நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

The Green Mile [1999]


வணக்கம் நண்பர்களே,

எல்லாரும் வந்தாச்சா? சரி. இன்னக்கி நாம பார்க்கப்போறது The Green Mile அப்படீங்கற கொஞ்சம் வித்தியாசமான தரமான சரக்கு. வெளியிடப்பட்ட வருடம் 1999. சரக்க எப்படி மெதுவா அடிக்க அடிக்க கிங்ண்ணு ஏறுமோ, அதே போல இந்த படமும் கொஞ்சம் நேரம் போகப் போக படுசுவாரஸ்யமாக மாறும். பொறுமையாக கொஞ்சம் நேரம் படத்த கொன்டின்யு பண்ணினா, முடியும் வரை எழுந்திருக்க மாட்டீங்க. ஆனா இப்பவே சொல்லிட்டேன். படம் கிட்டத்தட்ட 3மணி நேரம். (அடப்போங்க பாஸ் அவதார், LOTR series, Shawshank Redemption, சிவாஜி எல்லாங்கூடத்தான் 3மணி நேரம். நாங்க என்சாய் பண்ணல??? )

முதல்ல நாம தலைப்புல இருந்து ஆரம்பிப்போம். Last Mile என்பது மரணதண்டனையை எதிர்நோக்கும் ஒரு கைதி சிறைக்குள் நடக்கும் கடைசிப் பாதை.The Green Mile எனப் பெயரிட காரணம் (உண்மையில் அது ஒரு மைல் தூரம் இல்லை) அந்தப் பாதையை படத்தில் பச்சையாக காட்டியிருப்பாங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை :ஒரு முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு கிழவர் அங்கு காட்டப்படும் ஒரு திரைப்படத்தினால் சில ஞாபகங்கள் மீட்டப்பட்டு, தன் வாழ்வில் சில காலம் ஜெயில் மரணதண்டனை அதிகாரியாக பணியாற்றியபோது ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களை தன்னுடன் இருக்கும் இன்னொரு பாட்டிக்கு பகிர்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. போல் எட்ஜ்கோம்ப் (Paul Edgecomb) என்பது தான் கிழவரின் பெயர்.போல் பணியாற்றும் சிறையில் மொத்தமாக நான்கு பேர். புதிதாக பேர்சி என்பவன் என்ட்ரி. அவனுக்கு ஏற்கனவே ஒரு மென்டல் ஹாஸ்பிட்டலில் பதவி உயர்வு இருந்தாலும் ஒரு மரணதண்டனையை பார்க்கவேண்டும் என்பதற்காக இங்கு வருகிறான். இயல்பில் மிகவும் கொடூரமான இயல்புகளைக் கொண்ட பேர்சி அங்கிருக்கும் கைதிகளை துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறான்.

இதற்கிடையில் மரணதண்டனைக்காக ஜோன் கொஃபி (John Coffey) எனும் ஒரு ராட்சத மனிதனை அழைத்துவருகிறார்கள். காரணம் இரண்டு சிறுமிகளை கற்பழித்த குற்றம். WWEஇல் வரும் Mark Henry போன்ற உருவத்தைப் பார்த்து அனைவரும் ஆரம்பத்தில் பயப்பட்டாலும் போகப்போக அவன் ஒரு அமைதியான, இருட்டிற்கு பயப்படும் அப்பாவியான ரொம்ப நல்லவனான கேரக்டர் என தெரியவருகிறது.தொடர்ந்து சற்ற மெதுவாக நகரும் கதையில் கொஃபிக்கு இருக்கும் அமானுஷ்யமான சில சக்திகள் சிறையில் இருப்பவர்களுக்கு தெரியவருகிறது. அவனுடைய பவர்களை சிறையில் இருப்பவர்கள் நல்ல வகையில் பயன்படுத்தினார்களா? ஜோன் மின்சாரக் கதிரையில் இருத்தப்பட்டானா? கொடூரமான பேர்சிக்கு என்ன நடந்தது என்பவற்றுக்கு விடையையும் இன்னும் இங்கு கேட்கப்படாத ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நான் இப்பொழுது சொன்னது, மூன்று மணி நேரத்தின் ஆரம்ப 30-45நிமிடங்களே. படத்தில் நான் சொல்லாத விடயங்கள், திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் என இன்னும் ரசிக்க நிறைய விடயங்கள் இருக்கின்றன. மிஸ் பண்ணாம பாருங்க. ( சுருக்கமாக சொல்ல நினைத்ததால் கதையை ட்ரிம் பண்ணி விட்டேன். நல்லாயிருக்கா அல்லது இன்னும் சற்று விரிவாக சொன்னால் நல்லாயிருக்குமா???? )

