நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Rise of the Planet of the Apes [2011]

நம் மனித இனம் ஒவ்வொரு நாளும் விஞ்ஞானத்துறையில் பல வகைகளில் சாதனைகளை புரிந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. தினமும் தோன்றும் புதுப்புது வகையான நோய்களுக்கு மருந்துகள், மரபணு சிகிச்சைகள் என பட்டியலிட முடியாத அளவுக்கு முன்னேற்றம். ஆனால் அதன் பின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும், கொல்லப்படும் எண்ணற்ற உயிரினங்களைப் பற்றி நாம் என்றுமே யோசித்துப் பார்த்ததில்லை. எத்தனையோ ஆயிரம் எலிகள், சிம்பன்சிகள், Guinea Pigs என்பவற்றில் மருந்துகளை ஏற்றி சோதனைகள் செய்து பார்த்து, வெற்றி பெற்ற பின்பே ஒரு மருந்து நமக்கு அளிக்கப்படுகிறது. இடையில் அந்த மருந்து பிழைத்துவிட்டாலோ, அல்லது ஓவர்டோஸ் ஆகிவிட்டாலோ, அல்லது பக்கவிளைவுகள் இருந்தாலோ அந்த உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இவ்வாறு மருத்துவ ஆராய்ச்சிக்காக அடைத்துவைக்கப்படும் சிம்பன்சிகளில் ஒன்று எவ்வாறு தன் இனத்தின் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன் கதை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் கதை :

ஒரு சிம்பன்ஸி காட்டிலிருந்து ஆராய்ச்சிக்காக பிடித்துவரப்படும் குரங்குக்கூட்டத்தில் அகப்படுகிறது. வில் என்னும் விஞ்ஞானி அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோய்க்கு மருந்தாக ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறான். ஆராய்ச்சியின் போது ALZ-112 என்ற அந்த மருந்து சிம்பன்ஸிக்கு அளிக்கப்படுகிறது. அதன் ஒரு விளைவாக அந்த சிம்பன்ஸி சாதாரண குரங்குகளை விட அறிவில் முன்னேறிய செயற்பாடுகளை காண்பிக்கிறது. இதனால் அந்த நிறுவனம் அதன் ஆராய்ச்சிக்காக பண முதலீடு செய்பவர்களுக்கு சிம்பன்ஸியின் திறமைகளை டெமோ காட்ட மீட்டிங் ஒன்றை ஒழுங்குபடுத்தும் போது அந்த சிம்பன்ஸி தப்பித்து கலவரம் ஒன்றை உண்டாக்குகிறது. அதன்போது ஒரு காவலாளியால் சுட்டுக் கொல்லப்படுகிறது.

ALZ-112 என்ற அந்த மருந்தின் பக்கவிளைவாகத் தான் அந்த சிம்பன்ஸி கோபமான நடத்தையை காட்டியது என முடிவு செய்கிறார்கள். அதனால் மற்றைய குரங்குகளை அழிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. ஆனால் பின்னர் அந்த சிம்பன்ஸி ஒரு குட்டி ஈன்றதும், அதை பாதுகாக்கவே அவ்வாறு ஆவேசப்பட்டு நடந்ததும் தெரிய வருகிறது. அப்போது வில்லிற்கு அந்தக் குட்டியை தந்து அதனை  பராமரிக்குமாறு அங்கு வேலை செய்பவன் கூற, வில் அந்தக் குட்டியை தன் வீட்டில் வளர்க்கிறான். அங்கு அந்தக் குட்டி சீசர் என பெயரிடப்பட்டு வில் உடனும், அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோயால் பாதிக்கப்ட்ட வில் இன் தந்தையுடனும் வளர்கிறது. சிறு வயது முதலே அந்தக் குட்டி அதிகப்படியான அறிவாற்றலுடன் வளர்கிறது. வில் அதன் தாய்க்கு வழங்கப்பட்ட மருந்து, இதற்கும் மரபணுக்கள் மூலம் வந்திருக்கலாம் என முடிவு செய்கிறான்.

வில் பின்னர், தன் தந்தைக்கு தான் கண்டுபிடித்த மருந்தை உபயோகிக்க, அவரும் அவரின் நோய் குணமாகி, முன்னர் இருந்ததை விட சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். ஆனால் சில வருடங்களின் பின், அவரின் நோய் எதிர்ப்பு தொகுதி அந்த மருந்தை முறியடிக்க மீண்டும் அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோய் தாக்குகிறது. இதற்குள் சீசரும் வளர்ந்து விடுகிறது.

