நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

கணனியில் இருக்கும் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி? Part II

பகுதி ஒன்றைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

சரி ... போன முறை மாதிரி சுத்தி வளைச்சு மேட்டரைத் தொடாம இன்னக்கி நேரா விஷயத்துக்கே வாரேன்.

XBMC என்பது அனேகமாக அனேகமாக அனைத்து ப்ளாட்பாம்களிலும் (ரயில்வே ப்ளாபாம் இல்ல) (வின்டோஸ், மக், லினக்ஸ் போன்றவற்றில்) இயங்கக்கூடிய ஒரு மென்பொருள். அதனால் நீங்கள் மேலுள்ள எதில் வேண்டுமானாலும் இதனை இயக்கலாம்.

கீழுள்ள Step I என்பது கட்டாயம் அவசியமல்ல. வேண்டுமானால் இந்த வேலையை XBMC இல் செய்யலாம். ஆனால் திடீரென உங்கள் விண்டோஸை போர்மட் செய்ய வேண்டி வந்தால் நீங்கள் செய்த அனைத்து வேலையும் வீணாகிவிடும். மீண்டும் அனைத்து படங்களையும் திருத்தவேண்டும். இம்முறையை பாலோ செய்வதன் மூலம் அனைத்து தகவல்களும் ஃபோல்டரில் சேவ் செய்யப்படுவதால் அடுத்தமுறை போர்மட் செய்தாலும் XBMCஇல் சேர்க்கும் வேலை மட்டுமே உங்களுக்கு. மேலும் இன்னொரு கம்ப்யூட்டருக்கு படத்தை ட்ரான்ஸர் செய்தாலும் அங்கும் XBMCஇல் நேராக இணைக்க வேண்டிய வேலை மட்டுமே இருக்கும்.

சோ ... இட்ஸ் யுவர் சாய்ஸ் வாட் ஸ்டெப் டூ பாலோ.

லெட்ஸ் பிகின் .... (படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்)


Step I - Ember Media Manager (EMM) ஐ இன்ஸ்டால் செய்தல்
  • முதலில் இந்த லிங்கிற்கு சென்று அதில் உங்கள் வின்டோஸ் வெர்ஷனுக்கு ஏற்றவாறு v2421 (64bit அல்லது 32bit) ஃபைலை தரவிறக்கிக் கொள்ளவும்.

  • பின்னர் இறக்கிய ஃபைலை வின்ரார் அல்லது 7ZIP பாவித்து extract செய்து கொள்ளுங்கள்.

  • Extract செய்யப்பட்ட ஃபோல்டரில் உள்ள Ember Media Manager.exe ஃபைலை ஓபன் செய்யவும். அதில் ஏதேனும் அப்டேட் செய்யக் கேட்டால் தவறாமல் அப்டேட் செய்து விடுங்கள்.

  • முதலாவதாக தோன்றுவதை Next செய்து விட்டு, இரண்டாவது விண்டோவில் உங்கள் திரைப்படங்கள் உள்ள ஃபோல்டர்களை செலக்ட் செய்து விட்டு பின் Nextஐ க்ளிக்குக.

  • அடுத்ததாக வரும் விண்டோவில் கீழ்க்கண்டவாறு டிக் செய்து கொள்ளுங்கள். (<movie> என்று சொல்லப்பட்டதை டிக்கினால் அது வீடியோ ஃபைல் என்ன பெயரில் உள்ளதோ, அதே போன்று தேவையான தகவல்கள், பட போஸ்டர் போன்றவை சேவ் செய்யப்படும்)


  • பின் அடுத்த விண்டோவில் முதல் போன்று உங்களிடம் டீவி சீரீஸ் ஏதும் இருந்தால் அவை சேவ் செய்யப்பட்டிருக்கும் இடத்தை தெரிவு செய்து Nextஐ க்ளிக்குங்கள்.


  • பின்னர் கீழுள்ள படத்தில் உள்ளவாறு டிக் செய்து கொள்ளுங்கள். (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாய்ஸை மாற்றிக் கொள்ளலாம்)

  • கொஞ்சம் வெயிட் பண்ணுங்க (உங்களிடமுள்ள படங்களின் அடிப்படையில் நேரம் வித்தியாசப்படும்). EMM அனைத்து ஃபோல்டர்களையும் இறக்கி ஃபோல்டரின் பெயரின் அடிப்படையில் லிஸ்ட் பண்ணும். திரைப்படங்கள் Movies என்ற Tab கீழும் டீவி ஸீரீஸ் TV Shows என்ற Tab கீழும் பட்டியலிட்டு காட்டப்படும்.

இனி தான் மெயின் வெர்க் ஸ்டார்ட்.

ஆனால் அதற்கு முன் சில Settingsகளை நாம் நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுதல் பின்னாடி மிகவும் வசதியாக இருக்கும்.

