நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

கணனியில் இருக்கும் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி? Part II

பகுதி ஒன்றைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

சரி ... போன முறை மாதிரி சுத்தி வளைச்சு மேட்டரைத் தொடாம இன்னக்கி நேரா விஷயத்துக்கே வாரேன்.

XBMC என்பது அனேகமாக அனேகமாக அனைத்து ப்ளாட்பாம்களிலும் (ரயில்வே ப்ளாபாம் இல்ல) (வின்டோஸ், மக், லினக்ஸ் போன்றவற்றில்) இயங்கக்கூடிய ஒரு மென்பொருள். அதனால் நீங்கள் மேலுள்ள எதில் வேண்டுமானாலும் இதனை இயக்கலாம்.

கீழுள்ள Step I என்பது கட்டாயம் அவசியமல்ல. வேண்டுமானால் இந்த வேலையை XBMC இல் செய்யலாம். ஆனால் திடீரென உங்கள் விண்டோஸை போர்மட் செய்ய வேண்டி வந்தால் நீங்கள் செய்த அனைத்து வேலையும் வீணாகிவிடும். மீண்டும் அனைத்து படங்களையும் திருத்தவேண்டும். இம்முறையை பாலோ செய்வதன் மூலம் அனைத்து தகவல்களும் ஃபோல்டரில் சேவ் செய்யப்படுவதால் அடுத்தமுறை போர்மட் செய்தாலும் XBMCஇல் சேர்க்கும் வேலை மட்டுமே உங்களுக்கு. மேலும் இன்னொரு கம்ப்யூட்டருக்கு படத்தை ட்ரான்ஸர் செய்தாலும் அங்கும் XBMCஇல் நேராக இணைக்க வேண்டிய வேலை மட்டுமே இருக்கும்.

சோ ... இட்ஸ் யுவர் சாய்ஸ் வாட் ஸ்டெப் டூ பாலோ.

லெட்ஸ் பிகின் .... (படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்)


Step I - Ember Media Manager (EMM) ஐ இன்ஸ்டால் செய்தல்
  • முதலில் இந்த லிங்கிற்கு சென்று அதில் உங்கள் வின்டோஸ் வெர்ஷனுக்கு ஏற்றவாறு v2421 (64bit அல்லது 32bit) ஃபைலை தரவிறக்கிக் கொள்ளவும்.

  • பின்னர் இறக்கிய ஃபைலை வின்ரார் அல்லது 7ZIP பாவித்து extract செய்து கொள்ளுங்கள்.

  • Extract செய்யப்பட்ட ஃபோல்டரில் உள்ள Ember Media Manager.exe ஃபைலை ஓபன் செய்யவும். அதில் ஏதேனும் அப்டேட் செய்யக் கேட்டால் தவறாமல் அப்டேட் செய்து விடுங்கள்.

  • முதலாவதாக தோன்றுவதை Next செய்து விட்டு, இரண்டாவது விண்டோவில் உங்கள் திரைப்படங்கள் உள்ள ஃபோல்டர்களை செலக்ட் செய்து விட்டு பின் Nextஐ க்ளிக்குக.

  • அடுத்ததாக வரும் விண்டோவில் கீழ்க்கண்டவாறு டிக் செய்து கொள்ளுங்கள். (<movie> என்று சொல்லப்பட்டதை டிக்கினால் அது வீடியோ ஃபைல் என்ன பெயரில் உள்ளதோ, அதே போன்று தேவையான தகவல்கள், பட போஸ்டர் போன்றவை சேவ் செய்யப்படும்)


  • பின் அடுத்த விண்டோவில் முதல் போன்று உங்களிடம் டீவி சீரீஸ் ஏதும் இருந்தால் அவை சேவ் செய்யப்பட்டிருக்கும் இடத்தை தெரிவு செய்து Nextஐ க்ளிக்குங்கள்.


  • பின்னர் கீழுள்ள படத்தில் உள்ளவாறு டிக் செய்து கொள்ளுங்கள். (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாய்ஸை மாற்றிக் கொள்ளலாம்)

  • கொஞ்சம் வெயிட் பண்ணுங்க (உங்களிடமுள்ள படங்களின் அடிப்படையில் நேரம் வித்தியாசப்படும்). EMM அனைத்து ஃபோல்டர்களையும் இறக்கி ஃபோல்டரின் பெயரின் அடிப்படையில் லிஸ்ட் பண்ணும். திரைப்படங்கள் Movies என்ற Tab கீழும் டீவி ஸீரீஸ் TV Shows என்ற Tab கீழும் பட்டியலிட்டு காட்டப்படும்.

இனி தான் மெயின் வெர்க் ஸ்டார்ட்.

ஆனால் அதற்கு முன் சில Settingsகளை நாம் நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுதல் பின்னாடி மிகவும் வசதியாக இருக்கும்.

  • முதலாவதாக எடிட் மெனுவிற்கு சென்று செடிங்ஸ் ஐ ஓபன் செய்து கொள்ளவும். அதில் Movies என்ற Tab இனை க்ளிக் செய்து அதில் ஸ்க்ரேப்பர்ஸ் - டேட்டா (Scrapers - Data) என்ற பகுதியை க்ளிக் செய்தால் அதில் கீழ்கண்டவாறு தோன்றும். உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிவு செய்த பின் Apply பட்டனை அழுத்தவும். பின் அதன் கீழுள்ள Native Ember Movie Scrapers என்பதை Disable செய்துவிட்டு பின்னர் Rogue's Movie Scraper என்பதை Enable செய்து கொள்ளுங்கள். என் செடிங்ஸ் இதோ.
இங்கு Cast இனை லிமிட் பண்ணுவது நல்லது ஏனெனில் அப்போது IMDB
இல் தரப்பட்ட வரிசையில் நடிகர்களின் லிஸ்ட் பெறப்படும்.

  • அடுத்ததாக Scrapers - Images & Trailers என்ற பகுதியில் சென்று உங்களுக்கு வேண்டியவாறு மாற்றிக் கொள்ளுங்கள். இதில் உங்கள் ஹார்டில் இடம் இருந்தால் Enable Actors Cache என்பதையும், Download All Fanart Images of the Following Size as Extrathumbs என்பதையும் டிக் செய்து கொள்ளவும். வேண்டுமானால் யூட்யூபில் இருந்து ட்ரெயிலர்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் (ஆனால் அதிகம் ஸ்பேஸ் வீணாகும் என்பதாலும் Bandwidth வேஸ்ட் காரணத்தினாலும் அதை தெரிவு செய்யவில்லை). என்னுடைய செடிங்ஸ் இதோ.
இங்கு காஷ் ஆப்ஷன் கட்டாயமல்ல. இது பெறப்படும் அனைத்து படங்களையும்
ஹார்டில் சேவ் செய்து பின்னாளில் தேவைப்பட்டால் மீண்டும் பதிவிறக்குவதை
தவிர்க்கலாம்.

  • பின்னர் கீழுள்ள Rogue's Ember Movie Scraper என்ற பகுதியில் சென்று Get Images From என்பதன் மூலம் கீழுள்ள வலைத்தளங்களை டிக் செய்து கொள்ளவும்.

  • ஓல்மோஸ்ட் Ember Media Manager செடிங்ஸ் ஓவர். கடைசியாக Modules என்ற பகுதியில் Renamer என்பதை க்ளிக் செய்து அதில் உங்கள் ஃபோல்டர் மற்றும் மூவி ஃபைல்கள் எவ்வாறு பெயரிடப்பட வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளுங்கள். (என்ன values எதைக் குறிக்கும் என்பது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது)
என் செட்டிங்ஸ்க்கு ஏற்ப ஃபோல்டர்கள் எவ்வாறு தோன்றும் என்பதை கீழே
சென்று பார்க்கவும்

  • அவ்வளவு தான் செடிங்ஸ். சேவ் பண்ணிவிட்டு இனி Movies இல் காணப்படும் படங்களை வேண்டுமானால் ஒன்றொன்றாக தயார் செய்யலாம். (இந்த முறை பெரும்பாலும் விரும்பத்தக்கது ஏனெனில் ஒவ்வொரு படத்தின் போஸ்டர், ஃபான்ஆர்ட் [XBMC இல் பின்னால் தோன்றும் படம்] என்பவற்றை உங்களுக்கு பிடித்தமாதிரி தெரிவு செய்து கொள்ளலாம்). இதைச் செய்ய ஒரு படத்தை ரைட்-க்ளிக்கி வரும் மெனுவில் (Re)Scrape Movie எனும் ஒப்ஷனை தெரிவு செய்தால் கீழ்க்கண்டவாறு ஒரு விண்டோ பாக்ஸ் தோன்றும். அதில் ஃபோல்டரின் பெயருக்கு ஏற்ற படங்கள் தேடப்பட்டு பட்டியலிடப்படும். அவ்வாறு ஃபோல்டரின் பெயர் பிழையானால், நீங்கள் படத்தின் பெயரை தேடி அந்தப்படத்தை தெரிவு செய்யலாம்.


