நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

50/50 [2011]

I am sorry ... உங்களுக்கு கான்சர்.
.................................
.................................
.................................
டாக்டர் - சார் ... சார் ... நான் பேசுறது கேக்குதா? (எப்படிய்யா கேக்கும்? எப்படி கேக்கும்? அதான் எல்லாம் போச்சே.)
இப்படி டாக்டர் உங்களிடம் சொல்லிவிட்டால் எப்படி இருக்கும்? சொன்னால் அனேகமானவர்களின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும். முந்தி எல்லாம் தமிழ் சினிமால இப்படி ஒரு சீன் வந்தா போதும். ஹீரோ அவர் இஷ்டத்திற்கு உலகமே இருண்டு போய் சுற்றி இருக்கும் எல்லாமே Out-of-Focus ஆகின மாதிரி எல்லாம் ஆக்சன் பண்ணி சோகப்பாட்டு பாடி நம்ம கண்ணுல தண்ணி வந்து கடைசில இம்சை தாங்கமுடியாம நாமளே “பேசாம சீக்கிரம் செத்து தொலைப்பா” என்று சொல்லிவிடுற ரேஞ்சுக்கு இருக்கும் அவரின் நடிப்பு.
இங்கும் அப்படித்தான். ஹீரோக்கு முள்ளந்தண்டில் ஷ்வனோமா நியூரோ#%*&^#%^#( ன்னு வாய்ல நுழையாத ஒரு அரிய வகை ட்யூமர். ( பேசாம கான்சர்னு சொல்லேன்யா? நாம இத வச்சி எக்ஸாமா எழுதப்போறோம்? ) ஹீரோக்கு குணமாகக்கூடிய வாய்ப்புத் தான் படத்தின் டைட்டில்.

50/50
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
படத்தின் கதை :
 
நம் படத்தோட ஹீரோ அடம் (Adam). ரேடியோ ஒன்றில் ப்ரொடியுசர். அழகான கேர்ள்பிரண்ட் ரேசல் (Rachel). கேன்சர் பற்றிய நியூஸ் கேள்விப்பட்டதும் அப்படியே ஷாக் ஆகிடுறாரு. ஆனாலும் அவனுடைய கேர்ள்பிரண்ட் அடமுக்கு துணையாக இருப்பேன் எனக் கூறி ஆறுதல் அளிக்கிறாள். கூடவே ஒரு நாயும் வாங்கிக் கொடுக்கிறாள். ஆனால் ஹாஸ்பிட்டலுக்கு வராமல் “எனக்கு அங்குள்ள நெகடிவ் எனர்ஜி ஒத்துவரவில்லை என அதற்கு காரணமும் கூறுகிறாள். (சம்திங் ராங்)


அடமின் க்ளோஸ் பிரண்ட் கைல் (Kyle) நோய் பற்றிக் கேள்விப்பட்டதும் இதுவும் சூதாட்டம் போலத் தான். பிழைக்க நிச்சயம் வாய்ப்புண்டு என தேற்றுகிறான். அத்தோடு முக்கியமான நேரங்களிலும் (மொட்டை அடிப்பது, கான்சர் பேஷன்ட்களுடன் நேரம் செலவளிப்பது) அவனுடன் கூட இருந்து கவனிக்கிறான். இடையில் அடமின் தெரபிஸ்ட்டாக வரும் காதரீன் (Katherine) மீது அடமிற்கு ஒரு சின்ன இது. கைல் அடமின் நோயை வைத்து பார் போன்றவற்றில் பெண்களை அனுதாபம் மூலம் மடக்க முயற்சிக்கிறான்.

சில நாட்களில் அடமிற்கு அவனுடைய கேர்ள்பிரண்ட் அவளுடன் வேலை செய்யும் இன்னொரு ஆர்டிஸ்டுடன் தொடர்பு வைத்திருப்பது கைல் மூலமாக தெரியவருகிறது. (நான் சொன்னேன்ல ... சம்திங் ராங்) உடனே வீட்டை விட்டு துரத்தி விடுகிறான். பின் நண்பனும் தன் நோயை வைத்து தன்னை அவனின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறான் என அவனையும் விட்டு விலகுகிறான். ஆனால் அன்றிரவே கைல் புல்லா குடிச்சிட்டு மட்டையாகிவிடுவதால் அவனை வீட்டிற்கு விடச் செல்லும்போது, அங்கு கைல் Facing Cancer Together என்ற ஒரு புத்தகத்தை படிப்பது தெரியவருகிறது.


