நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Body of Lies [2008]

folderThe Blade Runner, Gladiator, Hannibal, Black Hawk Down எனப் பல வெற்றிப் படங்களை இயக்கிய ரிட்லி ஸ்கொட் இன் இன்னொரு படைப்பு Body of Lies. Titanicஇல் அப்பாவிப் பையனாக வந்தது முதல் Inception, Shutter Island வரை நடிப்பில் கலக்கிய லியனார்டோ டிகாப்ரியோ, A Beautiful Mind, Gladiator, 3:10 to Yuma என்பவற்றில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய ரசல் க்ரோவ் மற்றும் மார்க் ஸ்ட்ரோங் என சிறந்த நடிகர்கள் கூட்டணி. போதாக்குறைக்கு உளவாளிகள் பற்றிய படம் என்பதாலும்,ட்ரெயிலர் வேறு அட்டகாசமாக இருந்ததாலும் ரொம்ப சுவாரஸ்யத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட 75வீதத்தை இந்தக் கூட்டணி நிறைவேற்றியுள்ளனர் ஆனால் நான் நினைத்தது போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக.



= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை
“I and the public know
What all schoolchildren learn,
Those to whom evil is done
Do evil in return."
 
படம் இந்த கவிதை வரிகளுடன் தொடங்குகிறது. உண்மையில் இந்த வரிகள் உலகப்போரின் போது ஜேர்மனியை மையப்படுத்தி எழுதப்பட்டது. (இலங்கைக்கு நன்றாகவே ஒத்துப்போகும் வரிகள்) ஆனால் சி.ஐ.ஏ உளவாளிகளை சுற்றி இடம்பெறும் படத்திற்கு ஏன் இந்த வரிகளை போட்டாங்கன்னு இன்னும் புரியல. ஒருவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த வரிகள் ஒத்துவருமோ தெரியாது. (நமக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்லைங்க. ஏன்னு தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க).
 
Body of Lies-fanart
 
ரோஜர் ஃபெரிஸ் ஒரு சி.ஐ.ஏ உளவாளி. (அவனுக்கு கல்யாணமாகி டிவோர்ஸ் ஆகிவிட்டது என்பது மட்டும் ஒரு வசனத்தின் மூலம் தெரியவரும்) அவனுடைய சூப்பர்வைஸர் இன் சார்ஜ் எட் ஹொஃப்மான். யூரோப் முழுவதும் குண்டுகள் வைக்க திட்டமிடும் ஒரு தீவிரவாதக் கும்பலைப் பற்றி ஆராய்ந்து அல்-ஸலீம் எனும் அதன் தலைவனைக் கைது செய்ய ஈராக்கில் தங்கியிருக்கிறான். ஆனால் எந்தத் தகவலையும் சேகரிக்க வழி இல்லை. ஏனென்றால் அந்தக் கும்பல் தொடர்புகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என எந்த முறையையும் பயன்படுத்துவதில்லை. ஓன்லி மௌத் அன்ட் டைரக் டீலிங். அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு துப்பு கொடுப்பதற்காக வரும் நிஸார் எனும் மனிதனும் எட்டின் அவசரத்தன்மையால் தீவிரவாதிகளிடம் மாட்டி கடத்தப் படும்போது ரோஜர் சித்திரவதைகளிடம் இருந்து காப்பாற்ற நிஸாரை சுட்டுக் கொல்கிறான். கிடைத்ததையும் தான் சொல்லிக் கேட்காமல் சொதப்பியதற்காக ரோஜர் எட்டிடம் கோபம் கொள்கிறான்.
 
அங்குத் தேடி இங்குத் தேடி கிடைத்த தகவல்கள் மூலம் கடைசியாக ரோஜர் ஜோர்டானுக்கு வந்து சேர்கிறான். அங்கு உதவிக்காக ஹானி சலாம் எனும் ஜோர்டானிய உளவுத்துறையின் தலைமை அதிகாரியை சந்திக்கிறான்.உதவி செய்ய சம்மதிக்கும் ஹானி கூறும் ஒரே வசனம் “என்னிடம் பொய் கூறக்கூடாது. இந்த விடயம் தொடர்பாக எதையும் எனக்குத் தெரியாமல் செய்யக்கூடாது”. ஒரு பக்கம் தனக்குத் அறிவிக்காமல், அவசரக்குடுக்கைப் போல செயல்படும் அதிகாரி எட், “எதையும் மறைக்காதே. அது உடம்புக்கு நல்லதல்ல” என்று எச்சரிக்கும் ஹானி என மற்றப்பக்கம் என இருவருக்கும் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் ரோஜர் தீவிரவாதிக் கும்பல் பற்றிய பிரச்சினைகள், அமெரிக்க-ஜோர்டானிய உளவுச் சூழ்ச்சிகளை, படத்தின் இடையில் வரும் ஒரு நர்ஸுடனான காதல் என்பவற்றை எப்படி சமாளித்தான் என்பது திரையில்.
 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
 

