நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

In Time [2011]

folderIn Time கிட்டிய எதிர்காலத்தில் நடக்கும் ஒரு ஃபிக்ஷன்-த்ரில்லர் வகையை சேர்ந்த படம். Andrew Niccol இன் இயக்கத்தில் Justin Timberlake, Amanda Seyfried மற்றும் பல இளவயது நட்சத்திரப் பட்டாளத்துடன், “காலம் பொன்னானது”, என்ற ஒரு வித்தியாசமான கான்செப்டை வைத்துக் கொண்டு களமிறங்கியிருக்கும் படம்.

மிகவும் நல்ல ஒரு ஸ்கோப் உள்ள இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட். நல்ல நடிகர் கூட்டணி.  திரைக்கதையின் நன்றாக படத்தில் பயன்படுத்தியுள்ளனரா? படத்தை சுவாரஸ்யமாக பார்வையாளனுக்கு தருவதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை

அனேகமாக பூமியில் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வருடத்தில் (ஒன்னுமே சொல்றாய்ங்க இல்ல) பொறக்குற மனுஷங்க எல்லாருக்கும் வாழ்க்கை 25 வருஷம் தான். அப்படி மரபணு முறையில் மாற்றங்கள் செய்துவிடுகிறார்கள். 25 வயது ஆனதும், கையில் ஒரு Count-Down கடிகாரம் தொடங்கும். யார் வேண்டுமானாலும் நேரத்தை டொப்-அப் செய்து கொள்ளலாம். (கிட்டத்தட்ட மொபைல் பக்கேஜ் ஒன்னைப் போல இல்லை?) அப்படி செய்வதன் மூலம் தொடர்ந்து இளமையாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தற்பொழுது நம் உலகில் நாம் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறோமோ, அதே போல அங்கு நேரம் கூலியாக, பரிசாக கொடுக்கப்படும். அட … அதான் ஒரு வருஷம் இருக்கே. அதுக்குள்ள வேலை செய்து நிறைய நாட்கள் சம்பாதித்துக் கொள்ளலாமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால் அங்க இருக்கு ஒரு பிரச்சினை. உங்கள் வாழ்க்கைத் தேவைகளை நேரத்தை செலவளித்தே வாங்கவோ பெறவோ முடியும். உதாரணமாக கூலி வீடானால் அதன் மாதக்கூலி இரண்டு வாரங்கள், காப்பி ஒரு கோப்பை வாங்குவதானால் 5நிமிடங்கள் கொடுக்கவேண்டும். மனிதர்கள் தமக்கிடையே நேரத்தை கைகளை மேலாக இறுக்கிப் பிடிப்பதன் மூலம் நேரத்தைப் பெற முடியும். யாரிடம் அதிக நேரம் உள்ளதோ, அவனே பணக்காரன்.
thumb4