  • அல்லது லிஸ்டிலுள்ள அனைத்து படங்களையும் வேண்டுமானால் ஓரே முறையில் ஆட்டோமேடிக்காக ஒழுங்குபடுத்துமாறு பணிக்கலாம் (சில படங்கள் மாறுபட்டு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. காரணம் சில படங்கள் ஒரே பெயரில் ஆனால் வெவ்வேறு வருடங்களில் வந்திருக்கலாம், அல்லது உதாரணமாக ஒரு  கொரிய படமானால் அதன் ஒரிஜினல் பெயர் வேறு விதமாக இருக்கும்), அல்லது அனைத்து படங்களையும் ஆட்டோமாடிக்காக தயார் செய்யுமாறும் ஆனால் சந்தேகத்திற்குரிய படங்களை உங்களிடம் தெரிவு செய்ய கேட்குமாறும் (மேலே உள்ள முறையை விட பிழைகள் வர வாய்ப்புகள் குறைவு. ஆனால் முடியும் வரை நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்) கொடுத்து ஒழுங்குபடுத்த செய்யலாம். இதற்கு Mark All என்ற பட்டனின் பக்கத்தில் உள்ள Scrape Media என்பதை தெரிவு செய்து வரும் Dropdown Menuவில் All Moviesக்கு சென்று Automatic அல்லது Ask என்ற ஆப்ஷனுக்குள் உள்ள All Items என்பதை தெரிவு செய்து படங்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் வரை பொறுத்திருங்கள்.

  • நீங்கள் மேலுள்ள Renamer பகுதியில் இரு Automatically Rename பாக்ஸையும் டிக் செய்திருந்தால் உங்கள் ஃபோல்டர்கள் Rename செய்யப்பட்டுவிடும். அல்லது ஒன்றொன்றாக நீங்கள் ரீநேம் செய்யவேண்டி வரும்.


அனைத்து படங்களையும் ஒரேயடியாக செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக முடிக்கலாம்.


முடித்தபின் உங்கள் திரைப்படங்கள் EMMஇல் காட்சியளிக்கும் விதம்.


உங்கள் திரைப்பட ஃபோல்டர்கள் திருத்தியமைக்கப்பட்டு இவ்வாறு தோன்றும்.

போல்டர்கள் (இப்போ நீட்டா இருக்குல்ல? )


போல்டரின் உள்ளே

எக்ஸ்ட்ரா பிட் - IMDB தமிழ்ப்படங்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாததால் தமிழ்ப்படங்கள் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைக்கும். ஆனால் சற்று மென்பொருளுடன் ஃபார்ம் ஆன பின் நீங்களே வேண்டிய தகவல்களையும், போஸ்டர், ஃபான்ஆர்ட் போன்றவற்றையும் கூகுள் இமேஜில் இருந்து பெற்று மானுவலாக ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். நான் எங்கேயும் எப்போதும் படத்தின் டீவிடி இமேஜை ஒழுங்கு செய்து XBMCஇல் சேர்த்திருக்கும் விதம்.

ஹை ... ஜாலி

Step II ஆன XBMCஇனை நிறுவி மெருகூட்டி எவ்வாறு படங்களையும் டீவி சீரிஸையும் அதில் இணைப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். (அடப்பாவி ... உனக்கு இந்த தொடரை முடிக்கிறதா ஐடியாவே இல்லையா? இன்னும் முழுசா பத்து பதிவு எழுதல. அதுக்குல்ல தொடரா அப்படின்னு கேக்குறது புரியுது. என்ன செய்ய. தொடங்கினா நிறுத்த முடியல ...)

பகுதி I படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை.
ஹாலிவுட்ரசிகன்.

கணனியில் இருக்கும் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி? Part I

எனக்கு சிறுவயது முதலே திரைப்படங்கள் பிடிக்கும் என்பதை என் முதல் பதிவில் சொல்லியிருப்பேன் (சொன்னேனா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்). முன்பு காசட்டுகளில் அப்பா வாங்கி வரும் தி லயன் கிங், டைட்டானிக், பம்பி (Bambi) போன்ற படங்களை ரசித்து ரசித்து பார்த்த போது தோன்றிய ஆர்வம் தான் படங்கள் சேகரிப்பது. ஆனால் அப்போது காசட்டுகள் சொந்தமாக வாங்குவது சற்று விலை அதிகம் என்பதாலும் ரொம்ப சிறு வயதில் ஏன்டா உனக்கு இந்த ஆசை? போய் பேசாம ஏதாவது ஸ்டாம்பு கீம்பு சேர்த்துக் கொள் என்று அப்பா செல்லமாக கன்னத்தில் ரெண்டு தட்டு தட்டி (கொஞ்சமாக வீங்கும் அளவிற்கு) சொன்னதாலும் அந்த ஆசையை கொஞ்சம் மனசோரமா பாய போட்டு படுக்கப் போட்டிருந்தேன்....


சில வருஷங்களுக்கு முன்பு தான் நம் நாட்டில் ப்ரோட்பாண்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன் டையல்-அப் தான். அந்த 64kbps கனெக்ஷன் முன்பு புதுப் பாடல் ஒன்றை டவுன்லோட் செய்வதற்கு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் வரை செல்லும். அதிலும் எப்படியாவது ஒன்று-இரண்டை எடுத்து கொண்டு போய் ப்ரைவேட் க்ளாஸிற்கு வரும் சக-வகுப்பு பெண்களின் முன் என் பழைய Sony Ericsson K-700ல் போட்டு காட்டுவதில் உள்ள அந்த கிக், இப்போ எத்தனை கிளாஸ் உள்ளே விட்டாலும் வராது.

சரி - விஷயம் வேற எங்கேயோ டைவர்ட் ஆகிக் கொண்டு இருக்கிறது. அந்த மனசோரமா தூங்கிக் கொண்டிருந்த அந்த படங்கள் சேகரிக்கும் ஆசை நம் வீட்டிற்கும் ப்ரோட்பாண்ட் கனெக்ஷன், அதுவும் unlimited package எடுத்ததும் விழித்துக் கொண்டது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் Fair Usage Policy மண்ணாங்கட்டி எதுவும் இல்லாத காரணத்தினால் வகுப்பில் ப்ரோட்பாண்ட் எடுத்திருந்த பையன்களோடு போட்டி போட்டு ஆங்கில படங்களை தரவிறக்கி பார்த்துவிட்டு க்ளாஸில் போய் சுற்றி க்ளாஸ் தோழர்கள் இருக்க நடுவில் அமர்ந்து கதையை நாமும் ஏழெட்டு பிட்டு சேர்த்து சொல்வதில் ஒரு சிறு பெருமை. ஆனால் அப்போதிருந்த கம்ப்யூட்டரில் 80gb ஹாட்-டிஸ்க் இருந்த காரணத்தினால் அப்போதும் படங்கள் சேகரிக்க முடியாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாக என் கணனியை அப்டேட் பண்ணி இப்போது தான் என்னால் கொஞ்சம் கனவளவை அதிகரிக்க முடிந்தது.

ஆனா ஒரு ஓடர் இல்லாமல் Folderகள் டொரண்ட சைட்களில் ரிலீஸ் பண்ணுபவர்களின் பேர்களுடன் ஒரு அழகு இல்லாமல் இருந்தது கண்ணை உறுத்தவும் நான் அப்போது இருந்த படங்களை ஒன்றொன்றாக ரீநேம் பண்ணி கொஞ்சம் அழகாக்கினேன். பின்னர் ஒரு இமேஜ் பைலை Folder.jpg எனப் பெயரிட்டால் அது போல்டரின் கவராக மாறும் எனத் தெரிந்தபின் மீண்டும் கூகுள் இமேஜில் பட போஸ்டர்களை டவுன்லோட் செய்து ஒவ்வொரு போல்டரையும் அழகாக்கினேன்.

திரைப்படம் இப்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு வலைத்தளத்தில் நான் வாசித்து தெரிந்து கொண்ட ஒரு அருமையான மென்பொருள் (கள்) பற்றித் தான் இன்று இந்தப் பதிவு மூலம் கூறப் போகிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

XBMC என்பது தான் இந்த மென்பொருளின் பெயர். இதை நீங்கள் Ember Media Manager என்ற மென்பொருளுடன் சேர்த்து பயன்படுத்தும்போது திரைப்படங்கள் ஆட்டோமட்டிக்காக பெயர், வருடம் என பெயரிடப்பட்டு உள்ளே உள்ள ஃபைல்களும் சரியாக பெயரிடப்படும். பேஸிக்காக பார்த்தால் Ember Media Manager திரைப்படத்தை ஒழுங்குபடுத்த தேவையான விடயங்களைப் பெற்று அவற்றை சரியாக பெயரிட்டு அந்தந்த போல்டர்களில் போட XBMC அதை அழகாக ஷோகேஸ் பண்ணும் வேலையை செய்கிறது. இதற்காக சில ஸ்கின்ஸ் போன்றவை இந்த மென்பொருளிற்காக இதன் தளத்தில் கிடைக்கிறது.

