நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Stardust [2007]போன வாரம் நம்ம தோஸ்த் ஒருத்தன் "மச்சி ... ஒரு சூப்பர் படத்தின் ப்ளூரே பிரிண்ட் டவுன்லோட் பண்ணியிருக்கேன். வா ... நம்ம வீட்டு 40'' HDTVல பாப்போம்ன்னு கூப்பிட்டான். ஓசில படமும் கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் கொடுத்தா நாங்க தான் எங்க வேணா ஆஜர் ஆகிடுவோம்ல . இதுல  ப்ளூரே பிரிண்ட் வேற. உடனே கிளம்பிப் போனேன். அப்போ தான் இந்தப் படத்தை காட்டினான். ”நல்ல படம்னு போட்டிருந்துச்சு மச்சி. அதான்டா" அப்டீன்னான். நான் இந்த படத்தை ஏற்கனவே ரெண்டு முறை பார்த்துட்டேண்டா. நீ பாரு. பிறகு வாரேன்டான்னு சொல்லி ஏன் ஃப்ரீயா கிடைக்கிற சாப்பாட்டு ஐடங்களை வேஸ்ட் பண்ணனும்? அதனால சரிடா ... வா பாப்போம் ஒன் செலக்ஷனன்னு பாக்க உட்கார்ந்தோம். ஆனாலும் மூன்றாம் முறை பார்க்கிறோமே என்ற அலுப்பே இல்லாமல் சுவாரஸ்யமாக நான் இதைப் பார்த்தேன் (சாப்பிட்டேன்) என்பதிலிருந்து எனக்கு இந்தப் படம் எந்தளவு பிடித்திருந்தது என உங்களுக்கு தெரிந்திருக்கும் (சிலவேளை High Definitionல பாத்த ஃபீலிங்கோ என்னவோ).

ஒரு ஃபாண்டஸி படத்தில் இருக்கவேண்டிய அனைத்து விடயங்களும் இதில் இருப்பதால் நீங்கள் ... "ஐய்யய்யோ மாஜிக் படமா? என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு? நான் Adults படம் மட்டுமே பார்ப்பேன்னு" சொல்ற ஆளா நீங்க இருந்தாலும் உங்களுக்கு இந்தத் திரைப்படம் பிடிக்க வாய்ப்பு உண்டு.


Title: Stardust
Cast: Charlie Cox, Claire Danes, Sienna Miller, Robert De Niro
Country: UK | USA | Iceland
Language: English
Release Date: 10 August 2007
Directed By: Matthew Vaughn
Runtime: 127 min
Distributed by : Paramount Pictures
Budget: $70 million
Box Office: $135,560,026
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ஒரு ஆறடி சுவர். நடுவுல ஒரு இடைவெளி. இந்தப்பக்கம் இங்கிலாந்து. அந்தப்பக்கம் ஸ்டோம்ஹோல்ட் (Stormhold) அப்படிங்கற மாஜிக் நாடு. இங்கிட்டு இருந்து யாரும் அங்கிட்டு போகக்கூடாதுன்னு தன் வாழ்நாளையே காவலுக்காக வீணாக்கிய ஒரு வயசான பெரியவர். இதுவரை யாருமே அந்த ஆறடி சுவரை தாண்டி மாஜிக் நாட்டிற்குள் பிரவேசிக்கவில்லையாம் (இதே இங்கேயா இருந்தா சும்மா தாண்டு தாண்டுன்னு தாண்டியிருப்போம்ல). கடைசில எப்படியோ டன்ஸ்டன் (Dunstan) எனும் ஒருவன் சுவரை தாண்டி அட்வென்சருக்காக ஸ்டோம்ஹோல்ட் நாட்டிற்குள் பிரவேசிக்கிறான். செல்லும் வழியில் ஒரு நகரத்தின் மார்க்கெட்டில் இருக்கும் ஒரு கடையில் ஒரு மந்திரக்காரியால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான ராஜகுமாரியை சந்திக்கிறான்.  அந்தப் பாப்பாவும் நீ ஒரு கிஸ் கொடு. நான் உனக்கு கண்ணாடிப் பூ ஒன்று தாரேன்னு சொல்ல பையனும் இந்த டீலிங் நல்லாயிருக்கேன்னு போறான். பக்கத்தில் உள்ள மந்திரக்காரியின் வண்டிக்குள் கிஸ் கேட்ட பாப்பா கசமுசாவை கமுக்கமாக முடித்துவிடுது. பையனும் திரும்பி ஊருக்கு வந்துவிடுகிறான். 9 மாதங்களின் பின் நம் காவலாளி தாத்தா ஒரு ஆண் குழந்தையை அந்த பையன் வீட்டு முன்னாடி வச்சு இவன் உன் மகன். பெயர் ட்ரிஸ்டன் என சொல்லிட்டு போறார்.