  • முதலாவதாக எடிட் மெனுவிற்கு சென்று செடிங்ஸ் ஐ ஓபன் செய்து கொள்ளவும். அதில் Movies என்ற Tab இனை க்ளிக் செய்து அதில் ஸ்க்ரேப்பர்ஸ் - டேட்டா (Scrapers - Data) என்ற பகுதியை க்ளிக் செய்தால் அதில் கீழ்கண்டவாறு தோன்றும். உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிவு செய்த பின் Apply பட்டனை அழுத்தவும். பின் அதன் கீழுள்ள Native Ember Movie Scrapers என்பதை Disable செய்துவிட்டு பின்னர் Rogue's Movie Scraper என்பதை Enable செய்து கொள்ளுங்கள். என் செடிங்ஸ் இதோ.
இங்கு Cast இனை லிமிட் பண்ணுவது நல்லது ஏனெனில் அப்போது IMDB
இல் தரப்பட்ட வரிசையில் நடிகர்களின் லிஸ்ட் பெறப்படும்.

  • அடுத்ததாக Scrapers - Images & Trailers என்ற பகுதியில் சென்று உங்களுக்கு வேண்டியவாறு மாற்றிக் கொள்ளுங்கள். இதில் உங்கள் ஹார்டில் இடம் இருந்தால் Enable Actors Cache என்பதையும், Download All Fanart Images of the Following Size as Extrathumbs என்பதையும் டிக் செய்து கொள்ளவும். வேண்டுமானால் யூட்யூபில் இருந்து ட்ரெயிலர்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் (ஆனால் அதிகம் ஸ்பேஸ் வீணாகும் என்பதாலும் Bandwidth வேஸ்ட் காரணத்தினாலும் அதை தெரிவு செய்யவில்லை). என்னுடைய செடிங்ஸ் இதோ.
இங்கு காஷ் ஆப்ஷன் கட்டாயமல்ல. இது பெறப்படும் அனைத்து படங்களையும்
ஹார்டில் சேவ் செய்து பின்னாளில் தேவைப்பட்டால் மீண்டும் பதிவிறக்குவதை
தவிர்க்கலாம்.

  • பின்னர் கீழுள்ள Rogue's Ember Movie Scraper என்ற பகுதியில் சென்று Get Images From என்பதன் மூலம் கீழுள்ள வலைத்தளங்களை டிக் செய்து கொள்ளவும்.

  • ஓல்மோஸ்ட் Ember Media Manager செடிங்ஸ் ஓவர். கடைசியாக Modules என்ற பகுதியில் Renamer என்பதை க்ளிக் செய்து அதில் உங்கள் ஃபோல்டர் மற்றும் மூவி ஃபைல்கள் எவ்வாறு பெயரிடப்பட வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளுங்கள். (என்ன values எதைக் குறிக்கும் என்பது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது)
என் செட்டிங்ஸ்க்கு ஏற்ப ஃபோல்டர்கள் எவ்வாறு தோன்றும் என்பதை கீழே
சென்று பார்க்கவும்

  • அவ்வளவு தான் செடிங்ஸ். சேவ் பண்ணிவிட்டு இனி Movies இல் காணப்படும் படங்களை வேண்டுமானால் ஒன்றொன்றாக தயார் செய்யலாம். (இந்த முறை பெரும்பாலும் விரும்பத்தக்கது ஏனெனில் ஒவ்வொரு படத்தின் போஸ்டர், ஃபான்ஆர்ட் [XBMC இல் பின்னால் தோன்றும் படம்] என்பவற்றை உங்களுக்கு பிடித்தமாதிரி தெரிவு செய்து கொள்ளலாம்). இதைச் செய்ய ஒரு படத்தை ரைட்-க்ளிக்கி வரும் மெனுவில் (Re)Scrape Movie எனும் ஒப்ஷனை தெரிவு செய்தால் கீழ்க்கண்டவாறு ஒரு விண்டோ பாக்ஸ் தோன்றும். அதில் ஃபோல்டரின் பெயருக்கு ஏற்ற படங்கள் தேடப்பட்டு பட்டியலிடப்படும். அவ்வாறு ஃபோல்டரின் பெயர் பிழையானால், நீங்கள் படத்தின் பெயரை தேடி அந்தப்படத்தை தெரிவு செய்யலாம்.


  • அல்லது லிஸ்டிலுள்ள அனைத்து படங்களையும் வேண்டுமானால் ஓரே முறையில் ஆட்டோமேடிக்காக ஒழுங்குபடுத்துமாறு பணிக்கலாம் (சில படங்கள் மாறுபட்டு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. காரணம் சில படங்கள் ஒரே பெயரில் ஆனால் வெவ்வேறு வருடங்களில் வந்திருக்கலாம், அல்லது உதாரணமாக ஒரு  கொரிய படமானால் அதன் ஒரிஜினல் பெயர் வேறு விதமாக இருக்கும்), அல்லது அனைத்து படங்களையும் ஆட்டோமாடிக்காக தயார் செய்யுமாறும் ஆனால் சந்தேகத்திற்குரிய படங்களை உங்களிடம் தெரிவு செய்ய கேட்குமாறும் (மேலே உள்ள முறையை விட பிழைகள் வர வாய்ப்புகள் குறைவு. ஆனால் முடியும் வரை நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்) கொடுத்து ஒழுங்குபடுத்த செய்யலாம். இதற்கு Mark All என்ற பட்டனின் பக்கத்தில் உள்ள Scrape Media என்பதை தெரிவு செய்து வரும் Dropdown Menuவில் All Moviesக்கு சென்று Automatic அல்லது Ask என்ற ஆப்ஷனுக்குள் உள்ள All Items என்பதை தெரிவு செய்து படங்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் வரை பொறுத்திருங்கள்.