பயன்கள் -

நீங்கள் அதிகமான திரைப்படங்களை உங்கள் கணனியில் சேமித்து வைத்திருந்தால் இந்த மென்பொருள் அவற்றை அழகாக காட்சிப்படுத்த, நண்பர்களுக்கு உங்கள் கலெக்ஷனைக் காட்ட மிகவும் உதவும். மேலும் ஒரு திரைப்படத்தின் பெயரையும் அதன் பெயரையும் வழங்கினால் பெரும்பாலும் இது IMDBஇல் இருந்து அப்படத்தின் கதை, ரேடிங், நடிகர்களின் பெயர்கள் போன்ற பல தகவல்களையும் பெற்றுத்தரும். மேலும் இதை உங்களுக்கு விருப்பமான வகையில் அழகாக வடிவமைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருள் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் உங்களிடமுள்ள மியூசிக் ஃபைல்ஸ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி நாடகங்களையும் ஓழுங்குபடுத்த உதவும்.

நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு HDTVயும் ஒரு சாதாரணமான பழைய (அதுக்காக எங்கிட்ட PII பீ.ஸீ ஒன்னு இருக்கு பரவால்லியா என்றெல்லாம் கேக்கப்படாது. ஒரு சாதாரண வேகமுள்ள பீ.ஸீ) ஓரமாக வைத்திருந்தால் அதை ஒரு ஹோம்-தியேட்டர் கம்ப்யூட்டராக பயன்படுத்தலாம். இதற்காக பூட் ஆகக்கூடிய வர்ஷன் ஒன்றும் இந்த மென்பொருளின் தளத்தில் கிடைக்கிறது. எனவே வின்டோஸ் எல்லாம் ஒன்றும் இல்லாமல் டீவியில் வெறும் படங்கள், நாடகங்கள் மட்டுமே பார்க்க அந்த கணனியை பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் மெனக்கெட்டால் Universal Remote ஒன்றின் மூலம் கன்ட்ரோல் பண்ணக்கூடிய வகையிலும் செய்து கொள்ளலாம்.

எல்லாம் வடிவமைத்து முடித்தபின்னர் உங்கள் கலெக்ஷனில் உள்ள படங்களை ஆக்ஷன், த்ரில்லர், அனிமேஷன் என ஜென்டராக ப்ரவுஸ் பண்ணலாம். அல்லது IMDBஇல் வழங்கியுள்ள ரேடிங் அடிப்படையில் ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஒரு படத்தில் நடித்துள்ள நடிகரின் பெயரின் அடிப்படையில், அல்லது ஒரு இயக்குனரின் பெயரின் அடிப்படையில் அவர்கள் பங்காற்றி இருக்கும் வேறு படங்கள் உங்களிடம் இருந்தால் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு பல அம்சங்கள் இதில் உள்ளன.

உங்களிடம் நிறையப் படங்கள் இருந்தால் அவற்றை முதன் முதலாக ஒழுங்கு படுத்துவது கொஞ்சம் கடினமான (கஷ்டம் என்றால் கொஞ்சம் நேரம் போகும்) விடயமாக இருந்தாலும் ஃபைனல் ரிஸல்டைப் பார்க்கும்போது நேரம் சும்மா வீணாகவில்லை என்பது தெரியும்.

என்னவோ சொல்ல வந்து, என் ஹிஸ்ட்ரியை உளறியதால் இந்த பதிவு அளவு மீறி பெரிதாக போய்க்கொண்டிருப்பதால் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். (நீங்க க்ர்ர்ர்ர்ர்ர் ங்கறது கேக்குது பாஸ்)அதற்கு முன்பு ஃபைனல் ரிசல்ட் எவ்வளவு அழகாக வரும் என்பதை காட்டுவதற்காக  நான் கஸ்டமைஸ் செய்து ஒழுங்குபடுத்தியுள்ள என் திரைப்பட லைப்ரரியின் சில ஸ்க்ரீன் ஷாட்ஸ். (படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம்)






மென்பொருள் தொடங்கியவுடன் வரும் ஸ்க்ரீன்


ஹோம் ஸ்க்ரீன் அண்மையில் சேர்த்த படங்களுடன்

அடிக்கடி Background Image மாறும் ஹோம் ஸ்க்ரீன்

ஹோம்-ஸ்க்ரீனில் டீ.வி ஸீரீஸ்

எனக்கு பிடித்த காமெடி டீ.வி ஸீரிஸ் (The Big Bang Theory)

தற்பொழுது மிக இன்ட்ரெஸ்டாக பார்க்கும் டீ.வி ஸீரிஸ் (Dexter)

ஒரு சீரீஸில் உள்ள சீசன்கள் தோன்றும் விதம்

ஒரு சீசனிலுள்ள எபிசோட்கள் அவற்றின் கதைச் சுருக்கத்துடன்

டீ.வி ஸீரீஸ்களை பார்க்கும் இன்னொரு வியூ

லிஸ்ட் ஆரம்பம்

இதுவும் படங்களின் வரிசை

படங்களின் லிஸ்ட் காட்சியளிக்கும் விதம். இன்னும் பல வியூஸ் உண்டு.
அடுத்த பதிவில் போடுகிறேன்.

பைரேட் ஒவ் தி கரேபியன் சீரீஸ் பில்டர் பண்ணி

வெவ்வேறு பெயரிகளில் வரும் சீரீஸ் ஒன்றை தேடும்போது வரும் ரிசட்ஸ்
(இங்கு ஜேம்ஸ் பாண்ட்)

ஹோம் ஸ்க்ரீன்

நடிகர்களின் லிஸ்ட்

டாம் ஹாங்க்ஸ் நடித்துள்ள/குரல் கொடுத்துள்ள படங்களை தனியாக பார்க்கும் போது

படத்தை Pause செய்து வைக்கும்போது காட்டப்படும் படம் பற்றிய தகவல்கள்,
முடியும் நேரம் என்பன சோ கூல்
!!!


பகுதி இரண்டைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



நல்லாயிருக்கா???

முடிஞ்சா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க.

Rise of the Planet of the Apes [2011]

நம் மனித இனம் ஒவ்வொரு நாளும் விஞ்ஞானத்துறையில் பல வகைகளில் சாதனைகளை புரிந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. தினமும் தோன்றும் புதுப்புது வகையான நோய்களுக்கு மருந்துகள், மரபணு சிகிச்சைகள் என பட்டியலிட முடியாத அளவுக்கு முன்னேற்றம். ஆனால் அதன் பின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும், கொல்லப்படும் எண்ணற்ற உயிரினங்களைப் பற்றி நாம் என்றுமே யோசித்துப் பார்த்ததில்லை. எத்தனையோ ஆயிரம் எலிகள், சிம்பன்சிகள், Guinea Pigs என்பவற்றில் மருந்துகளை ஏற்றி சோதனைகள் செய்து பார்த்து, வெற்றி பெற்ற பின்பே ஒரு மருந்து நமக்கு அளிக்கப்படுகிறது. இடையில் அந்த மருந்து பிழைத்துவிட்டாலோ, அல்லது ஓவர்டோஸ் ஆகிவிட்டாலோ, அல்லது பக்கவிளைவுகள் இருந்தாலோ அந்த உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இவ்வாறு மருத்துவ ஆராய்ச்சிக்காக அடைத்துவைக்கப்படும் சிம்பன்சிகளில் ஒன்று எவ்வாறு தன் இனத்தின் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன் கதை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை :

ஒரு சிம்பன்ஸி காட்டிலிருந்து ஆராய்ச்சிக்காக பிடித்துவரப்படும் குரங்குக்கூட்டத்தில் அகப்படுகிறது. வில் என்னும் விஞ்ஞானி அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோய்க்கு மருந்தாக ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறான். ஆராய்ச்சியின் போது ALZ-112 என்ற அந்த மருந்து சிம்பன்ஸிக்கு அளிக்கப்படுகிறது. அதன் ஒரு விளைவாக அந்த சிம்பன்ஸி சாதாரண குரங்குகளை விட அறிவில் முன்னேறிய செயற்பாடுகளை காண்பிக்கிறது. இதனால் அந்த நிறுவனம் அதன் ஆராய்ச்சிக்காக பண முதலீடு செய்பவர்களுக்கு சிம்பன்ஸியின் திறமைகளை டெமோ காட்ட மீட்டிங் ஒன்றை ஒழுங்குபடுத்தும் போது அந்த சிம்பன்ஸி தப்பித்து கலவரம் ஒன்றை உண்டாக்குகிறது. அதன்போது ஒரு காவலாளியால் சுட்டுக் கொல்லப்படுகிறது.