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தை இயக்கியிருப்பவர் The Shawshank Redemption இயக்கிய ப்ரான்க் டரபொன்ட். அதை இயக்கிய பின் இந்தப் படத்தை இயக்கிதாலோ என்னவோ, அதன் சாயல், வாடை இதிலும் வீசுகிறது. இரண்டு படங்களுமே சிறை வாழ்க்கையை சம்பந்தப்படுத்திய திரைப்படங்களாக இருந்தாலும் Green Mile அமானுஷ்ய சக்திகள் பற்றிய சப்ஜெக்டை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் மனிதர் மூன்று மணித்தியாலங்களும் எம்மை கதிரையில் பிணைத்து வைப்பதில் சக்ஸஸ் ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படத்தின் நீளத்தை சற்று குறைத்து 2.30மணித்தியாலங்களாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்தப் படமும் The Shawshank Redemption எழுதிய Stephen Kingஇன் 6நாவல்கள் கொண்ட ஒரு சீரீஸில் இருந்து தயாரானது தான். 6 நாவல்களை 1.30மணித்தியாலங்களுக்குள் கம்ப்ரெஸ் பண்ணுவது கடினம் என்பதால் 3 மணிநேர நீளத்திற்கு ஒரு எக்ஸ்க்யூஸ்.


படத்தில் நடிக்கும் யாருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாது. அனைவரும் தம் பாத்திரத்தை உணர்ந்து அதை நன்றாக பிரதிபலித்திருக்கிறார்கள். மனதில் நிற்பவர்கள் என்று குறிப்பிட்டு கூறக்கூடியவர்கள் போல், ப்ரூடஸ் ஆக நடித்திருக்கும் டாம் ஹேங்க்ஸ் (Tom Hanks) மற்றும் அவரின் நண்பராக வரும் டேவிட் மோஸ் (David Morse). டாம் ஹேங்கின் கதாபாத்திரத்திரம் அவரால் முடியக்கூடிய காரியம். மனிதன் சும்மா ஜுஜுபி சாப்பிடுவது போல செய்திருக்கிறார். ஆனாலும் Forrest Gumpஉடன் ஒப்பிடும் போது அது கொஞ்சம் ஒஸ்தி தான். மேலும் எனக்கு பேர்ஸியாக நடித்தவரின் நடிப்பும் பிடித்திருந்தது. எம் மனதில் ஒரு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அவரின் நடிப்பு அமைந்திருப்பது அவரின் நடிப்பின் திறமையை காட்டும்.

படத்தில் பேர்ஸி ஒரு கைதிக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் போது அவனை வேண்டுமென்றே துடிக்கவைத்து ரசித்து கொலை செய்யும் விதம் அனைத்து விதமான கொடுமைகளின் உச்சம். இன்னும் உலகத்தில் மனிதாபிமானம் எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் உள்ளது என்பதை காட்டும் அந்தக் காட்சி. மின்சார நாற்காலி என்பது தூக்குமேடையை விட எவ்வளவு விபரீதமானது என்பதை படத்தைப் பார்க்கும் அனைவரும் உணர்வர்.படத்தின் இறுதிக் காட்சிகள் அருமை. மரணத்தை எதிர்நோக்கியுள்ள வயதான போல் "We each owe a death - there are no exceptions - but, oh God, sometimes the Green Mile seems so long" எனக் கூறும் வரிகள் அற்புதம்.

நாம் அனைவருமே மரணத்தை நோக்கி க்ரீன் மைலை நடந்து கொண்டிருக்கிறோம். விதியைப் பொறுத்து நடக்கும் நேரம் மாறுபடும்.


மூன்று மணிநேரம் முடிந்தபின் The Shawshank Redemption போன்ற அளவிற்கு உணர்வு வராவிட்டாலும் ஒரு சின்ன எஃபெக்ட்டும் ஒரு நல்ல ஃபீல் குட் படம் பார்த்த உணர்வும் வருவது நிச்சயம். பார்த்துட்டு சொல்லுங்க.

படத்தின் ட்ரெயிலர் இங்கே :என் ரேடிங் -

The Green Mile : 8.8 / 10

-------------------------------------------------------------------------------------------

Download Links :

டைரக்ட் லிங்கில் பதிவிறக்க இங்கே க்ளிக்குங்கள்

டொரண்டில் பதிவிறக்க இங்கே க்ளிக்குங்கள்

------------------------------------------------------------------------------------------- 

அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்

ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

19 comments:

 1. yes you are right it's not good as shawshank redemption

  ReplyDelete
 2. தெ சவ்ஷாங்க் ரெடெம்ஷன் பார்த்த அதே ஆத்மார்த்தமான திருப்தியில் இந்த படத்தை காண நினைத்து மறந்து போனதே உணமை..இப்பொழுது மீண்டும் இந்த பதிவின் மூலம் ஞாபகபடுத்தியதோடு கூடவே நல்ல அறிமுகத்தையு,ம் வழங்கியுள்ள தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..தொடர்ந்து நல்ல படங்களை எதிர்ப்பார்க்கிறேன்....