அட … ரொம்ப நல்ல டீமா இருக்கே. ஸ்பை மூவி வேறு. இந்தப் படமும் நம்ம ஜேம்ஸ்பாண்ட் வகைல ஒன்னு தான் நினைச்சுப் பார்த்தா … இட்ஸ் எ டோடலி டிஃபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ். வழக்கமான உளவாளிப் படங்களில் வருவது போல அதிரடி சண்டைக்காட்சிகள், துப்பாக்கி வச்ச கார்கள், படத்துல வர்ற எல்லா பெண்களுடனும் படுக்கும் உளவாளி (நான் சொல்ற உதாரணம் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு செட் ஆகுதே) என்றும் இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் 20 x 20 அறைக்குள் இருந்து தீவிரவாதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை முறியடிக்கும் படமாகவும் அல்லாமல் உண்மையான ஒரு உளவாளியின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்காங்க. 



thumb6

அதுக்காக படம் கொலகொலான்னு வெறும் சப்பையாப் போகும்ணு கணக்கு போடாதீங்க. ஆக்சன் காட்சிகள், கொஞ்சம் காதல் காட்சிகள், சில வன்முறை அப்படின்னு ஒரு ஸ்பை மூவியில் எதிர்ப்பார்க்கும் அத்தனை விடயமும் இதில் உண்டு.  ஆனால் இந்தப் படத்திற்கு காதல் கத்திரிக்கா இல்லாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அது வலுக்கட்டாயமா திணிக்கப் பட்டதாகவே தெரிகிறது.

படத்தில் வரும் முக்கிய நடிகர்கள் அனைவரின் நடிப்பு பற்றி குறை எதுவும் சொல்ல இல்லீங்க. ரோஜராக வரும் லியனார்டோ டிகாப்ரியோ, எட் ஆக வரும் ரசல் க்ரோவ், ஹானி ஆக நடித்திருக்கும் மார்க் ஸ்ட்ரோங் இலிருந்து அந்த நர்ஸாக வரும் பெண் வரை எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. லியனார்டோ பற்றி சொல்வதற்கில்லை. நல்லா நடிச்சிருக்கார். ஆனா என்ன தான் ஒட்டுத் தாடி வைத்தாலும் டைட்டானிக்கில் வந்த அந்த அப்பாவி ஜாக்கின் முகம் தெரிகிறது. ரசல் இப்படத்திற்காக கொஞ்சம் உடம்பு போட்டிருக்காரு. பின்விளைவுகளை யோசிக்காத அவசரக்குடுக்கையாக, சிலசமயங்களில் நமக்கு அந்த கேரக்டர் மேல் கோபம் வரும் அளவிற்கு நடிச்சிருக்கார். ஆனாலும் எனக்கு மார்க் ஸ்ட்ரோங்கின் நடிப்பு மிகவும் பிடித்தது. அந்த ஹான்ட்ஸம் லுக், அமைதியாக பேச்சு, காதுல பூ சுத்திட்டாங்க என தெரிந்ததும் கோபப்படும் இடம் என வரும் இடங்களில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். “You Americans, you are incapable of secrecy because you are a Democracy” எனக் கூறும் இடம் நச்.