படத்தில் உலகம் 12 நேர வலயங்கள் எனப்படும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது செல்வந்தர்கள் வாழும் இடம் ஒரு வலயம், ஏழைகள் வாழ்வது ஒரு தனி வலயம் என வசதிக்கேற்றாப் போல பிரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் வலயத்தில் மற்றவர்களிடம் இருந்து நேரத்தைப் பறிக்க கொள்ளை, கொலை என்பன நடப்பது வழக்கம்.  நம் ஹீரோ வில் சலஸ் (Will Salas) ஏழைகளின் நேர வலயத்தில் ஒரு அன்றாடங் காய்ச்சி.  வில் இன் தாயின் ஆசை செல்வந்தர்களின் வலயமான Time Zone 1 Greenwich இற்கு செல்வது. அன்று விலையுயர்வு காரணமாக  அவளிடம் இருக்கும் நேரத்தைவிட பஸ் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஓடி வந்து வில்லை சந்திக்கும் போது தாய் இறந்துவிடுகிறாள். ஒரு நாள் வில் பாருக்கு வரும் 100வருடங்கள் வாழ்நாள் கொண்ட மனிதனின் நேரத்தைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஒரு கூட்டத்திடமிருந்து அவனைக் காப்பாற்றுகிறான். மறுநாள் காலை, அம்மனிதன் தான் ஏற்கனவே பல வருடங்கள் வாழ்ந்துவிட்டதாகவும் வாழ்க்கை அலுப்படித்து விட்டதாகவும் கூறி விட்டு Willக்கு அவனின் நூறு வருடங்களையும் கொடுத்துவிட்டு 5நிமிடங்கள் வைத்துக்கொண்டு இறந்துவிடுகிறான். ஆனால் மரணத்தை விசாரிக்கும் Time Keepers எனும் நேரத்தை கட்டுப்படுத்தும் போலிஸார், வில் 100வருடங்களுக்காக அம்மனிதனை கொலை செய்ததாக எண்ணி வில்லை துரத்துகிறது. வில் தன்வசம் அதிக நேரம் இருப்பதால் பணக்காரர்களின் Greenwich வலயத்திற்கு பயணமாகிறான்.

அங்குள்ள வீஸ் எனப்படும் ஒரு பெரிய செல்வந்தனினதும் அவனின் மகளான சில்வியாவின் அறிமுகமும் அவனுக்கு கிடைக்கிறது.போலிஸ் வில்ஐ கொலைக்குற்றத்தில் கைது செய்ய முயற்சிக்கும்போது வில் துப்பாக்கி முனையில் சில்வியாவை பணயக்கைதியாக வைத்து தப்பிக்கிறான். இதன் பினனர் போலிஸ்காரர்கள் மூலம் நேரத்தை பராமரிப்பதில் நடக்கும் குளறுபடிகள், மோசடிகள், பாதிப்புகள் என்பவற்றை தெரிந்து கொண்டு சில்வியாவின் உதவியுடன் நேரத்தை பாங்க் போன்றவற்றிலிருந்து கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறான். இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் எப்படி அனைத்து மக்களும் பாரபட்சமின்றி சமத்துவமாக வாழுமாறு வில் செய்கிறான் என்பதே கதை.

thumb5
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மேலே குறிப்பிட்டது போல மிகவும் சுவாரஸ்யமான, புதிய வித்தியாசமான கதைக்களம். அவரவர் வாழ்க்கை அவர் கையில் என்பது போல நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையை வாழ உழைக்கவேண்டும் என்பது எனக்கு பட்ட மெசேஜ். படம் பார்க்கும் போது யோசித்தேன். இப்படியான சிஸ்டம் நமக்கு இருந்திருந்தால்??? படம் பார்த்து முடித்ததும் என் மனதில் தோன்றியது “நாம் தினமும் எத்தனை மணித்தியாலங்களை பதிவுகளுக்காக செலவு செய்கிறோம்.  செலவளியும் ஒவ்வொரு செக்கனும் வீணாகுவது உன் வாழ்க்கையல்லவா. இனியாவது கொஞ்சம் பிரயோசனம் எடுக்கப் பார்”. படத்தில் வரும் ஏழைகள் அடிக்கடி நம் நேரம் வந்துவிட்டதா எனப் கையைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய கொடுமை. நல்ல பல மெசேஜ்களை இயக்குனர் சொல்லியிருக்கலாம். அடித்து விளையாட நல்ல ஆடுகளம் இருந்தும் நம் இந்திய, இலங்கை அணிகள் தடுமாறுவது போல இயக்குனரும் மெதுவான திரைக்கதை, போரடிக்கும் இரண்டாம் பாகம் என அடிக்கடி நாம் எம் கடிகாரத்தைப் பார்க்க வைக்கிறார்.  2011ம் வருடம் X-Men : First Class, Rise of the Planet of the Apes (விமர்சனம் இங்கே) என வெற்றிப் படங்களை சுவைத்த 20th Century Fox நிறுவனத்திற்கு இந்தப் படம் ஒரு சிறு சறுக்கல். ஆனாலும் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. கான்செப்டை கேட்டவுடன் நல்லாயிருக்கேன்னு காசப் போட்டிருப்பாங்க.

