள்ள படங்களுக்கு நான் ஏற்கனவே தமிழ் விமர்சனங்கள் வாசித்திருந்தால் அதில் லிங்க் கொடுத்துவிடுகிறேன். (நமக்கும் கொஞ்சம் டைம் மிச்சம் ஆகும் பாருங்க) … இல்ல வேணாம் நீ பேசாம எழுதிரு அப்படின்னு நினைச்சீங்கண்ணா தயவு செய்து உங்கள் கருத்தை கீழே போட்டுவிட்டு போங்க.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

15 comments:

  1. அட நிறைய புதுப்படங்களா பார்த்து..சிறப்பா எழுதுரீங்களே..ஐ ஜாலி....இந்த மாதிரியே தொடரட்டும் தங்கள் பணி.எந்த ஒரு படத்தையும் பார்ப்பதற்கு முன்னம் இந்த மாதிரி ஒரு அறிமுகம் பிளஸ் விமர்சனம் இருந்த இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்..திறம்பட விமர்சனங்களை அள்ளி கொடுத்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. @Kumaran

    தொடர்ந்து கருத்திட்டு ஆதரவளித்து வருவதற்கு நன்றி குமரன்.

    என்னுடைய “டிஸ்கி” பத்தி என்ன நினைக்கிறீங்க?

    ReplyDelete
  3. டிஸ்கி பற்றிதானே அத பற்றி அப்புறமா எழுதலான்னு விட்டுட்டேன்..வேண்டாம் நண்பரே.பலரும் எழுதாத படங்களை தேர்வு செய்து எழுதுங்கள்..எல்லோரும் பார்த்து எழுதி தீர்த்த படங்களை எழுதும் போது சுவாரஸ்யங்கள் படிப்பவர்களிடம் குறைய வாய்ப்புகள் உண்டு..ஆனால், அந்த Gadget அப்படியே இருக்கட்டும்..நல்லா இருக்கு.இது அத்தனையும் என் தனிப்பட்ட கருத்து தவறாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  4. @Kumaran

    நானும் அந்த எண்ணத்தில் தான் இந்த Gadgetஐ போடுவது பற்றி யோசித்தேன்.

    மிகவும் இம்ப்ரஸ் பண்ணிய படம், அல்லது புதிதாக வெளியான படம் என்றால் மட்டுமே ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட படத்தை பற்றி எழுதுவது என முடிவெடுத்திருக்கிறேன்.

    மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்ப்போம்.

    ReplyDelete
  5. கிராபிக்ஸ் நன்றாக இருந்தது பார்க்க சுவராசியமாக இருந்தது...ஆனால் படம் கொஞ்சம் நீளமாக இருந்ததால் இடையில் தொய்வாக இருந்தது.

    ReplyDelete
  6. அட இதில மைனஸ் ஒட்டு போட அப்பிடி என்னதான் எழுதி இருக்கீங்க? சொன்னா நானும் போடலாம்தானே? ஹி ஹி !!

    ReplyDelete
  7. நானும் மிகவும் Enjoy பண்ணி பார்த்த படம். படத்தில் Heroவை விட அந்த சின்ன பையனுக்கும், ரோபோவிற்கும்தான் அதிக importance குடுத்த மாதிரி இருக்கு. Gadjet நல்ல ஐடியா, அப்படியே இருக்கட்டும்.

    ReplyDelete
  8. நல்லா ஆவலைத் தூண்டுற மாதிரி விமர்சனம் எழுதியிருக்கீங்க.. ஆனா நான் பார்த்த வரையிலும் படம் கொஞ்சம் போரிங்காககத்தான் இருந்தது.
    ஆகா.. In-Time தானே அடுத்த பதிவா வெளியிடுறதுக்கு இருக்கேன்.. ஆனா நீங்களும் கண்டிப்பா எழுதிடனும்!

    ReplyDelete
  9. வணக்கம் நண்பா,
    feed burner இல் பதிவு தானகவே திரட்டிக் கொள்ளும்,. பீர்ட் பானர் மூலம் உங்கள் ப்ளாக்கில் பீட் முகவரி இணைக்கா விட்டாலும் பதிவு automatic முறையில் அனைவருக்கும் அனுப்பப்படும் நண்பா.
    நானும் இதே முறையினைத் தான் கையாள்கிறேன்.
    ப்ளாக்கின் feed settings பகுதியிலிருந்து feed burner ஐ நீக்குவதால் பிரச்சினை ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  10. யாரைய்யா இந்தப் படத்திற்கு மைனஸ் ஓட்டு குத்தியது? கொய்யாலே...இதில மைனஸ் ஓட்டுப் போடுமளவிற்கு என்னா இருக்கு?

    இடது பக்கம் மேலே பார்த்துள்ள கையினைக் கிளிக் செஞ்சா + ஓட்டு
    வலது பக்கம் கீழே பார்த்துள்ள கையினைக் கிளிக் செஞ்சா மைனஸ் ஓட்டு.

    ReplyDelete
  11. விமர்சனம் வழமை போலவே நன்றாக இருக்கிறது.
    நானும் ஓய்வாக இருக்கும் போது இப் படத்தினைப் பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. @நிரூபன்

    நண்பா ... என் பதிவை தமிழ்மணத்தில் காணவில்லையே. எப்படி பதிவுகளை தேடிக் கண்டுபிடிப்பது?

    ReplyDelete
  13. விமர்சனம் நன்று.
    அந்த gadget இருக்கட்டும் சகா, நல்ல தான் இருக்கு வித்தியாசமா.

    ReplyDelete
  14. நண்பனெ அருமையாக படைத்துள்ளிர்...நானும் சில அக்கங்கள் படைத்துள்ளென் பாரீர். http://cinivirunthu.blogspot.com/ உங்கள் அளவுக்கு இல்லாவிடினும் என்னால் முடிந்தது ...

    ReplyDelete
  15. அரைச்ச மாவை கொடுத்தாலும் ,நல்லாவே பண்ணியிருக்கார்னு சொல்றீங்க ..நானும் டவுன்லோட் பண்ணிட்டேன் ,நன்றி

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...