  • நீங்கள் மேலுள்ள Renamer பகுதியில் இரு Automatically Rename பாக்ஸையும் டிக் செய்திருந்தால் உங்கள் ஃபோல்டர்கள் Rename செய்யப்பட்டுவிடும். அல்லது ஒன்றொன்றாக நீங்கள் ரீநேம் செய்யவேண்டி வரும்.


அனைத்து படங்களையும் ஒரேயடியாக செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக முடிக்கலாம்.


முடித்தபின் உங்கள் திரைப்படங்கள் EMMஇல் காட்சியளிக்கும் விதம்.


உங்கள் திரைப்பட ஃபோல்டர்கள் திருத்தியமைக்கப்பட்டு இவ்வாறு தோன்றும்.

போல்டர்கள் (இப்போ நீட்டா இருக்குல்ல? )


போல்டரின் உள்ளே

எக்ஸ்ட்ரா பிட் - IMDB தமிழ்ப்படங்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாததால் தமிழ்ப்படங்கள் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைக்கும். ஆனால் சற்று மென்பொருளுடன் ஃபார்ம் ஆன பின் நீங்களே வேண்டிய தகவல்களையும், போஸ்டர், ஃபான்ஆர்ட் போன்றவற்றையும் கூகுள் இமேஜில் இருந்து பெற்று மானுவலாக ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். நான் எங்கேயும் எப்போதும் படத்தின் டீவிடி இமேஜை ஒழுங்கு செய்து XBMCஇல் சேர்த்திருக்கும் விதம்.

ஹை ... ஜாலி

Step II ஆன XBMCஇனை நிறுவி மெருகூட்டி எவ்வாறு படங்களையும் டீவி சீரிஸையும் அதில் இணைப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். (அடப்பாவி ... உனக்கு இந்த தொடரை முடிக்கிறதா ஐடியாவே இல்லையா? இன்னும் முழுசா பத்து பதிவு எழுதல. அதுக்குல்ல தொடரா அப்படின்னு கேக்குறது புரியுது. என்ன செய்ய. தொடங்கினா நிறுத்த முடியல ...)

பகுதி I படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும்வரை.
ஹாலிவுட்ரசிகன்.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

13 comments:

  1. XBMC download பண்ணி இருக்கிறேன்...அதுவே நல்லா இருந்துச்சு...இதையும் ட்ரை பண்ணி பார்கிறேன்...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. நல்ல பதிவா இருக்கு..முயற்சி செய்யுறேன்.
    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. நன்றி. டவுன்லோட் செய்து இன்ஸ்டாலும் பண்ணியாச்சு. படங்களை ஒழுங்கு படுத்த ஆரம்பிச்சாச்சு.

    ReplyDelete
  5. கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  6. நல்லா சொன்னீங்க. எனக்கும் தேவைப்பட்ட தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
    அப்டியே ஒரு விஷயத்தையும் சொன்னீங்கன்னா நல்ல இருக்கும். அதாவது (இது சம்பந்தமில்லாத கேள்விதான். இருந்தாலும் பதிலளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.) நீங்க எந்த ப்ரோட்பேன்ட் கனெக்ஷன் யூஸ் பண்ணுறீங்க? உங்களுக்கு என்ன ஸ்பீட்ல டவுன்லோட் பண்ண முடியுது?

    ReplyDelete
  7. @Mushtaq Ahmed

    நான் முன்பு டவுன்லோட் பண்ணும்போது 512kbps connection தான். நிறையப் படங்கள் அவ்வாறு சேர்த்தவை தான் (சில மற்ற நண்பர்களிடம் இருந்து பெற்றது).

    இப்பொழுது இலங்கையில் 8mbps ப்ரோட்பாண்ட் இருக்கிறது. அதைத் தான் பாவிக்கிறேன். File Host பொறுத்து வேகம் 50 - 860 வரை மாறுபடும்.

    ReplyDelete
  8. Boss.. 3rd Part eppa varum.. waiting...

    ReplyDelete
  9. @Mooventhan GP

    ஒரு வாரம்? முடிந்தவரை சீக்கிரமே எழுதுகிறேன். உதவிக்கு நன்றி வேந்தன்.

    ReplyDelete
  10. ungludia download speed eana

    nan hatton nega eanga?

    super your post thank u

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...