ALZ-112 என்ற அந்த மருந்தின் பக்கவிளைவாகத் தான் அந்த சிம்பன்ஸி கோபமான நடத்தையை காட்டியது என முடிவு செய்கிறார்கள். அதனால் மற்றைய குரங்குகளை அழிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. ஆனால் பின்னர் அந்த சிம்பன்ஸி ஒரு குட்டி ஈன்றதும், அதை பாதுகாக்கவே அவ்வாறு ஆவேசப்பட்டு நடந்ததும் தெரிய வருகிறது. அப்போது வில்லிற்கு அந்தக் குட்டியை தந்து அதனை  பராமரிக்குமாறு அங்கு வேலை செய்பவன் கூற, வில் அந்தக் குட்டியை தன் வீட்டில் வளர்க்கிறான். அங்கு அந்தக் குட்டி சீசர் என பெயரிடப்பட்டு வில் உடனும், அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோயால் பாதிக்கப்ட்ட வில் இன் தந்தையுடனும் வளர்கிறது. சிறு வயது முதலே அந்தக் குட்டி அதிகப்படியான அறிவாற்றலுடன் வளர்கிறது. வில் அதன் தாய்க்கு வழங்கப்பட்ட மருந்து, இதற்கும் மரபணுக்கள் மூலம் வந்திருக்கலாம் என முடிவு செய்கிறான்.

வில் பின்னர், தன் தந்தைக்கு தான் கண்டுபிடித்த மருந்தை உபயோகிக்க, அவரும் அவரின் நோய் குணமாகி, முன்னர் இருந்ததை விட சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். ஆனால் சில வருடங்களின் பின், அவரின் நோய் எதிர்ப்பு தொகுதி அந்த மருந்தை முறியடிக்க மீண்டும் அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோய் தாக்குகிறது. இதற்குள் சீசரும் வளர்ந்து விடுகிறது.

ஒருமுறை வில்லின் தந்தை ஞாபக மறதியில் பக்கத்து வீட்டுக்காரனின் காரை எடுத்து இடித்து விட அவன் அவரின் காலரை பிடித்து போலிஸை கூப்பிடுவதாக மிரட்டுகிறான். இதனை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் சீசர், உடனே வந்து அவனை தாக்கி அவனின் விரலை கடித்து துண்டாக்கிறது.



இதன் பின் சீசர் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குரங்குகளை அடைத்து வைக்கும் காப்பகத்தில் வைக்கப்படுகிறது. அங்கு வேலை செய்யும் குரங்குகளை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் பையனால் சில துன்புறுத்தல்களுக்கு சீசர் ஆளாகின்றது. மேலும் அங்கு வாழும் ஏனைய குரங்குகள் படும் அவஸ்தையையும், அவை சுதந்திரம் இன்றி வாழ்வதையும் கண்டு பொங்கி எழுகிறது.

சீசர் தன் இனத்தை எவ்வாறு விடுவித்தது? சீசர் மீண்டும் வில்லுடன் சேர்ந்ததா? அந்த குரங்குகளின் எதிர்காலம் என்ன ஆனது என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் மிக முக்கிய பலம் என்று கூறக் கூடியது இதன் சீ.ஜீ எஃபெக்ட்ஸ். இந்த சீரீஸில் முன்னைய படங்களில் குரங்கு வேஷம் போட்டு மனிதர்களை நடிக்க வைத்தது போல அல்லாமல் தற்போது பிரபலமாகி வரும் Motion-Capture தொழில்நுட்பத்தை பாவித்து அனிமேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. சீ.ஜீ செய்தவர்கள் Avatar, Tin Tin : Secret of Unicorn, The Lord of the Rings படங்களுக்கு சீ.ஜீ எஃபெக்ட் கொடுத்த பீட்டர் ஜக்சனின் (Lord of the Rings) நிறுவனமான வீட்டா டிஜிடல்ஸ் (Weta Digitals).  இந்த படத்தில் வரும் குரங்குகள் அனைத்தும் கம்பியூட்டரில் உருவாக்கப்பட்டவை என்று சொன்னால் யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். அவ்வளவு தத்ரூபமாக அவற்றை அமைத்திருக்கிறார்கள், முக்கியமாக ஹீரோவான சீசர். சீசரின் அசைவுகளை நடித்துக் கொடுத்தவர் Motion-Capture இல் பிரபலமான அன்டி சேர்கின்ஸ் (2005 கிங்-காங் படத்தில் கிங்-காங்காக நடித்தவர்).


ஒரு இன்னசன்டான சிறுவயது சிம்பன்ஸி குட்டியிலிருந்து வளர்ந்த புத்திசாலியான அடல்ட் ஆக வரும்வரை அதன் பரிமாணத்தை காட்டியிருக்கும் விதம் அற்புதம். படம் முழுவதும் இது அதிகம் பேசாமல் சைலண்டாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு அதன் உணர்வுகள் வருவது க்ராபிக்ஸில் அது காட்டும் எக்ஸ்ப்ரெஷன்ஸால் தான். சிறு வயது குழந்தைகள் விளையாடும் போது ஏக்கத்துடன் பார்க்கும் இடமாகட்டும், பார்க்கில் நாய் தொடர்ந்து குரைக்க கோபம் வந்து பயங்கரமாக பார்க்கும் இடம், வில் தன்னை வீட்டிற்கு கூட்டிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டு திரும்பிச் செல்லும் போது கோபத்தில் காட்டும் எக்ஸ்ப்ரெஷன், வில்லிடம் தான் தொடர்ந்து காப்பகத்தில் தங்குவதாக கூறிவிட்டு பின்னர் திரும்பி கொடுக்கும் அந்த பாவனைகள் என அனைத்து இடங்களிலும் ஒரு நிஜ மனித-குரங்கின் உணர்ச்சிகளை திரையில் காட்டியிருக்கின்றனர். மொத்தத்தில் வீட்டா நிறுவனத்தினர் வழக்கம் போல தங்கள் பணியை 100% சூப்பராக முடித்துக் கொடுத்துவிட்டனர்.

ஆனாலும் சீசரின் பாத்திரத்தைப் பார்க்கும் போது, அது ஒரு போராளியின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை காண்பது தவிர்க்கமுடியாது. குடும்பத்தை விட்டு தனியாக சிறையில் துன்புறுத்தப்பட்டு அங்கு தன் இனம் அடைத்துவைக்கப்பட்டு அடிமைகளாக இருப்பதைக் கண்டு பொங்கி எழுவது ஒரு போராளியின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறது.



ஆனால் இந்தக் குரங்கிற்கு படத்தில் கொடுத்த முக்கியத்துவத்தை மனித கதாபாத்திரங்களுக்கு கொடுக்க தவறிவிட்டனர் என்று தான் கூறவேண்டும். கதையின் இன்னொரு ஹீரோவாக வரும் வில் (James Franco), வெட்டரனரியாக வரும் ஹீரோயின்னான இந்திய-அமெரிக்க சின்ன கில்மா அம்மையார் (Frieda Pinto), அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக வரும் John Lithgow ஆகியோர் மற்றும் ஏனைய நடிகர்கள் தங்கள் பங்கினை செய்து விட்டு போனாலும் இம்ப்ரெஸிவ் என்று யாரையும் கூற முடியவில்லை. ஆனாலும் நோயால் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கும் John Lithgowஇன் நடிப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது. "மனிதனின் பிடியில் இருந்து குரங்குகள் தப்பிக்கும் ஒரு திரைப்படத்தில் டிஜிடல் குரங்குகளின் ஆதிக்கத்தால் மனித நடிகர்களால் ஜொலிக்க முடியாமல் போனது சற்று வருத்தமே."

படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட் மியூசிக். படம் முழுவதும் இன்ஸ்ட்ருமெண்டல் இசை இருப்பதால் படத்தின் காட்சிகளுக்கான மூடை உருவாக்குவதில் நிச்சயம் இதன் பங்கும் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. சில இடங்களில் படத்தின் வேகம் சற்றே குறைவது போல இருந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைப்பதால் ”அட போங்கப்பா” என சலிப்படையாமல் செல்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தவறவிடக்கூடாத என்டர்டெயினர். வார இறுதியில் ரசிக்கக்கூடிய ஹாலிவுட் மசாலா படம்.