படத்தின் இன்னொரு பலம் கமெரா. ஒரு இடத்தில் கார் RPG அடிபட்டு தரையில் உருண்டு செல்லும்போது அதற்குள் இருந்து எடுத்த விதம், மற்றும் அந்த உளவறியும் ஆளில்லா விமானத்திலிருந்து பார்ப்பது போன்ற ஏரியல் ஷாட்கள் என பல இடங்களில் கமெரா புகுந்து விளையாடி இருக்கிறது.



thumb5

படத்தின் கதை அமெரிக்கா-தீவிரவாதம்-மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய மிகவும் சூடான டாபிக்கை கொண்டு எடுத்ததால் டுபாயில் படத்தை எடுக்க தடை விதித்து விட்டார்களாம். பிறகு அமெரிக்காவுலயே செட் போட்டு எடுத்தாங்களாம். ரிட்லி உண்மையில் துப்பறியும் ஒரு உளவாளியின் பார்வையில் உலகம் எப்படி இருக்கும் என எடுத்துக் காட்டியிருக்கிறார். தத்ரூபமான திரைக்கதை, நல்ல நடிப்பு, நிறைய ட்விஸ்ட், சஸ்பென்ஸ் உங்களை படத்திற்குள் ஈர்த்தாலும் தேவையில்லாத காதல் காட்சிகள் வந்து ஒரு ஒட்டுதலை இல்லாமல் பண்ணிடுது.

ஆனால் கொஞ்சம் வன்முறையுள்ள, செக்ஸ் சீன்கள் இல்லாத, ட்விஸ்டுகளுடனான செயற்கைத்தனம் இல்லாத ஒரு உளவறியும் படம் ஒன்று பார்க்கணும்னு நினைச்சீங்கண்ணா திஸ் இஸ் எ வெரி குட் சாய்ஸ். அட்லீஸ்ட் நடிப்புக்காக சரி பார்க்கலாம்.



Body of Lies : 82/100

படத்தின் ட்ரெயிலர்




டிஸ்கி – அண்மையில் பார்த்த 5 படங்கள் Widget மற்றும் சில விடயங்களை கீழே உள்ள புதுப் பகுதியில் போட்டுள்ளேன். அதனால் இனி அடிக்கடி அந்த பகுதி பதிவுகளை விட அந்தப் பகுதி அதிகமாக அப்டேட் ஆகும். நான்காவது டேப்பில் தற்போதைக்கு, இனி வரவுள்ள புதிய ஹாலிவுட் திரைப்படங்களின் ட்ரெயிலர்கள் பற்றி போட யோசிக்கிறேன். யாராவது இன்னும் அதைப் பிரயோசனமாக்க இன்னும் நல்ல ஐடியாவக் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும் சாமி.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

36 comments:

  1. எப்படியும் பார்த்திட வேண்டுமென்று நினைத்து ஒவ்வொரு முறையும் மிஸ் ஆகி போன படங்களில் இதுவும் ஒன்று.பார்க்க நினைத்த முதல் காரணம் ரட்லி ஸ்காட் தான்..அப்போது எலியன் படம் பார்த்த டைம்.மனுஷன் அசத்தியிருப்பார்.

    இருக்கிற படங்களோட லிஸ்டுல, இந்த படம் இப்ப பார்க்க முடியும் என்கிற நம்பிக்கை இல்லை நண்பரே.ஆனால், கண்டிப்பா பார்ப்பேன்..நான் முன்பே சொல்லிருந்தேன்.விமர்சனத்துல வர வர பின்னி எடுக்கிறீங்க.தொடரட்டும் தங்கள் பணி.காத்திருக்கிறேன் அடுத்த பதிவை எண்ணி.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    அப்புறம் அந்த Widget எல்லாம் அப்படியே இருக்கட்டும்..அப்பப்ப அப்டேட் பண்ணுங்க.நல்லாருக்கு.

    ReplyDelete
  2. நான் The Departed படத்த பார்த்ததுல இருந்து தான், டிகாப்ரியோ ஆக்ஷன்லயும் கலக்குவார்னு தெரிஞ்சுகிட்டேன். ஹாலிவுட்டோட Chocolate Boyயா இருந்துகிட்டு ஒரு வேரியோஷனோட படங்கள் கொடுக்குறதுல இருந்தே, அவரோட Dedication நன்றாக புலப்படும்!

    இந்தப் படம் இன்னும் பார்க்கலை.. கண்டிப்பா பார்த்துடுவேன்!

    பி்.கு - கீழே உள்ள widget பிரமாதம்! "விமர்சனம் எழுதியவை"க்கு கீழே உள்ள போஸ்டர்களுக்கு, உங்க பதிவுகளோட லிங்க்கையே கொடுக்கலாமே! (ஏன் ட்ரெயிலர் லிங்க் கொடுக்கிறீர்கள்?)