அவனுடைய சின்ன லவ் என்ன ஆயிற்று? அடம் பிழைத்தானா? போன்றவை படத்தில். இறுதியில் வாழ்க்கைக்கு முக்கியமானவை என்ன, முக்கியமானவர்கள் யார் என்பதை தெரிந்துகொள்கிறான் அடம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நான் கான்சரை வைத்து வெளிவந்த ஒரு சில படங்கள் பார்த்திருந்தாலும் (A Walk to Remember ...) சற்று சிரிக்கவைத்த காமெடியான படம் என்றால் அது இதுதான். (ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு) செயற்கைத்தனமான செய்கைகள் இல்லாத காரணத்தினாலோ, அல்லது மிகவும் யதார்த்தமான காட்சிகளாலோ சில இடங்களில் நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

thumb6

இந்தப் படம் திரைக்கதை எழுதிய Will Reiser என்பவரின் வாழ்க்கையை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது. அவரும் நம் ஹீரோ போல முதுகெலும்பில் ஏற்பட்ட கேன்சரை எதிர்கொண்ட போது ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அப்போது அவருக்கு உதவியாக இருந்தவரும் படத்தில் நடிக்கும் செத் ரோகன்.

அடம் ஆக நடிப்பவர் 500 Days of Summer, Inception இல் நடித்த கோர்டன்-லெவிட் (Gordon-Levitt). நம் தனுஷ் மாதிரி பக்கத்து வீட்டுப் பையன் போல மிகவும் சாதாரணமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ஆனாலும் முந்தைய படம் போல இல்லாமல் இதில் சற்று உணர்ச்சிகள் கூடிய ஒரு பாத்திரம். ஆனாலும் அசால்டாக நடித்திருக்கிறார். கான்சர் பற்றிக் கேள்விப்பட்டதும் டாக்டரிடம் சாதாரண ஒரு இளைஞன் போல “ஆனாலும் நான் குணமாகிவிடுவேன். இல்லையா” எனக் கேட்கும் இடமும், ஆபரேஷனுக்கு முன் அட்ஸ்ஹைமர்ஸ் நோயுடைய தந்தையிடம் பேசும் இடமும் அருமை.

அடுத்த முக்கிய கதாபாத்திரம் என்றால் அது கைல் கதாபாத்திரத்தில் நடித்த செத் ரோகன் (Seth Rogen). நிஜ வாழ்க்கையில் செய்ததையே மீண்டும் நடிப்பதாலோ என்னவோ அடமுடன் சேர்ந்து வரும் சீன்களில் பட்டைய கிளப்புறார். அந்த சீன்கள் அவருடைய நடிப்பிற்கு நன்றாகவே சூட் ஆகிறது. மற்றும் தெரபிஸ்டாக நடித்த Anna Kendrick, அடமின் பெற்றோராக வருபவர்கள், கான்சர் பேஷன்டாக வருபவர்கள் என அனைவரின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

24 வயதான தெரபிஸ்ட்டுடன் நேரம் செலவளிக்கும் போது அவள் ஆறுதலுக்காக தொடுவது போன்றவற்றை முதலில் சங்கடத்துடன், கோபத்துடன் ஒதுக்கும் அடம், பின்னர் சற்று சற்றாக அவளுடன் ஒரு கெமிஸ்ட்ரியை வளர்த்துக் கொள்ளும் விதத்தை காட்டியது அழகு.

thumb2Title: 50/50
Cast: Joseph Gordon-Levitt, Seth Rogen, Anna Kendrick
Language: English
Release Date: September 30, 2011
Directed By: Jonathan Levine
Runtime: 100 min
Distributed by : Summit Entertainment (USA)
Budget: $8 million
Box Office: $39,187,783 


50/50 : 100/100

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

20 comments:

 1. // பேசாம கான்சர்னு சொல்லேன்யா? நாம இத வச்சி எக்ஸாமா எழுதப்போறோம்? //

  செம நக்கல்...

  ReplyDelete
 2. நேற்று தான் டோரண்டில் பார்த்தேன். பல நல்ல தகவல்களோடு நல்ல விமர்சனம். இந்த படத்தை பார்க்க வேண்டிமென வைத்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்கிறேன். :)

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம் ! தொடர்ந்து உலக படங்களை அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள் ! முடிந்தால் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவிகளை அறிமுகப்படுத்தவும் !

  ReplyDelete
 4. விமர்சனம் சூப்பர்.