ஒருமுறை வில்லின் தந்தை ஞாபக மறதியில் பக்கத்து வீட்டுக்காரனின் காரை எடுத்து இடித்து விட அவன் அவரின் காலரை பிடித்து போலிஸை கூப்பிடுவதாக மிரட்டுகிறான். இதனை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் சீசர், உடனே வந்து அவனை தாக்கி அவனின் விரலை கடித்து துண்டாக்கிறது.



இதன் பின் சீசர் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குரங்குகளை அடைத்து வைக்கும் காப்பகத்தில் வைக்கப்படுகிறது. அங்கு வேலை செய்யும் குரங்குகளை துன்புறுத்தி அதில் இன்பம் காணும் பையனால் சில துன்புறுத்தல்களுக்கு சீசர் ஆளாகின்றது. மேலும் அங்கு வாழும் ஏனைய குரங்குகள் படும் அவஸ்தையையும், அவை சுதந்திரம் இன்றி வாழ்வதையும் கண்டு பொங்கி எழுகிறது.

சீசர் தன் இனத்தை எவ்வாறு விடுவித்தது? சீசர் மீண்டும் வில்லுடன் சேர்ந்ததா? அந்த குரங்குகளின் எதிர்காலம் என்ன ஆனது என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் மிக முக்கிய பலம் என்று கூறக் கூடியது இதன் சீ.ஜீ எஃபெக்ட்ஸ். இந்த சீரீஸில் முன்னைய படங்களில் குரங்கு வேஷம் போட்டு மனிதர்களை நடிக்க வைத்தது போல அல்லாமல் தற்போது பிரபலமாகி வரும் Motion-Capture தொழில்நுட்பத்தை பாவித்து அனிமேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. சீ.ஜீ செய்தவர்கள் Avatar, Tin Tin : Secret of Unicorn, The Lord of the Rings படங்களுக்கு சீ.ஜீ எஃபெக்ட் கொடுத்த பீட்டர் ஜக்சனின் (Lord of the Rings) நிறுவனமான வீட்டா டிஜிடல்ஸ் (Weta Digitals).  இந்த படத்தில் வரும் குரங்குகள் அனைத்தும் கம்பியூட்டரில் உருவாக்கப்பட்டவை என்று சொன்னால் யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். அவ்வளவு தத்ரூபமாக அவற்றை அமைத்திருக்கிறார்கள், முக்கியமாக ஹீரோவான சீசர். சீசரின் அசைவுகளை நடித்துக் கொடுத்தவர் Motion-Capture இல் பிரபலமான அன்டி சேர்கின்ஸ் (2005 கிங்-காங் படத்தில் கிங்-காங்காக நடித்தவர்).


ஒரு இன்னசன்டான சிறுவயது சிம்பன்ஸி குட்டியிலிருந்து வளர்ந்த புத்திசாலியான அடல்ட் ஆக வரும்வரை அதன் பரிமாணத்தை காட்டியிருக்கும் விதம் அற்புதம். படம் முழுவதும் இது அதிகம் பேசாமல் சைலண்டாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு அதன் உணர்வுகள் வருவது க்ராபிக்ஸில் அது காட்டும் எக்ஸ்ப்ரெஷன்ஸால் தான். சிறு வயது குழந்தைகள் விளையாடும் போது ஏக்கத்துடன் பார்க்கும் இடமாகட்டும், பார்க்கில் நாய் தொடர்ந்து குரைக்க கோபம் வந்து பயங்கரமாக பார்க்கும் இடம், வில் தன்னை வீட்டிற்கு கூட்டிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டு திரும்பிச் செல்லும் போது கோபத்தில் காட்டும் எக்ஸ்ப்ரெஷன், வில்லிடம் தான் தொடர்ந்து காப்பகத்தில் தங்குவதாக கூறிவிட்டு பின்னர் திரும்பி கொடுக்கும் அந்த பாவனைகள் என அனைத்து இடங்களிலும் ஒரு நிஜ மனித-குரங்கின் உணர்ச்சிகளை திரையில் காட்டியிருக்கின்றனர். மொத்தத்தில் வீட்டா நிறுவனத்தினர் வழக்கம் போல தங்கள் பணியை 100% சூப்பராக முடித்துக் கொடுத்துவிட்டனர்.

ஆனாலும் சீசரின் பாத்திரத்தைப் பார்க்கும் போது, அது ஒரு போராளியின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை காண்பது தவிர்க்கமுடியாது. குடும்பத்தை விட்டு தனியாக சிறையில் துன்புறுத்தப்பட்டு அங்கு தன் இனம் அடைத்துவைக்கப்பட்டு அடிமைகளாக இருப்பதைக் கண்டு பொங்கி எழுவது ஒரு போராளியின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறது.