  ReplyDelete
 3. வணக்கம் நண்பா,
  இப் படத்தை நான் ஏலவே பார்த்திருக்கிறேன்.
  ஆனாலும் உங்கள் விமர்சனம், கதையை ட்ரீம் பண்ணிய விதம் எல்லாமே அருமை.

  அப்புறமா பதிவுகளில் ட்ரானெட் லிங் கொடுப்பதனை தவிர்க்கலாம். காரணம் அமெரிக்கா போன்ற நாடுகளில் torrent தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வாசகர்களின் இணைய உலவி மூலம் இது தொடர்பாக ஏதாவது இணையக் கம்பனிகள் நோட் பண்ணினால் நமது கூகுள் ப்ளாக்கருக்கு ஆப்பு வைத்திடுவாங்க. நீங்க torrent இல் எந்த முகவரியில் எத்தனையாவது இணைப்பில் படத்தினை பெறலாம் என்று சொன்னாலே சிறப்பாக இருக்கும்.
  இதுவும் ஓர் வாசகனின் மனு! பரிசீலனை செய்வீங்க என நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. தமிழ்மணத்திற்கு என்னாச்ச்?

  வேர்ட் வெரிப்பிக்கேசன் நீக்கியமைக்கு நன்றி.

  ReplyDelete
 5. @நிரூபன்

  தமிழ்மணத்திற்கு என்ன??? பதிவை திரட்டியாச்சு? வொய் பாஸ்?

  ReplyDelete
 6. @Kumaran

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமரன்.

  ReplyDelete
 7. // நீங்க torrent இல் எந்த முகவரியில் எத்தனையாவது இணைப்பில் படத்தினை பெறலாம் என்று சொன்னாலே சிறப்பாக இருக்கும். //

  விளங்கவில்லை நீங்கள் சொல்வது.

  ReplyDelete
 8. நல்ல படம் பாஸ்.....

  ReplyDelete
 9. பாஸ், தமிழ்மணத்தில் உங்க பதிவுக்கு ஓட்டுப் போட முடியலையே! ஏன் பாஸ்?

  ReplyDelete
 10. பாஸ்...நான் என்ன சொல்றேன் என்றால்...
  The Green Mile என்று torrent இல் தேடும் போது இவ்வாறு இணைப்புக்கள் கிடைக்கும் அல்லவா?
  இந்த இணைப்பில் சிறந்த இணைப்பின் பெயரைக் கொடுத்தாலே நாம தேடி எடுத்துக் கொள்வோம் அல்லவா?

  The Green Mile (1999) torrent download locations

  1337x.org The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA movies h.264 x264
  2 hours ago

  thepiratebay.org The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA video movies
  9 days ago

  btjunkie.org The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA video
  6 hours ago

  btmon.com The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA movies
  2 hours ago

  torlock.com The Green Mile 1999 movies
  2 days ago

  fenopy.eu The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA movies
  3 days ago

  monova.org The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA movies
  2 days ago

  seedpeer.com The Green Mile 1999 BRRip x264 MKV by RiddlerA

  ReplyDelete
 11. @நிரூபன்

  yah ... அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன். உங்கள் நேரத்தை ஒதுக்கி சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. நல்ல ஒரு பீல் குட் திரைப்படம். படத்தோட சுவாரசியம் குறையக்கூடாது என்று நீங்கள் ட்ரிம் செய்து விமர்சனப் பதிவு செய்திருக்கும் அளவு கச்சிதம்.

  ReplyDelete
 13. படம் பார்க்கல சகோ விமர்சனம் பார்த்ததால் முன்னோட்டம் மட்டும் பார்த்துப் போகிறேன்...

  ReplyDelete
 14. ஆங்கிலப்படங்கள் குறித்த வலைப்பூவை எழுதும் தங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் எழுதியதில் Rise of the Planet of the Apes, பார்த்துள்ளேன். How to train your dragon, Ratatouille டி.வி.டி. இருந்தும் இன்னும் பார்க்கவில்லை.

  ReplyDelete
 15. @! சிவகுமார் !

  வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சிவகுமார்.

  ReplyDelete
 16. Tom hanks is a fabulous actor.I have all the films acted by him. Forrest Gump is his Masterpiece.In this review You could have still pointed out more about its enhancing music and some memorable sequences. some of the negative aspects too. but as u hav mentioned,dis is a short review. it is a common mentality among public...nt to watch some gud movies wen mistakes r pointd out...even dey r so good overwhelming those aspects

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...