ங்கொய்ங்ங்ங் ... 18 வருஷங்கள் உருண்டு ஓடிவிடுகின்றன. வீட்டு முன்னாடி வச்ச பாப்பா ட்ரிஸ்டன் வளர்ந்தபெரியவனாக இருக்கிறான்.(ஆமா 18 வருஷமா பாப்பாவாகவேவா இருப்பான்?). வழக்கம்போல அந்த ஊரின் அழகுராணியான விக்டோரியா மேல ஒன்சைட் லவ். லவ்வுனா லவ்வு லவ்வோ லவ்வு ... ஆனா அந்த ஃபிகருக்கு ஏற்கனவே வாள் வீசக்கூடிய பணக்கார பாய்பிரண்ட் இருக்கிறான். நம்ம ஹீரோ சாதாரண கடையில் வேலை செய்யும் சோப்ளாங்கி. ஒரு சில சந்தர்ப்பத்தால் அந்த ஃபிகருக்கு இவன் மேல் ஒரு இது வந்து ட்ரிஸ்டனிடம் "என் பாய்பிரண்ட் ஒரு வாரத்தில் என்னை கல்யாணத்திற்கு ப்ரபோஸ் பண்ணப் போறான்" அப்படின்னு சொல்ற நேரத்தில் அவர்களுக்கு மேலே ஒரு வால்வெள்ளி ஒன்று செல்கிறது.

வெயிட் ... அந்த வால்வெள்ளி போனதற்கும் ஒரு கதை இருக்கிறது. ஸ்டோம்ஹோல்ட் நாட்டின் ராஜா வயசாகி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிட்டு இருக்கார். அவருக்கு மகன்மார் மூன்று. யார் அடுத்த ராஜான்னு மூவரும் யோசித்துக் கொண்டிருக்க பழைய ராஜா அவரின் சிவப்பு மாணிக்க நெக்லஸை தூக்கி போட்டுட்டு "இந்த மாணிக்கத்தை யார் கொண்டு வாரீங்களோ அவன் தான் அடுத்த ராஜா". அந்த நெக்லஸ் பறந்து போய் ஒரு நட்சத்திரத்துடன் மோதுகிறது. பூம்ம்ம்ம்ம்ம் ... பெரிய எக்ஷ்ப்லோஷன். பின் அந்த நட்சத்திரம் வால்வெள்ளியாக ஸ்டோம்ஹோல்ட் நாட்டின் மேல் பறந்து சென்று நிலத்தில் விழுகிறது. இப்போ இளவரசர்கள் மூவரும் மாணிக்கத்திற்கு ஹண்டிங்.


இப்போ திரும்ப நம் ட்ரிஸ்டன்-விக்டோரியா லவ் சீனுக்கு ரிடர்ன். ட்ரிஸ்டன் சொல்றான், நான் உன்னை கல்யாணம் செய்ய அந்த வால்வெள்ளியை உனக்கு கொண்டு வந்து தருவேன்னு சொல்ல விக்டோரியாவும் சரி ... இன்னும் ஒரு வாரத்தில் அவன் ப்ரபோஸ் பண்ணிடுவான். அவ்வளவுதான் உன் டைம்ன்னு சொல்லுது. ட்ரிஸ்டன் சுவரைத் தாண்டி ஸ்டோம்ஹோல்ட் செல்லப் பார்க்கும்போது நம் காவலாளி தாத்தா சிலம்பாட்டம் மூவ்ஸ் கொஞ்சம் போட்டு ட்ரிஸ்டனை துரத்திவிடுகிறார். ட்ரிஸ்டன் தன் தந்தை மூலம் கிடைக்கும் மந்திர மெழுகுவர்த்தி மூலம் வால்வெள்ளி விழுந்த இடத்திற்கு பிரயாணம் செய்கிறான். சென்று பார்த்தால் வால்வெள்ளி விழுந்த இடத்தில் ஒரு அழகிய இளம்பெண் வித் சிவப்பு மாணிக்கம் இன் த கழுத்து. ஆனாலும் ட்ரிஸ்டன் அவளை கட்டி விக்டோரியாவிடம் அளிக்க கூட்டி செல்கிறான்.
இதற்கிடையில் வால்வெள்ளியை கண்ட மூன்று மந்திரவாதி கிழவிகளில் ஒருத்தி சங்கூதுற வயசில சங்கீதாவாக ஆசைப்பட்டு அந்த பெண்ணாக மாறிய நட்சத்திரத்தின் இதயத்தை சாப்பிடவேண்டி அவளைத் தேடி பிரயாணமாகிறாள்.