ஆனால் இந்தக் குரங்கிற்கு படத்தில் கொடுத்த முக்கியத்துவத்தை மனித கதாபாத்திரங்களுக்கு கொடுக்க தவறிவிட்டனர் என்று தான் கூறவேண்டும். கதையின் இன்னொரு ஹீரோவாக வரும் வில் (James Franco), வெட்டரனரியாக வரும் ஹீரோயின்னான இந்திய-அமெரிக்க சின்ன கில்மா அம்மையார் (Frieda Pinto), அல்ட்ஸ்ஹய்மர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக வரும் John Lithgow ஆகியோர் மற்றும் ஏனைய நடிகர்கள் தங்கள் பங்கினை செய்து விட்டு போனாலும் இம்ப்ரெஸிவ் என்று யாரையும் கூற முடியவில்லை. ஆனாலும் நோயால் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கும் John Lithgowஇன் நடிப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது. "மனிதனின் பிடியில் இருந்து குரங்குகள் தப்பிக்கும் ஒரு திரைப்படத்தில் டிஜிடல் குரங்குகளின் ஆதிக்கத்தால் மனித நடிகர்களால் ஜொலிக்க முடியாமல் போனது சற்று வருத்தமே."

படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட் மியூசிக். படம் முழுவதும் இன்ஸ்ட்ருமெண்டல் இசை இருப்பதால் படத்தின் காட்சிகளுக்கான மூடை உருவாக்குவதில் நிச்சயம் இதன் பங்கும் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. சில இடங்களில் படத்தின் வேகம் சற்றே குறைவது போல இருந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைப்பதால் ”அட போங்கப்பா” என சலிப்படையாமல் செல்கிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தவறவிடக்கூடாத என்டர்டெயினர். வார இறுதியில் ரசிக்கக்கூடிய ஹாலிவுட் மசாலா படம்.



படத்தின் ட்ரெயிலர் இங்கே :


Rise of the Planet of the Apes : 7.5/10


எக்ஸ்ட்ரா பிட் - படத்தில் ஒரு இடத்தில் ALZ-113 என்ற புதிய ரக மருந்து அங்கு வேலை செய்யும் ஒரு மனிதனால் உள்ளெடுக்கப்படுகிறது. ஆனால் அம்மருந்து மனிதர்களில் ஒரு தாக்கத்தை உண்டுபடுத்தி, அவர்களில் மூக்கின்
வழியாக ரத்தம் வரப்பண்ணுகிறது. பின்னர் இன்னுமொரு சீனில் பாதிக்கப்பட்ட அம்மனிதன் தும்மும் போது அவனின் ரத்தம் வில்லின் எதிர்வீட்டவனின் மேல் தெறிக்கிறது. இந்த சீன் படத்தில் சும்மா வந்துட்டு போனாலும், Creditsக்கு பின்னால் வரும் ஒரு சீனில் ஏர்போட்டில் வைத்து வில்லின் அயல்வீட்டுக்காரன் தும்ம அவன் மூக்கிலிருந்தும் ரத்தம் தெறிக்கிறது. அனேகமாக இதன்படி அடுத்த படத்திற்கும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டாங்க போல.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

6 comments:

  1. டவுன்லோட் மட்டும் செய்து வைத்திருந்தேன். இந்த வாரம் பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்களுடைய எக்ஸ்ட்ரா பிட் தவறென நான் நினைக்கிறேன். எனக்குத் தோன்றியது என்னவென்றால்,
    ஏர்போர்ட்டில் சிந்திய ரத்தம் காரணமாக கிருமி உலகம் முழுவதும் பரவி மனித இனமே அழிந்து, குரங்குகளின் ராச்சியம் ஆரம்பமாகிறது.(படத்தில் அந்த ரத்தத்திலிருந்து உலகம் பூராகவும் அந்தக் கிருமி பரவுவது காட்டப்படுகின்றமையை நினைவுக்கூர்க...) :) :) :)

    ReplyDelete
  3. @Mushtaq Ahmed

    இன்னும் அடுத்த படத்தின் கதை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம்.

    ReplyDelete
  4. தமிழன் புதிய திரட்டி ( www.tamiln.org )

    ReplyDelete
  5. This is prequel of the movie Planet of the apes.. As per Planet of the apes comics, in future, apes become intelligent and establish a separate planet for themselves.
    I think before they escape to other planet from earth, they started to fight against human beings...Humans die because of this virus & those Monkeys steals space ship from humans & escape to other livable planet

    ReplyDelete
  6. இதை ஸ்ரார் மூவிஸ்ஸில் பார்த்தேன் தரமான படம் முக்கியமாக ஒரு கட்டத்தில் சீசர் நோஓஓஓஓஓஓ என்று கத்தியது மயிர்கூச்செறியும் அளவுக்கு இருந்தது

    சீசர் இஸ் கோம்

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...