படத்தின் ட்ரெயிலர் இங்கே :


Rise of the Planet of the Apes : 7.5/10


எக்ஸ்ட்ரா பிட் - படத்தில் ஒரு இடத்தில் ALZ-113 என்ற புதிய ரக மருந்து அங்கு வேலை செய்யும் ஒரு மனிதனால் உள்ளெடுக்கப்படுகிறது. ஆனால் அம்மருந்து மனிதர்களில் ஒரு தாக்கத்தை உண்டுபடுத்தி, அவர்களில் மூக்கின்
வழியாக ரத்தம் வரப்பண்ணுகிறது. பின்னர் இன்னுமொரு சீனில் பாதிக்கப்பட்ட அம்மனிதன் தும்மும் போது அவனின் ரத்தம் வில்லின் எதிர்வீட்டவனின் மேல் தெறிக்கிறது. இந்த சீன் படத்தில் சும்மா வந்துட்டு போனாலும், Creditsக்கு பின்னால் வரும் ஒரு சீனில் ஏர்போட்டில் வைத்து வில்லின் அயல்வீட்டுக்காரன் தும்ம அவன் மூக்கிலிருந்தும் ரத்தம் தெறிக்கிறது. அனேகமாக இதன்படி அடுத்த படத்திற்கும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டாங்க போல.

The Elder Scrolls V: Skyrim - [Game]

சரி .... இது மட்டும் ஒரு ஐந்து பதிவுகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களைப் பற்றியே போட்டுவிட்டேன். அது தான் இன்னக்கி ஒரு சேஞ்சுக்காக நான் கொஞ்ச நாளா தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த அருமையான கேமைப் பற்றி ஒரு பதிவ எழுதிருவோம்ணு தோணிச்சு.

எனக்கு பீ.ஸீ கேம்கள் மீது அளவிடமுடியா ஆர்வம் உண்டு. முதன் முதலாக Dave என்ற டாஸ் கேம் விளையாடியதில் இருந்து இன்று வரை அந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை. இதுவரை ஏராளமான கேம்களை விளையாடி முடித்ததுண்டு. அவற்றில் பிடித்த சீரீஸ் என்று சொல்லப்போனால் Age of the Empires, Call of Duty, Price of Persia, Tomb Raider, , Assassins Creed மற்றும் இன்று கூறப்போகும் Elder Scrolls series.

வீடியோ கேம்களில் பல வகை உண்டு. ஆக்ஷன், அட்வென்சர், ஸ்ட்ராடஜி, ரோல் ப்ளேயிங், ஷுடர்ஸ், ரேஸிங் எனப் பல. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த ஜென்டர் என்று கூறப்போனால் அது ஷுடர்ஸ், மற்றும் ரோல் ப்ளேயிங் கேம்ஸ் தான்.

FPS (First Person Shooter) கேம்களை பொறுத்தவரையில் நமக்கான வேலை மிகவும் குறைவு. கையில் கன்னை எடுத்தமா, பொட்டு பொட்டுன்னு முன்னாடி வருகிறவனை எல்லாம் சுட்டமான்னு போய்க்கிட்டே இருக்கணும். என்ன அடிக்கடி டைமுக்கு ரீலோட் பண்ணிக்கிறணும்.

ஆனால், ரோல் ப்ளேயிங் கேம்களை பொறுத்தவரையில் அப்படியல்ல. நமக்கு ஒரு கதாபாத்திரம் வழங்கப்படும். அந்தக் கதாபாத்திரத்தை நமக்கு வேண்டிய மாதிரி வடிவமைத்து, அந்த கேம் நம் ஸ்டைலுக்கு ஏற்றாப் போல விளையாடப்படும். இதனால் கேமில் நம்முடைய இன்வால்மென்ட் மிகவும் அதிகம். இதனால் தான் நான் RPG (Role Playing Games) கேம்களுக்கு அதிகம் ஆர்வம் காட்டுவது.



Dragonborn

Elder Scrolls V : Skyrim இன் கதை Nirn எனும் ஒரு கற்பனை உலகில் Tamriel எனும் கண்டத்தில் வடபகுதியில் உள்ள Skyrim எனும் இடத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பகுதியின் பேரரசன் கொலை செய்யப்பட்டுகிறான். இப்போது நாட்டில் பெரும் கலவரம் உண்டாகின்றது. Stormcloaks எனும் கலகக்காரர்கள் பெரும்பான்மையானோர் பேரரசு இல்லாமல் போகவேண்டும் என விரும்பும் அதேவேளையில் சிலர் பேரரசு நீடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.


Elder Scrolls தன் சீரீஸில் கையாண்டு வரும் கலாச்சாரமான நாம் ஒரு கைதியாக மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லப்படுவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. நாம் யார், நம் கதாபாத்திரத்தின் பின்னணி, வரலாறு ஒன்றுமே நமக்கு தெரியாது. எல்லாம் வெட்ட வெளிச்சம். நம் தலையை வெட்டப்போகும் நேரத்தில் ஒரு ட்ராகன் வந்து கோட்டையை தாக்குகிறது. அந்த சமயத்தில் நாம் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த சமயத்தில் எமக்கு இரண்டு சாய்ஸ். நாம் கலகக்காரர்களுடன் தப்பித்து செல்லலாம், அல்லது Imperials எனும் படையை சேர்ந்த வீரனுடன் தப்பிக்கலாம். கதை நம் தெரிவுக்கு ஏற்ப மாறும்.



பனி மலையிலிருந்து புல் தரை வரை ஒரு
உலகம் உங்களுக்காக
ஏற்கனவே வந்த Elder Scrolls கதைகளில் கூறப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் படி நமக்கு அல்டுய்ன் (Alduin) என்ற அழிவுகளின் ட்ராகன் கடவுள் மீண்டும் வந்து உலகை அழிக்க திட்டமிடுவது தெரியவருகிறது. ஒரு சமயம் நாம் ஒரு நகரை காக்க ட்ராகன் ஒன்றை அழித்தபின் அதன் ஆவி நம் உடலால் உள்ளெடுக்கப்படுகிறது. அப்போது நாம் தான் கடவுள்களால் ட்ராகன்களை அழித்து அல்டுயினை தடுக்க நியமிக்கப்பட்ட Dragonborn என்ற வீரன் என அந்த நகர தலைவன் எமக்கு அறிவிக்கிறான். கதையில் வரும் ஏனைய கதாபாத்திரங்களின் உதவியோடு எப்படி நாம் அல்டுயினை எதிர்கொண்டு வெல்கிறோம் என்பது தான் மீதிக் கதை.

இந்த கேமிலுள்ள முக்கிய விஷேசத்தன்மை நமக்கு தரப்படும் தெரிவுகள் மற்றும் சுதந்திரம். கேம் ஆரம்பிக்கும்போது நமக்கு சில மானிட வகுப்பு வகைகள் தரப்படும். ஒவ்வொரு வகுப்பிற்கும் சில சிறப்பம்சங்கள் உண்டு. உதாரணமாக ஒரு வகுப்பு சிறப்பாக பேசக்கூடிய திறமை, ஒரு வகுப்பிற்கு மந்திரங்கள் போன்றவற்றில் திறமை, இன்னொரு வகுப்பு கத்திச் சண்டைகளில் சிறந்து விளங்கும், இன்னொரு வகுப்பு வில்-அம்பு சண்டைகளில் சிறந்து விளங்கும். நம் ஸ்டைலுக்கு எந்த வகுப்பு ஒத்து வருமோ அதை தெரிவு செய்து விளையாடலாம். அதே போல நம் கதாபாத்திரத்தின் முக-உடல் கட்டமைப்பு,   உடுக்கும் உடை (கவசம்), விளையாட வேண்டிய ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உங்கள் கையில்.

இந்த கேமின் முக்கிய ஹைலைட் ட்ராகன்களுடன் நாம் செய்யவேண்டிய சண்டைகள். சூப்பர் சாலன்ஜ் ...


இந்த சீரீஸில் பழைய கேம்கள் நாம் செலக்ட் செய்யும் வகுப்பின் திறமைகளை மட்டுமே வளர்க்க உதவும். இந்த Skyrim இல் அது போல அல்லாமல், கேமில் தொடர்ந்து செல்லும் போது லெவல்-அப் செய்து கொள்ளலாம். அப்போது நம் வகுப்புக்கு உள்ள திறமைகளையோ அல்லது மேலே கூறப்பட்டது போல வேறு திறமைகளையோ வளர்த்துக் கொள்ள கிடைக்கும் பாயிண்ட்களை செலவளிக்கலாம்.  ஆகவே நம் திறமைகள் ஒரு கட்டத்திற்குள் அடைபட்டது போல இல்லாமல் மிக ஓபன்னாக வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே நாம் தொடர்ந்து ஒரு சில விடயங்களை செய்யும்போது அந்த திறமைகள் மேலும் வளரும் (களவெடுத்தல், இரும்புக் கொல்லன் வேலை, விவசாயம் ... மேலும் பல)

கேம் ஆரம்பித்த பின் ஒரு பெரிய வரைபடம் ஒன்று உங்களுக்கு தரப்படும். அந்த வரைபடத்தில் பல நகரங்கள், குகைகள் என்று செம இன்டரஸ்டிங்கான இடங்கள் உண்டு. வரைபடத்தில் உள்ள எந்த இடத்திற்கும் நீங்கள் கால்நடையாகவோ, அல்லது குதிரை ஒன்று வாங்கியோ பயணிக்கலாம். அதாவது இது நம்ம GTA மாதிரி ஒரு Open World கேம். ஒவ்வொரு இடத்தையும் கண்டுபிடித்த பின்னர் பாஸ்ட்-ட்ராவல் செய்யலாம்.