இந்த மூவரின் நிலை என்னவாயிற்று? ட்ரிஸ்டன் இறுதியில் நட்சத்திரப் பெண்ணுடன் இணைந்தானா? அல்லது விக்டோரியாவிடம் அவளைக் காட்டி அவளுடன் இணைந்தானா? கிழவி சங்கீதாவாக மாறினாளா? மந்திரவாதிக் கிழவி ஒருத்தியிடம் அடிமையாக இருந்த ட்ரிஸ்டனின் தாய்க்கு என்ன நடந்தது? இறுதியில் யார் ஸ்டோம்ஹோல்டின் ராஜாவானது? என பல கேள்விகளுக்கு பதிலை சுவாரஸ்யமான அழகான இந்த திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் ஆரம்பத்தில் என் மண்டையை குடைந்த ஒரு கேள்வி, ஒரு ஆறடிச் சுவரை தாண்ட முடியாதவங்களா அந்த ஊரில இருக்காய்ங்க? யாரும் தாண்டிப் போகவோ வரவோ கூடாது என்றால் எதற்காக ஒரு இடைவெளி? ஒரு மூட்டை சீமெந்து எடுத்தமா இடைவெளிய அடைச்சமா வேலய பாத்துட்டு போவமான்னு இல்லாம பாவம் ஒரு மனிதனின் (காவலாளி தாத்தா) வாழ்க்கையை வீணாக்கிவிட்டாய்ங்கய்யா.

படத்தில் எனக்கு தெரிந்த நடிகர்ன்னு சொல்லப்போனா அது ரொபர்ட் டீ நிரோ தான். இவரை இந்தப் படத்தில் பார்த்து இவரின் நடிப்புத் திறமையை முடிவெடுக்கும் முன் இவரின் முன்னைய படங்களை பார்த்துவிட்டு இதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் பைரேட்டாக வரும் இவரின் நடிப்பு திறன் நொட் டாப் ஒவ் தி பெஃபோமன்ஸ். ஆனால் நடிப்பு மோசமில்லாவிட்டாலும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கிறது. (வயசாயிருச்சுல்ல)

படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து இறுதி வரை சுவாரஸ்யமாக மாஜிக், சில ட்விஸ்டுகள் என சலிப்படைய வைக்காமல் செல்கிறது. இடையில் உள்ள கதை ஊகிக்கக்கூடியதும் பொதுவான ஹாலிவுட் படங்களில் உள்ள க்ளிஷே காட்சிகளைக் கொண்டிருந்தாலும் படத்தின் ஆரம்பமும் க்ளைமாக்ஸும் மற்றவற்றை மறக்க செய்து ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் படத்தைப் பார்த்த திருப்தியை கொடுக்கின்றன. படத்திற்கு அழகான விஷுவல் எஃபெக்ட் காட்சிகளும் ஒரு நல்ல பலம்.

ஒரு சூப்பரான படம். கட்டாயம் தவறவிடக்கூடாத படம் அப்படீன்னு எல்லாம் நான் சொல்லமாட்டேன். ஒரு அழகான டைம் பாஸுக்காக ஜாலியா ஒரு படம் பாக்கணும்னு நினைச்சா எடுத்துப் பாருங்க. புடிச்சா திரும்பி வந்து சொல்லிட்டுப் போங்க. புடிக்கலைன்னா ... வந்து திட்டிட்டு எல்லாம் போகாதீங்க. புடிக்கும் பாஸ். நம்பிப் பாருங்க.