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே ...

  ReplyDelete
 6. விமர்சனம் நல்லா இருக்கு மாப்ள!

  ReplyDelete
 7. சில வேலைங்க அதான் இந்த பக்கம் வருல..ஆனால், அப்பயே நெனைச்சேன் நல்ல படமா போட்டிருப்பீங்கனு..கரைக்டா எழுதி இருக்கீங்க.

  உங்க விமர்சனம் பற்றி என்ன சொல்ல..வர வர கலக்கலா எழுதுரீங்க..தொடரட்டும் தங்கள் பணி.

  ReplyDelete
 8. முந்தி எல்லாம் தமிழ் சினிமால இப்படி ஒரு சீன் வந்தா போதும். ஹீரோ அவர் இஷ்டத்திற்கு உலகமே இருண்டு போய் சுற்றி இருக்கும் எல்லாமே Out-of-Focus ஆகின மாதிரி எல்லாம் ஆக்சன் பண்ணி சோகப்பாட்டு பாடி நம்ம கண்ணுல தண்ணி வந்து கடைசில இம்சை தாங்கமுடியாம நாமளே “பேசாம சீக்கிரம் செத்து தொலைப்பா” என்று சொல்லிவிடுற ரேஞ்சுக்கு இருக்கும் அவரின் நடிப்பு.
  >>>
  தமிழ் சினிமாவை இப்படியா நக்கல் அடிக்குறது தம்பி? ஹாலிவுட் ல நம்ம பவர் ஸ்டாருக்கு ஈடான நடிகரை காட்டுங்க பார்க்கலாம்.

  ReplyDelete
 9. @ராஜி

  வருகைக்கு மிகவும் நன்றி சிஸ்டர் (சகோதரின்னு தமிழ்ல பேசி ஹாலிவுட் பெருமைய கெடுக்க விரும்பல ஹி ஹி)

  நம்ம பவர் ஸ்டார போயும் போயும் கேவலம் ஹாலிவுட்டுடன் ஒப்பிடுறீங்களே. அவர் நடிப்பு ரேஞ்சுக்கு ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் கால் தூசு தூசு ...

  ReplyDelete
 10. அட நல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்களே! இந்தப் படத்தை நான் பார்க்கலை! பார்க்கத் தூண்டுது விமர்சனம்!

  ReplyDelete
 11. @ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

  வாங்க சார். நம்ம வலைத்தளம் பக்கமும் தலைய காட்டினதுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 12. வணக்கம் சகோ,
  ஓர் அன்பு வேண்டுகோள்
  தமிழ்மணத்தில் தங்கள் பதிவினை இலகுவாக இணைப்பதற்கு ஏற்றாற் போல ஓட்டுப் பட்டை தோன்றும் வண்ணம் செட்டிங்ஸினை மாற்றி விடுங்கள்
  உங்கள் ப்ளாக்கின்
  dashboard > settings> feedsettings> அப்புறமா
  Site feed
  Allow Blog Feed ? Until Jump Break
  Post Feed Redirect URL ? இது empty/ வெறுமையாக இருக்கனும்,
  Add
  Post Feed Footer ? இதுவும் empty/ வெறுமையாக இருக்கனும்,
  அப்படி இருந்தால் தான் தமிழ்மணத்தில் இலகுவாக இணைக்க முடியும் நண்பா.

  ReplyDelete
 13. மென்மையான விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.
  வித்தியாசமான கருவாக இருக்கும் என நீங்கள் ஏலவே பார்த்த கான்சர் நோய் பற்றிய படங்களோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறீங்க.

  நானும் இப் படத்தினைப் பார்க்க ட்ரை பண்றேன் நண்பா,
  விமர்சனப் பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 14. @நிரூபன்

  உதவிக்கு மிகவும் நன்றி நிரூபன். ஆனால் நான் Feedburnerஇனை எனது ப்ளாக்கின் RSSக்கு பயன்படுத்துகிறேனே? அதற்கு என்ன செய்வது?

  ReplyDelete
 15. @நிரூபன்

  உமக்கு இப்பொழுது தமிழ்மணத்தில் இணைக்கும்போது ஏதாவது பிரச்சினை ஏற்படுகிறதா?

  ReplyDelete
 16. @veedu

  என் வலைத்தளத்தையும் இணைத்தமைக்கு மிகவும் நன்றி ...

  ReplyDelete
 17. nall irukkudhunnu soldratha thavira vera onnum illainka

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...