படத்தில் அனைவருமே 25 வயதுடன் வயதாவதை நிறுத்திவிடுவதால் படத்தில் வரும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும், பின்னணியில் வரும் மனிதர்களும் கிட்டத்தட்ட அந்த வயதினர் போல காட்ட முயற்சித்து இருப்பது பாராட்டத்தக்கது. இதில் எனக்கு ஹீரோவான Justin Timberlake,  Amanda Seyfried இருவர் மட்டுமே 25வயதினர் போல் தோற்றமளித்தனர். Justin Timberlakeக்கு 2011இல் சுக்கிரன் உச்சத்தில் இருந்தான் போலயிருக்கு. ஏகப்பட்ட படங்கள் கைவசம். இப்படத்தில் Friends With Benefits (விமர்சனம் இங்கே) இல் காட்டிய நடிப்பை விட ஒருபடி மேலேயே நடித்திருக்கிறார். ஆனால் சென்டிமெண்ட் சீன்களில் கொஞ்சம் நடிப்பில் செயற்கைத் தனம் தெரிகிறது. கில்மா காட்சிகள் பெரிதாக இல்லாததால் நடிப்பை இதற்கு மேல் ஒப்பிடமுடியவில்லை. ஹி … ஹி.  படத்தில் இவரின் கரெக்டர் பணக்காரனான வீஸிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது கொஞ்சம் Robin-Hood பாத்திரத்தை எனக்கு ஞாபமூட்டியது.

thumb3

படம் எதிர்காலத்தில் நடப்பது போல் காட்டப்பட்டிருந்தாலும், Real Steel படம் போல அனேகமாக இப்படத்தில் வரும் இடங்களாகட்டும், கார்களாகட்டும் தற்போதுள்ளவை மாதிரியே தான் இருக்கின்றன. மனுஷனுக்கு இதுக்கு மேல முன்னேற்றம் தேவையில்ல என டைரக்டர் நினைச்சுட்டாரு போலருக்கு.

படம் கான்செப்ட் விளங்கியதும் எனக்கு மனதில் தோன்றிய முதல் கேள்வியே “நீ எவ்வளவு நேரத்த சும்மா கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வீணடிச்சுகிட்டிருக்க? அங்க பார் எத்தனப் பேரு நேரமில்லாம சாகிறாங்கண்ணு … நீ மட்டும் அங்க பொறந்து இருந்த … செத்தடா”. நேற்று சனிக்கிழமை படத்தைப் பார்த்து முடித்ததும் ஒரு பதிவு எழுதத் தொடங்க முதலில் ஒரு செக்கன் யோசித்தேன். எழுத எப்படியும் 2-3மணித்தியாலங்கள் போகும். எதுக்கு சும்மா ப்ளாக், ஃபேஸ்புக்குன்னு சும்மா டைம் வேஸ்ட் பண்ணி? போய் உருப்படியா ஒரு வேல வெட்டிய பார்ப்போமேன்னு. ஆனாலும் பொழுதுபோக்க (அடப்பாவி திருந்தமாட்ட போலருக்கே) வேறு எதுவும் கிடைக்காததால் இந்தப் பதிவு எழுதப்படுகிறது. அனேகமாக படம் பார்க்கும் அனைவருக்கும் இந்தக் கேள்வி எழுவது டைரக்டரினதும், கதாசிரியரினதும் வெற்றி.

நீங்கள் ஆக்சன், ஃபிக்சன் கதைகளை விரும்பிப் பார்ப்பவரானால் படத்தைப் பார்க்க தவறிடாதீங்க. இந்த விமர்சனம் என் பார்வை மட்டுமே என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சிலவேளை உங்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கலாம்.