இந்த உலகில் கதைக்கு சம்பந்தமான ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும். நாம் அவர்களோடு பேசுவதன் மூலம் வேலைகளையும் நமக்கு தரப்படும் வேலைகளை முடிக்கத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். சில மனிதர்களை நம்மை பின்தொடர்பவர்களாகவும் ஆக்கிக் கொள்ளலாம். சும்மா Random ஆக திரியாமல் அதே கதாபாத்திரங்கள் அந்தந்த இடங்களில் இருப்பதால் நாம் அந்த உலகில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகிறது.

நான் முன்னால் குறிப்பிட்டது போல, இந்த கேமில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு தெரிவும் உங்கள் கதையை திசை திருப்பக்கூடும். எப்படியும் கடைசியாக அங்க சுத்தி இங்க சுத்தி மெயின் பாயிண்ட்டுக்கே விழுந்தாலும் கதை ட்ராவல் பண்ணும் ரூட் மாறுபடும். மேலும் சில மிஷன்களில் நீங்கள் அந்த மிஷனில் வரும் கதாபாத்திரங்களோடு கதைக்கும் போது தெரிவு செய்யும் வசனங்களும் அந்த மிஷனில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல நீங்கள் கொடுக்கப்படும் வேலைகளை எவ்வாறு வேண்டுமோ அவ்வாறு முடிக்கலாம். எங்காவது தவறு விட்டாலும் வேறு ஏதாவது ஒரு முறையில் முடிப்பதற்கு வாய்ப்பு உண்டு. உதாரணமாக நான் விளையாடும்போது ஒரு மிஷன். அதில் ஒரு அரண்மனைக்குள் பார்ட்டி ஒன்றிற்கு மாறுவேடத்தில் சென்று நைஸாக சில டாக்குமெண்ட்களை திருடி வரவேண்டும். செல்லு முன் அங்கு வேலை செய்யும் நம் ஆள் ஒருவனுக்கு நம் ஆயுதங்கள், கவசங்கள் போன்றவற்றை கொடுத்து விட்டால் அவன் அவற்றை அங்கு ஒரு பெட்டியில் போட்டுவிடுவான். ஆனால் நான் அவனுக்கு என் ஆயுதங்களை கொடுக்கமுன் பார்ட்டிக்கு சென்றுவிட்டேன். இப்போது அரண்மனைக்குள் எந்த காவலாளி கண்டாலும் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். எனக்கும் ஆயுதம், கவசம் எதுவும் இல்லாததால் கொஞ்ச நேரத்தில் நான் காலி. அதனால் நான் அங்கு அரண்மனை கிச்சனில் இருக்கும் கோடரியை எடுத்துக் கொண்டு ஒரு காவலன் தனியாக வரும்வரை அரண்மனை முழுவதும் ஓடி ஓடி, பின் அவனை ஒருமாதிரி கோடரியையும் என் மாஜிக்கையும் பயன்படுத்தி கொன்றுவிட்டு அவனின் கவசம், கத்தி போன்றவற்றை எடுத்து பின்னர் அந்த மிஷனை முடித்தேன்.

உங்கள் மாஜிக் திறமையின் ஒரு சாம்பிள்

கேம்ப்ளே (Gameplay) என்று பார்க்கும் போது செய்வதற்கு எக்கச்சக்கமான விடயங்கள் உள்ளன. நமக்கு சண்டையில் தோற்கும் எதிரிகளின் உடைமைகளை நாம் வேண்டுமானால் எடுத்து வந்து நகரில் இருக்கும் வியாபாரிகளிடம் விற்றுவிடலாம். வரும் தங்கத்தில் வீடுகள், பயணிக்க ஒரு குதிரை, அல்லது நம்முடன் சண்டைபோட ஒரு நாய் என வாங்கிக் கொள்ளலாம். அப்படியும் இல்லாட்டி திறமைகளை வளர்க்க நகர்களில் இருக்கும் சிலரிடம் காசுக்கு ட்ரெயினிங் எடுக்கலாம்.

அதே போல ஒவ்வொரு இடங்களில் கில்ட்ஸ் (Guilds) எனப்படும் அமைப்புகள் உள்ளன. அவை மந்திரவாதிகளுக்கானவை, திருடர்களுக்கானவை, சண்டை வீரர்களுக்கானவை என ஒவ்வொரு விதம். ஒவ்வொன்றிலும் சேர்ந்து அதில் உள்ள மிஷன்களை முடிப்பதன் மூலம் பணமும், விடயங்கள் படிப்பதன் மூலம் எம் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.

மெயின் கதையை ஒவ்வொரு மிஷனாக முடிப்பதற்கே எனக்கு 20 நாட்களுக்கு மேல் எடுத்தன, அதுவும் தினமும் குறைந்தது 1 மணித்தியாலத்திற்கும் மேலாக விளையாடி. அது மட்டுமன்றி சைட்-க்வெஸ்ட்ஸ் (Side Quests) என்று பார்க்கும்போது 100க்கும் மேற்பட்ட மிஷன்கள் உள்ளன. இவற்றை முடிக்க இன்னும் 1 மாதத்திற்கும் மேல் காலம் எடுக்கும்.

இந்த கேமின் முக்கிய பலம் என்று சொல்லக்கூடியது மேலே கூறியது போல இதன் டைவர்ஸிட்டி தான். விளையாடுபவருக்கு இது தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறை இல்லாமல் கேமை எப்படி வேண்டுமோ, அப்படி விளையாடிக் கொள்ளுங்கள் என்று விட்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு அட்வன்சரிஸ்டாக இருந்தால் மிஷன்களை செய்யாமல் காடு, மலை, ஆறு, நகரங்கள் என்று அந்த பெரிய்ய்ய்ய்யயய வரைபடத்தை ஆராயலாம். அல்லது மெயின் ஸ்டோரியை முதலில் முடித்து விட்டு பின்னர் கொஞ்ச கொஞ்சமாக மிச்சத்தை முடிக்கலாம். எல்லாம் உங்கள் இஷ்டம்.

பின்னர் அடுத்த பலம் என்று கூறக்கூடியது, இதற்கான பின்னணி இசை. மிக அருமையாக இதற்காக மெனக்கெட்டு இருக்காங்க. கேமின் தீம் மியூசிக்கை 30 பேரை விட்டு கேமிற்காக உருவாக்கப்பட்ட ட்ராகோனிக் மொழியில் பாடவிட்டு பின்னர் அதை 90 பேர் பாடியது போல ஒரு எஃபெக்ட் கொடுத்து இருக்காங்க. கிட்டத்தட்ட சொல்லப் போனால் தி லார்ட் ஒஃப் த ரிங்ஸ் போலவே இந்த சீரீஸிலும் கேமிற்காக ஒரு தனி மொழி, அல்பபெட், ஒரு மாய உலகம் என்று மிகவும் பார்த்து பார்த்து செய்து இருக்காங்க.

இந்த கேம் நொவம்பர் 11ம் திகதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. இதுவரை 10 மில்லியனிற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்கப்பட்டு, 620 மில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. வெளியிடப்பட்டதில் இருந்து மிகவும் பாஸிடிவ்வான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அனேகமாக அனைத்து கேம் வெப்சைட்களும் இதற்கு 10ல் 9 அல்லது அதற்கு மேலேயே ரேடிங் கொடுத்துள்ளனர். மேலும் IGN, GameSpot போன்ற முன்னணி வலைத்தளங்களிலும் Game of the Year, PC Game of the Year, Best RPG of all time போன்ற விருதுகளை அள்ளியுள்ளது. Wired.com இன் 2011ன் சிறந்த 20 கேம்களில் முதல் இடத்தையும் இது பிடித்துள்ளது. இது இந்த கேமின் இதற்கு முந்திய பகுதியான Elder Scrolls IV : Oblivion வெளியானபோதும் இதே போன்ற நல்ல விமர்சனங்களும் விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கேம் தான் விளையாடி ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் இந்த கேமை விளையாடத் தவறிவிடாதீர்கள். இந்த முழு வருடத்திற்குமான விளையாட்டை இந்த கேம் ஈடுகட்டும். சிலவேளை ஒரு 3-4 மாதங்களுக்கு இந்த கேமையே நீங்கள் (என்னைப் போல) விளையாடினாலும் விளையாடலாம்.