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா,
    நல்லதோர் விமர்சனப் பகிர்வு,

    கவிதை வரிகள் இலங்கைக்கும் ஒத்துப் போகும் என்பது உண்மை தான்.
    டெவில்களைப் பற்றி பேச வேண்டுமானால் அதிகம் பேசலா! ஆனால் நாளை நாம் இருப்போமா என்பது கேள்விக் குறியே..

    ReplyDelete
  4. விமர்சனப் பகிர்வு, கதை பற்றிய சொல்லுகை, படம் பார்க்க தூண்டிய எழுத்துக்கள், ஏனைய நடிகர்களோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது யாவுமே கலக்கல்.

    டெம்பிளேட்டின் கீழே உள்ள ஸ்லைட் ஸோ ஹெட்ஜெட்டும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. @JZ

    இல்ல ... அதான் ஹோம் பேஜ்ல லிஸ்டில் உள்ள படங்களின் லிங்க் இருக்கே அப்படின்னு தான் ட்ரெயிலர் லிங்க் கொடுத்தேன். ஆனால் போஸ்ட் ஒன்றில் இருக்கும் போது என் பதிவுகளுக்கு லிங்க் கொடுப்பது தேவை போலத் தான் தெரியுது. குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  6. @நிரூபன்

    //நாளை நாம இருப்பமா என்பது கேள்விக்குறியே//
    முற்றிலும் உண்மை நிரூ.

    ReplyDelete
  7. @Kumaran

    பின்னூட்டத்திற்கு நன்றி குமரன். கொஞ்ச நாளா நீங்க அமைதியாக இருப்பதைப் பார்த்தால் ஏதோ பெரிய தொடர் ஒன்று வரப்போவது போல தோன்றுகிறது. பிஸியா இருக்கீங்க போல.

    ReplyDelete
  8. எப்பயும் போல விமர்சனம் கலக்கல்.

    ReplyDelete
  9. @நிரூபன்

    நண்பா ... தமிழ்மணம் ஓட்டுப்பட்டை சமர்ப்பித்த பின்பும் Submit to Tamilmanam என்றே காட்டுகிறதே?

    ReplyDelete
  10. நண்பா, என்ன சொல்றது? வழக்கம் போல விமர்சனம் அருமை! நீங்க எதையாவது எழுதி படத்தை பார்க்கத் தூண்டுறீங்க! ஆனா நமக்குத்தான் நேரமே இல்ல! தொடருங்கள் நண்பா!

    ReplyDelete
  11. ulavu linkஐத் தூக்கி கடாசுங்க...ரொம்ப ரொம்ப ரொம்ப நேரம் ஆகியும் load ஆகலை. அது எப்போதுமே இப்படித்தான்.

    ReplyDelete
  12. பிறகு வந்து மற்றவற்றை படிக்கிறேன். உலவு பிரச்னை பண்ணுது.ஏழு நிமிடம் ஆகிறது ஒரு பதிவு லோடு ஆக...நன்றி.

    ReplyDelete
  13. @Chilled beers

    உலவு போலவே தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும் பிரச்சினை கொடுக்கிறது. வோட்டுப் போடுவதற்கு ஏற்றாற் போல அது மாறவில்லை. ஏன் என்று தெரியுமா?

    ReplyDelete
  14. அண்ணே,
    உலவு, வேலைக்கு ஆகாது.
    ரொம்ப லோட்.
    அத்தோட அங்கே இருந்து ஆட்கள் யாரும் வருவதில்லை

    பீர்ட்பானர் மறுபடியும் இணைச்சு வைச்சிருக்கிறீங்க.
    அதனை நீக்கினால் தான் தமிழ்மணத்தில் இணைக்க முடியும்.
    நாம ஓட்டும் போட முடியும்.

    ReplyDelete
  15. http://tamilveli.com/

    இங்கேயும் உங்கள் பதிவினை இணைத்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்,.

    ட்ரை பண்ணிப் பாருங்க
    இந்த தளத்திற்கு ஓட்டுப்பட்டை ஏதும் வேண்டியதில்லை

    ReplyDelete
  16. @நிரூபன்

    உழவுங்கற எழவை தூக்கியாச்சு. ஃபீட்பர்னர் எடுத்தாச்சு.

    ReplyDelete
  17. @நிரூபன்

    நல்ல அறிமுகமா இருக்கு. நன்றி பாஸ்.

    ReplyDelete
  18. http://www.thiraimanam.com/

    இந்தப் பக்கத்தில் தங்களின் இடது கைப் பக்கத்தில் உங்க பதிவு இருக்கும் பாருங்க.