In Time : 56/100

Title: In Time
Cast: Amanda Seyfried, Justin Timberlake, Cillian Murphy, Olivia Wilde
Language: English
Release Date: October 28, 2011
Directed By: Andrew Niccol
Runtime: 109 minutes
Distributed by : 20th Century Fox
Budget: $40 million
Box Office: $143,827,637
UPDATE – பதிவை ஞாயிறு பகலிலிருந்து ட்ராஃப்டில் போட்டு வைத்திருந்தேன். நேற்று Real Steel படவிமர்சனத்தை போட்டதால் இன்னும் இரண்டு நாட்களில் இதைப் போடுவோம் என்று. இடையில் நண்பர் JZ அவர்கள் அவரின் விமர்சனத்தையும் எழுதியுள்ளார். முடிந்தால் அதையும் வாசித்து விடுங்கள். (அவரின் விமர்சனத்திற்கு இங்கே க்ளிக்கவும்)

டிஸ்கி –  நான் கைய வச்சிகிட்டு சும்மா இருக்க முடியாம என்னுடைய பழைய Feedburner லிங்க் மாத்திவிட்டதால், முன்பு Subscribe செய்து இருந்தவர்கள், http://feeds.feedburner.com/hollywoodrasigan என்ற புதிய முகவரியினை தங்கள் Readerஇல் போட்டுக்கங்க. Sorry for the Disturbance.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

 1. இரண்டாம் பாதி போக போக படம் போரடிக்கவில்லையா நண்பரே

  ReplyDelete
 2. விமர்சனமா சூப்பர்.

  //////கில்மா காட்சிகள் பெரிதாக இல்லாததால் நடிப்பை இதற்கு மேல் ஒப்பிடமுடியவில்லை. ஹி … ஹி.//////
  கில்மா காட்சியில எப்படி சகா........ இந்த ஒரு வரிக்கு என்னுடைய கற்பனை எங்கயோ........கில்மா கட்சியிலும் நடிக்க முடியுமா?
  அதுல இன்னைத்த ஒப்பிடுரிங்க தெரியல.......

  ReplyDelete
 3. @Lucky Limat லக்கி லிமட்
  “இயக்குனரும் மெதுவான திரைக்கதை, போரடிக்கும் இரண்டாம் பாகம் என அடிக்கடி நாம் எம் கடிகாரத்தைப் பார்க்க வைக்கிறார்.”

  ReplyDelete
 4. @MuratuSingam

  நடிப்பில் எந்தக் காட்சியிலும் என்னைப் பொறுத்தவரையில் Facial Expression ரொம்ப முக்கியம். Friends with benefitsல அந்த மாதிரி காட்சிகள் கொஞ்சம் இருக்கிறதால், இதுலயும் இருந்திருந்தா ரெண்டயும் கம்பேர் பண்ணி இருக்கலாம். அதத் தான் கொஞ்சம் குழப்பி சொல்லியிருக்கிறேன்.

  ReplyDelete
 5. நண்பர் JZ - இப்பதான் இவரோட விமர்சனம் படிச்சுட்டு வரேன்..அருமையா இருந்தது..

  நண்பரே, Raw Steel படம் கூட இன்னும் பார்க்கல..அதுக்குள்ள இன்னொரு கலக்கலான விமர்சனம்..கதை, சுவாரஸ்யங்கள் என்று அத்தனையையும் தங்களின் எழுத்துக்களால் ரசிக்க செய்துள்ளீர்கள்..
  ஒரே நேரத்தில் இரண்டு நல்ல விமர்சனங்கள் இந்த படத்துக்கு வந்துட்டதால கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.நன்றி.

  ReplyDelete
 6. கச்சிதமான விமர்சனம் ஹாலிவுட்ரசிகன்! என் லிங்க்கையும் Share செய்தமைக்கு ரொம்ப நன்றி!!