Elder Scrolls V : Skyim : 100% Satisfaction Guaranteed !!!!



எக்ஸ்ட்ரா பிட் I : இந்த கேம் வெளியானபோது கலெக்டர்ஸ் எடிஷன் என்று ஒன்று வெளியானது. அதில் கேமிற்கான வரைபடம், மற்றும் Skyrim உருவான விதம் பற்றி ஒரு DVD சேர்க்கப்பட்டிருந்தது. அந்த டீ.வி.டி வீடியோ யூடியூபில் இருந்து.

Drive [2011]

இன்றைய பதிவில் நான் சொல்லப்போகும் படத்தின் பெயர் Drive. படத்தின் பெயரைப் பார்த்துவிட்டு Fast & Furious சீரிஸ் போலவோ, Transporter சீரீஸ் போல இருக்கும் என நம்பிறாதீங்க. படத்தின் கதைக்கு சம்பந்தப்பட்ட தலைப்பாக இருந்தாலும் கதையும் கதை சொல்லப்பட்ட விதமும் டோடலி டிஃபரண்ட்.

இது 2011ம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக IMDBயால் பட்டியலிடப்பட்டுள்ளது. படம் வெளிவர முன்பே 2011ம் ஆண்டின் கானஸ் (Cannes) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகவும் பாராட்டப்படப்பட்டது, மற்றும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் நிக்கோலஸ் வைன்டிங் ரெப்ன்க்கு (Nicholas Winding Refn) பெற்றுக்கொடுத்தது. இப்படம் IMDBல் 8.1 ratings பெற்று அத்தளத்தின் சிறந்த 250 படங்களில் 186வதாக இடம்பெற்றுள்ளது. நானும் படத்தைப் பார்த்து விட்டு இன்டர்நெட்டில் தேடிப்பார்த்ததுக்கு அனேகமாக எல்லாமே பாஸிடிவ்வான விமர்சனங்களே இருந்தன. சரி ... பில்டப் போதும். நாம படத்தைப் பற்றிப் பார்ப்போம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


படத்தின் கதை :

ஊர் பேர் தெரியாத ஒரு கேரக்டர். நமக்கு அந்தப் பாத்திரத்தைப் பற்றித் தெரிந்தது, அதன் பெயர் Driver. நம் ட்ரான்ஸ்போட்டர் போல காசுக்காக கொள்ளைக்காரர்கள் தப்பித்துப் போக வாகனம் செலுத்துபவன். அவன் மேலும் ஒரு ஷனொன் (Shannon) என்பரின் கராஜில் மெக்கானிக்காகவும், மேலும் ஒரு ஸ்டண்ட் ட்ரைவராகவும் வேலை பார்க்கிறான்.



ட்ரைவர் அதிகம் பேசாத ஒரு கரெக்டர். தப்பித்து செல்ல உதவுபவர்களிடம் சொல்லும் கண்டிஷன்கள், "உங்களுக்கு ஐந்து நிமிடம் டைம். அந்த ஐந்து நிமிடங்களில் எது நடந்தாலும் நான் பொறுப்பு. அந்த ஐந்து நிமிடங்கள் கடந்து விட்டால் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை". அவன் ஒரே ஆளிற்கு இருமுறை வேலை செய்வதில்லை.

படம் இப்படி ஒரு கொள்ளை சம்பவத்துடன் தொடங்குகிறது. படம் பெரிய சேஸிங்ஸ், கார் வெடித்தல்கள் என்று ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மெதுவாக ஸைலன்டாக மூவ் பண்ணுகிறது. நமக்கு திடீர் என்று பொலிஸ் கார் முன்னால் வந்து நிற்கும் போதும், ஹெலிகாப்டர் லைட்டை கார் மீது வீசும் போதும் பீ.பி எகிறும். ஆனால் ட்ரைவர் ஒன்றும் ஆகாத ரியாக்ஷனுடன் மெதுவாக செல்லும், திடீர் என்று அக்ஸலரேட்டரை மிதித்து ஸ்பீடாக சைலண்டாக வண்டியை செலுத்துவான்.



ட்ரைவர் வேலை செய்யும் வொர்க் ஷொப் ஓனரான ஷனொனுக்கு ஒரு ரேஸ் கார் ஒன்றிற்கு ஓனராக வேண்டும் என்று கனவு. இதற்காக பர்னி எனும் ரவுடியிடம் 300,000 டொலர்கள் கடனாக கேட்கிறார். பர்னியும் ட்ரைவரின் ட்ரைவிங் திறமைகளை பார்த்து விட்டு காசைக் கொடுக்கிறார்.

இந்நேரத்தில் ட்ரைவரின் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஐரீன் (Irene) என்ற ஒரு பெண் தன் சிறு மகனுடன் வசிக்கிறாள். ட்ரைவருக்கும் அவளுடன் பழக்கம் ஏற்பட்டு அவளுக்கு உதவுகிறான். மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்திற்கும் ட்ரைவருக்கும் இடையில் ஒரு உறவு ஆரம்பிக்கிறது. பின்னர் அக்குடும்பத்துடன் ட்ரைவர் நிறைய நேரம் செலவளிக்க ஆரம்பிக்கிறான். இதற்கிடையில் ஐரீனின் கணவன் ஸ்டான்டர்ட் (Standard) ஜெயிலிலிருந்து வருகிறான். அவன் குக் (Cook) எனும் ஒரு காங்ஸ்ட்டருக்கு சிறையில் இருக்கும்போது அவனுக்கு பாதுகாப்பு அளித்ததற்கு 2000 டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. காசை திருப்பிக் கொடுக்காததால் குக் அவனை அடித்து, பணத்தை திருப்பிக் கொடுக்க ஒரு அடகுக் கடையை களவெடுக்கச் சொல்கிறான். அவ்வாறு செய்யாவிட்டால் ஐரீனையும் மகனையும் தாக்குவதாக மிரட்டுகிறான். ட்ரைவரும் அவ் இருவருக்காகவும் ஸ்டாண்டடுக்கு உதவ சம்மதிக்கிறான் ... அவனின் அதே கண்டிஷன்களுடன்.


நான் சொன்ன இவ்வளவுமே சும்மா ட்ரைலர் தான். இனி தான் PG-13 ஆக வந்திருக்க வேண்டிய படம் R ரேடிங்குடன் வந்ததற்கான காரணங்களுடன் மற்றும் நிறைய திருப்பங்களுடன் மெயின் பிக்சர் ஸ்டார்ட்.

அவர்களின் கொள்ளைத் திட்டம் சக்ஸஸ் ஆகியதா? அந்தக் கொள்ளைக்கு பின்னணியானவர்கள் யார்? ட்ரைவர் ஐரீன் ரிலேஷன்ஷிப் என்ன ஆகியது? ஷனொனின் கார் ஓனர் கனவு நிறைவேறியதா? இவற்றை படத்தைப் பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் முக்கிய பலம் திரைக்கதையும் அது சொல்லப்பட்டிருக்கும் விதமும். படம் மிக மெதுவாகவே நகர்ந்தாலும் அடுத்து என்ன என பார்ப்பவரை யோசிக்க வைக்கும் ஒரு சிறந்த த்ரில்லராக இருப்பதால் நேரம் போவது தெரியவில்லை. ட்ரைவர் பற்றிய ஒன்றையுமே நமக்கு கூறாமல் அவனைப் பற்றி யோசிக்க வைத்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது. ட்ரைவர் யார்? ஏன் அவன் ஏன் யாரென்று தெரியாத ஒரு குடும்பத்திற்காக ரத்தம் சிந்த வேண்டும்? இவை அனைத்துமே உங்கள் கற்பனைக்கு.

இன்னொரு முக்கியமான பலம் என்று கூறக்கூடியவர் ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரயன் கோஸ்லிங் (Ryan Gosling). அதிகம் பேசாத, ஒரு டைட்டான கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அதிலும் அவரின் சாதாரண இயல்பிற்கும், திடீரென லிப்டில் தாக்க வரும் மனிதனை கொலைவெறியுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க அடித்துக் கொல்லும் காட்சியிலும் அவரின் டைனமிக் அக்டிங் பிரமிக்கத்தக்கது.