    நான் இப்போ மொதல் ஓட்டு போட்டிருக்கேன்.

    கரெக்டா/

    ReplyDelete
  19. @நிரூபன்

    ஐ .. ஆமா. இதுக்கு, கீழே உள்ள மற்ற பதிவுகளுக்கு நேரடியாக தமிழ்மணத்திலிருந்து நான் எப்படி வோட்டு போடுறது? அது முடியுமா?

    ReplyDelete
  20. மற்ற பதிவுகள் பத்தி கவலையை விடுங்க
    ஒவ்வோர் புதுப் பதிவுகளில் இருந்தும் ஆரம்பியுங்க.

    ReplyDelete
  21. @நிரூபன்

    அது இல்ல. நம்ம பதிவுகள் இல்லாம மற்றவர்களின் பதிவுகளுக்கு நேரடியாக தமிழ்மணத்திலிருந்து ஓட்டு போட முடியுமா?

    ReplyDelete
  22. ஆமா தல
    உங்க இடது கைப் பக்கம் மேலே உள்ள கையை கிளிக் பண்ணினா ப்ளஸ் ஓட்டு போட முடியும்,.

    பதிவு பிடிக்கலைன்னா வலது பக்க கையை கிளிக்கி மைன்ஸ் குத்திக்க முடியும்,.

    ReplyDelete
  23. பாஸ்,
    நல்ல படம்...ஆனா நான் இந்த படத்தை Departed பார்த்திட்டு பார்த்தால எனக்கு இது சாதாரண படம் மாதிரி தெரிஞ்சுது............உளவாளி படம் என்பதால் நான் இதை Departed அளவுக்கு எதிர் பார்த்து இருக்க கூடாது.... மற்ற படி நல்ல சுவாரிசியமா எழுதி இருக்கேங்க...

    ReplyDelete
  24. அப்புறம் தமிழ்மணம் பிரச்சனைக்கு இந்த லிங்க் ட்ரை பன்னி பாருங்க......
    http://www.bloggernanban.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  25. விமர்சனம் நல்லா இருக்குங்க!

    ReplyDelete
  26. @ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

    ஹாலிவுட்ல உங்களையெல்லாம் படம் பார்க்க வைக்க காசு வாங்குறோம்ல. அதான்.

    ReplyDelete
  27. இந்த படத்தை இருமுறை டவுன்லோட் செய்து முதல் அரைமணி நேரம் போரடித்ததால் பார்க்காமல் விட்டு விட்டேன். இந்த முறை பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  28. இப்போதுதான் உங்கள் தளம் வருகிறேன்.. எல்லாம் ஹாலியூட் படங்களை பற்றியதுதானா..

    எனக்கும் சில படங்கள் பிடிக்கும்.. எல்லாம் பிடிப்பதில்லை காரணம் மொழிப்பிரச்சினை.. மொழியைத்தாண்டி ரசிக்கக்கூடிய எல்லா படங்களும் பிடிக்க்கும் உதாரணதுக்கு babel,127 hours மற்றும் சில ஈரானிய படங்கள்

    ReplyDelete
  29. @Riyas
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரியாஸ். இந்தத் தளத்தை ஆரம்பித்ததன் முக்கிய நோக்கம் ஆங்கிலப் படங்களைப் பகிரவே.

    எதிர்காலத்தில் பிறமொழிப்படங்கள், ஹிந்திப் படங்கள் பற்றி எழுதினாலும் எழுதுவேன்.

    ReplyDelete
  30. விமர்சனத்தைப் பார்த்தால் உடனே லிபர்ட்டிக்கு போகத்தூண்டுது இங்கே நேரம் பிரச்சனை சகோ படம்பார்த்த காலம் போச்சு.

    ReplyDelete
  31. என்னது? படத்துல சீன் இல்லையா? அப்போ சரி நான் பார்க்கலாம் ஹி ஹி

    ReplyDelete
  32. @சி.பி.செந்தில்குமார்

    அய்யோ ... சி.பி கில்மா இல்லாத படம் பார்க்கப் போறாரா??? இப்பவே கண்ண கட்டுதே.

    ReplyDelete
  33. படம் பார்க்கலாம் போல

    ReplyDelete
  34. இந்தத் திரைப்படத்தையும் இன்னும் பார்க்கவில்லை ,பார்த்துவிட்டு சொல்கிறேன் நன்றி

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...