  ReplyDelete
 7. @Kumaran

  பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் பார்வை பற்றி ஒரு சிறிய பதிவு அல்லது அடுத்த பதிவில் கடைசியாக அண்மையில் பார்த்த புதிய படம் ன்னு சொல்லி கருத்தை சொல்லிடுங்க.

  ReplyDelete
 8. /////நாம் தினமும் எத்தனை மணித்தியாலங்களை பதிவுகளுக்காக செலவு செய்கிறோம். செலவளியும் ஒவ்வொரு செக்கனும் வீணாகுவது உன் வாழ்க்கையல்லவா. இனியாவது கொஞ்சம் பிரயோசனம் எடுக்கப் பார்”///

  பாஸ்,
  பதிவுகளுக்காக செலவு செய்யும் நேரம் கண்டிப்பாக வீண் ஆவது கிடையாது....அந்த நேரம் ஒரு மாதிரியான ரெப்ரெஷ்மென்ட் நேரம்...உங்கள் அன்றாட வாழ்வில் சிறிது நேரத்தை (1 hr)ரெப்ரெஷ்மென்டுக்கு ஒதுக்குவது ஒன்றும் வீண் கிடையாது....ஆனா வெறும் பதிவுகளுக்கு மட்டுமே தம் அணைத்து நேரத்தையும் (4 - 9 hr) ஒதுக்குவது தவறு....இது என்னோட கருத்து.....

  நானும் படம் பார்த்தேன்... படம் சுமார் தான்...வித்தியாசமான கதை களம்..ஆனா ஏதோ மிஸ்ஸிங் படத்தில்..ஆனா உங்க வர்ணனை நன்றாக இருந்தது...

  ReplyDelete
 9. @ராஜ்

  வாங்க. கொஞ்ச நாளா ஆளையே காணோம்?

  நீங்க சொல்றதும் சரிதான் ராஜ். Time allocation முக்கியம்.

  ReplyDelete
 10. நான் விமரிசனம் படிக்கிறதோட சரி!நன்று.

  ReplyDelete
 11. வணக்கம் நண்பா,
  கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட் உள்ள படத்தின் விமர்சனத்தினைக் கொடுத்திருக்கீறீங்க.
  நானும் டைம் கிடைக்கும் போது இந்த படத்தை பார்க்க ட்ரை பண்றேன்.

  ReplyDelete
 12. @ஹாலிவுட்ரசிகன்

  //வாங்க. கொஞ்ச நாளா ஆளையே காணோம்?//
  ஆமா பாஸ்...பொங்கலுக்கு ஒரு வாரம் பிரேக் எடுத்து ஊருக்கு போய் இருந்தேன்.....ஊருல இன்டர்நெட் இல்ல..அதனால தான் கொஞ்சம் நாள் காணாம போயிட்டேன்...

  ReplyDelete
 13. டன் . feedburner லிங் மாற்றியாச்சு. time இருந்தால் intime பார்க்கணும்.

  ReplyDelete
 14. @சி.பி.செந்தில்குமார்

  On Timeல பார்க்க கிடைக்காவிட்டாலும் Free-Timeல சரி பார்க்க பாருங்க.

  ReplyDelete
 15. This is my Good luck that I found your post which is according to my search and topic, I think you are a great blogger, thanks for helping me out from my problem..

  ReplyDelete
 16. டைம் கொள்ளையா? சரியான பகல்கொள்ளையால்ல இருக்கு?

  ReplyDelete
 17. @தாமரைக்குட்டி

  ஹி ஹி ... வருகைக்கு நன்றி தாமரைக்குட்டி. தொடர்ந்து வாங்க.

  ReplyDelete
 18. இன்னும் படம் பார்க்கவில்லை நண்பரே ,நல்ல விமர்சனம் .படத்தை பற்றி பார்த்துவிட்டு சொல்கிறேன் .நன்றி

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...