இன்னொரு பலம் என்று சொல்லக்கூடியது படத்தின் பின்னிசை. ஆரம்ப சேஸ் காட்சிகளின் போதும் சரி, படத்தின் போதும் சரி, மிகச் சரியாக பிரயோகிக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என என்னால் காரண்டி கொடுக்க முடியாது. நீங்க ஆக்சன் படம்னா தொடங்கியதிலிருந்து சும்மா கணக்கே இல்லாமல் புல்லட்கள் பறக்கணும், காரு பஸ்ஸுலருந்து பக்கத்துல நிக்குற நாய் மட்டும் எல்லாம் வெடிக்கணும் அப்படின்னு நினைக்கிறவரா இருந்தா இந்தப் படம் எந்தளவு ஒத்துப் போகும் அப்படின்னு தெரியல. ஆனால் ஒரு வித்தியாசமான நல்ல கதையை பார்க்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கிளியர் மைண்டோட இந்தப் படத்த பாருங்க. நிச்சயம் பிடிக்கும் !!!

படத்தின் ட்ரெயிலர் இங்கே :




Drive - 8.5/10


எக்ஸ்ட்ரா பிட் I - நான் முன்பே கூறியது போல பல பத்திரிகைகளிலும் தளங்களிலும் 2011ம் ஆண்டிற்கான சிறந்த ஒரு படங்களில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. மேலும் 2011ம் ஆண்டிற்கான Golden Globe விருதில் சிறந்த துணை நடிகருக்கான விருதிற்காக (Albert Brooks) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


எக்ஸ்ட்ரா பிட் II - இந்தப் படமும் 2005ம் ஆண்டில் இதே பெயரால் வெளியிடப்பட்ட நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது.

Friends With Benefits [2011]


 நிறைய வயசுப் பசங்களுக்கு (நமக்கு இல்லப்பா) இருக்கிற ஒரு கனவு வந்து  இந்த கல்யாணம், காதல், கத்திரிக்கா எதுவுமே இல்லாம ஒரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப் (அந்த விஷயத்துல மட்டும், அதுவும் ஃப்ரீயா) வச்சுக்க முடிஞ்சா எப்படி இருக்கும்??? அதுவும் நமக்கு தெரிஞ்ச, நம்ம ஃப்ரெண்டா இருக்கிற ஒரு பொண்ணா இருந்தா? இந்த மாதிரி சப்ஜெக்ல்ட படம் எடுக்கிறது நம்ம தமிழ் சினிமால சாத்தியமோ தெரியல. எப்பயாவது ஒரு நாளைக்கு நம்ம கௌதம் சார் இத கொஞ்சம் டீசண்டா உல்டா பண்ணுவாருன்னு எதிர்ப் பார்ப்போம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


சரி .... இன்னக்கி நாம பாக்கப் போற படமும் இந்த வகையில் தான் அடங்கும். ஒரு பையன் டிலன் (Dylan), ஒரு பொண்ணு ஜேமி (Jamie). டிலனாக ஜஸ்டின் டிம்பலேக்கும் (Justin Timberlake), ஜேமியாக மிலா குனிஸ் (Mila Kunis).



ஹீரோவையும், ஹீரோயினையும் அவங்க லவ்வர்ஸ் கழற்றி விடுறதுல இருந்து படம் ஆரம்பிக்குது. டிலன், அதாங்க நம்ம ஹீரோ ஒரு வெப்சைட் ஆர்ட் டைரக்டர் (சிவாஜி விவேக் மாதிரி தமிழ்ல சொல்ல தெரியாதுங்க) . ஜேமிக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேடிக் கொடுக்கும் வேலை. இதுல ஒரு வேலையா லொஸ் ஏஞ்சல்ஸ்ல இருக்கும் டிலனை நியு யோர்க்கில் உள்ள ஒரு சஞ்சிகைக்கு இன்டர்வியூக்காக ஜேமி வரவைக்கிறா. ஆனா இன்டர்வியூ முடிஞ்சு டிலன் இந்த வேல வேணாம், திரும்பவும் எல்.ஏ க்கே திரும்பி போய்ருவோம்ன்னு யோசிச்சுட்டு அதப்பத்தி ஜேமிகிட்ட சொல்றான். எங்க இவன் திரும்பி போய்ட்டா நமக்கு வேலையில ஆப்பாகி கமிஷனை வெட்டிடுவாங்களோன்னு ஜேமி டிலனை கூட்டிகிட்டு நியூயோர்க்கின் ஃபன் பத்தி சுத்திக் காட்றா. ஜாலியா ஊர் சுத்திட்டு ஊர் புடிச்சுபோய் (எந்த யூத்துக்கு தான் நியூயோர்க் புடிக்காது???) டிலனும் வேலைக்கு சேர அக்ரீமண்ட்ல கையெழுத்து போட்டுர்றான். பின் இருவருக்கும் தொடர்ந்து பழக்கம் ஏற்பட்டு நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிடறாங்க.


ஒரு முறை ரொமாண்டிக் படம் ஒன்னு பாக்கும்போது கதை செக்ஸ் லைஃப் பத்தி திரும்புது. அப்போ ஜேமி, தானும் உறவு வைத்துக்கொண்டு ரொம்ப நாளாச்சு அப்படி இப்படின்னு பேச, டிலனுக்கு டக்குணு மண்டைல லைட் எரிஞ்சு ஒரு ஐடியா!!! இரண்டு பேரும், தேவையானப்போ செக்ஸ் வச்சிப்போம். ஆனா நோ ஃபீலிங்ஸ் அன்ட் கொமிட்மெண்ட். ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம். ஜேமிக்கும் இந்த ஐடியா பிடிச்சுப் போக ... அப்புறம் என்ன ... படம் சூடு புடிச்சு பறக்கத் தொடங்குது (கொஞ்சம் டீசண்டான சீன்களோட தான்).

இந்த நோ ஃபீலிங், நோ கமிட்மெண்ட் ப்ளான் சக்ஸஸ் ஆகியதா? ஃபீலிங்ஸே இல்லாமல் ஒரு ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ண முடியுமா? ஜேமியும் டிலனும் என்ன ஆனாங்க ... அப்படிங்கறத டி.வி.டி அல்லது ப்ளூரே ப்ரிண்ட்ல பாத்து தெரிஞ்சுக்கங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


திரைக்கதை அப்படின்னு பாக்கப் போனா வருஷா வருஷம் நமக்கு ஹாலிவுட்ல ரொமாண்டிக் வகை படங்கள்ள பாத்து பாத்து புளிச்சுப் போன கதை தான். ஆனா ஜஸ்டின் டிம்பலேக், மிலா குனிஸ் ஜோடியால படம் ஒரு சலிப்புத் தன்மை இல்லாம போகுது. ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி வெர்க் ஆகிறது. படத்தை தூக்கி நிறுத்தும் மிக முக்கியமானர் மிலா குனிஸ். படம் முழுக்க சும்மா துறுதுறுன்னு ஜாலியா பேசியும் தன் எனர்ஜெடிக் நடிப்பாலும் கவர்கிறார். அதனால படம் பாக்கும்போதும் நமக்கு ஒரு படம் பாக்கும் பீலிங் வராமல் ஏதோ தினசரி சந்திக்கும் ஒரு லவ் ஜோடி ஒன்றை பார்க்கும் உணர்வு ஒன்று ஏற்படுகிறது.



இவர்கள் இருவர் தவிர, பத்திரிகையின் ஸ்போர்ட்ஸ் எடிட்டராக வரும் வுடி ஹார்ல்ஸன் (Woody Harrelson), டிலனின் அப்பாவாக வருபவர் அனைவரும் தம்  பங்குக்கு சிரிக்க வைக்கின்றனர்.

என்ன தான் செக்ஸ் பத்தின கதையா இருந்தாலும் நான் எதிர்பார்த்த அளவு மிலா குனிஸை பார்க்க முடியாமல் போனது ரொம்ப வருத்தமே. படம் முழுவதும் சின்ன லஞ்சரே டிரஸ்களிலும் குட்டை பாவாடைகளையுமே போடவைத்து முடிச்சுடறாய்ங்கய்யா... இதுவே படத்தின் ஒரு முக்கிய குறையாக நான் கருதுகிறேன், எதிர்க்கிறேன்.

வார இறுதியில, தனியா, கொஞ்சம் சிரிக்க, கொஞ்சம் சூடாக, மனம் ரிலாக்ஸாகனும்னு நினைச்சிங்கன்னா படத்த ஒருமுறை டீவில பாருங்க. தப்பித் தவறி கூட காமெடி ப்லிம் ஆச்சேன்னு குடும்பத்தோட உக்காந்துராதீங்க. அப்பறம் ஒங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்.


படத்தின் ட்ரெயிலர் இங்கே :



Friends with Benefits : 7/10


எக்ஸ்ட்ரா பிட் - 
இந்தப் படத்துல இரண்டு இடங்கள்ள ஃப்ளாஷ் மொப் இடம்பெறுது. இந்த ப்ளாஷ் மொப் கல்சர் இந்தியாவுலயும் வந்துருச்சு போல. டில்லி ரெயில்வே ஸ்டேசனில் இடம்பெற்ற ப்ளாஷ் மொப் வீடியோ இதோ.