படத்தின் ட்ரெயிலர் இங்கே :


Stardust : 8.2 / 10

எக்ஸ்ட்ரா பிட் -
இந்தப் படம் நீல் கீமன் என்பவரால் 1999ல் வெளியிடப்பட்ட Stardust எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. கதையை வாசிப்பது எப்போதும் படத்தை பார்ப்பதை விட நன்றாக இருக்கும். முடிந்தால் வாசிக்கப் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------
Download Links :


டைரக்ட் லிங்க்ஸ் :

Part I | Part II | Part III | Part IV | Part V

டொரண்டில் பதிவிறக்க

-------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவில் சந்திக்கும்வரை அன்புடன்

ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

13 comments:

 1. நல்ல விமர்சனம்.ஆனால் படம்தான் இன்னும் பார்க்கவில்லை.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பாஸ்,
  எனக்கு மாஜிக் படம் எல்லாம் அவள்ளவு ஈடுபாடு இல்லை...நீங்க ரெக்கமண்டு பன்னதால்ல டவுன்லோட் போட்டு இருக்கிறேன்.. பார்த்துட்டு என்னோட கருத்த சொல்லுரேன்
  ரொம்ப தேங்க்ஸ் ...

  ReplyDelete
 3. @ராஜ்

  கட்டாயம் சொல்லுங்க ராஜ். எதிர்காலத்தில் பதிவை பார்ப்பவர்களுக்கு யூஸ் ஆக இருக்கும்.

  ReplyDelete
 4. பேண்டஸி படங்கள் எனக்கு பிடிக்கும் :) கண்டிப்பாக பார்த்துவிட்டு சொல்கிறேன் :)

  இரண்டாம் பாகத்தை படித்தேன்... இப்போது எந்த குழப்பமும் இல்லை :)

  ReplyDelete
 5. வணக்கம் லேட்டா வந்ததுக்கு வேணும்னா நாலு வார்த்த திட்டிக்கவும்..ஹிஹி...ஆங்கில புததாண்டு வாழ்த்துக்கள்!..உங்களின் விமர்சனம் நல்லா இருக்குய்யா மாப்ள...பாக்கரேன் படத்தை நன்றி!

  ReplyDelete
 6. வணக்கம் நண்பா,

  விமர்சனம் அருமை. அதிலும் படிப்போருக்குச் சலிப்பு ஏற்படா வண்ணம் சுவாரஸ்யம் கூட்டி படம் பார்த்த சூழ்நிலையினை எழுதியிருப்பது இன்னும் அருமை!

  தொடர்ந்தும் எழுதுங்கள். படம் பற்றிய நீண்ட....அறிமுகங்களைத் தவிர்த்து இறுதியில் வைத்திருக்கும் ருவிட்ஸ், அல்லது படம் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் கருத்துக்களை சுருக்கமாக, நச்சென்று சொன்னால் நன்றாக இருக்கும். இது என் கருத்து! தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
 7. நண்பா, பின்னூட்டம் போடும் போது, Word verification வருகிறது., அதனை go to settings > comments Setting> word verification பகுதியினூடாக No என்ற Option ஐ கொடுத்து Save செய்து நீக்கி விடுங்க.

  ReplyDelete
 8. @நிரூபன்

  //என்ன அண்ணே ... நான் எழுதுவது மற்றவர்கள் படிக்கத்தானே. அப்போது அவர்களின் ரசனைக்கு அல்லது அவர்கள் சலிக்காமல் வாசிக்குமாறுதானே எழுதவேண்டும்? நீங்கள் கூறியது 100% சரி.

  அடுத்தடுத்த பதிவுகளில் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 9. @விக்கியுலகம்

  விக்கியண்ணே ... வருகைக்கும் கமெண்ட்டுக்கும் மிகவும் நன்றி.

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 10. @kumaran, @raj, @kanagu

  வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி. படத்தைப் பார்த்தால் மறக்காமல் சொல்லுங்கள்.

  ReplyDelete
 11. @நிரூபன்

  புதிய ப்ளாக்கர் இன்டர்பேசில் அப்படி ஒரு ஆப்ஷனே இல்லை. மீண்டும் பழைய இன்டர்பேசுக்கு போய் மாத்தியாச்சு.

  இனி strictly no word verification & comment moderation.

  ReplyDelete
 12. விமர்சனம் சூப்பர்.
  சுவாரசியமாக எழுதுறிங்க, அலுப்பு தட்டாமல் படிக்கமுடிகிறது விமர்சனத்தை.

  படத்தை எப்பயோ பார்த்த மாதிரி ஞாபகம்.

  ReplyDelete
 13. @arunambur0

  மிகவும் நன்றி நண்பா. உங்கள் எழுத்துக்களுக்கும் என் வசனங்களை செதுக்கியதில் பங்குண்டு.

  ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...