நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

கணனியில் இருக்கும் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி? Part I

எனக்கு சிறுவயது முதலே திரைப்படங்கள் பிடிக்கும் என்பதை என் முதல் பதிவில் சொல்லியிருப்பேன் (சொன்னேனா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்). முன்பு காசட்டுகளில் அப்பா வாங்கி வரும் தி லயன் கிங், டைட்டானிக், பம்பி (Bambi) போன்ற படங்களை ரசித்து ரசித்து பார்த்த போது தோன்றிய ஆர்வம் தான் படங்கள் சேகரிப்பது. ஆனால் அப்போது காசட்டுகள் சொந்தமாக வாங்குவது சற்று விலை அதிகம் என்பதாலும் ரொம்ப சிறு வயதில் ஏன்டா உனக்கு இந்த ஆசை? போய் பேசாம ஏதாவது ஸ்டாம்பு கீம்பு சேர்த்துக் கொள் என்று அப்பா செல்லமாக கன்னத்தில் ரெண்டு தட்டு தட்டி (கொஞ்சமாக வீங்கும் அளவிற்கு) சொன்னதாலும் அந்த ஆசையை கொஞ்சம் மனசோரமா பாய போட்டு படுக்கப் போட்டிருந்தேன்....


சில வருஷங்களுக்கு முன்பு தான் நம் நாட்டில் ப்ரோட்பாண்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன் டையல்-அப் தான். அந்த 64kbps கனெக்ஷன் முன்பு புதுப் பாடல் ஒன்றை டவுன்லோட் செய்வதற்கு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் வரை செல்லும். அதிலும் எப்படியாவது ஒன்று-இரண்டை எடுத்து கொண்டு போய் ப்ரைவேட் க்ளாஸிற்கு வரும் சக-வகுப்பு பெண்களின் முன் என் பழைய Sony Ericsson K-700ல் போட்டு காட்டுவதில் உள்ள அந்த கிக், இப்போ எத்தனை கிளாஸ் உள்ளே விட்டாலும் வராது.

சரி - விஷயம் வேற எங்கேயோ டைவர்ட் ஆகிக் கொண்டு இருக்கிறது. அந்த மனசோரமா தூங்கிக் கொண்டிருந்த அந்த படங்கள் சேகரிக்கும் ஆசை நம் வீட்டிற்கும் ப்ரோட்பாண்ட் கனெக்ஷன், அதுவும் unlimited package எடுத்ததும் விழித்துக் கொண்டது. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் Fair Usage Policy மண்ணாங்கட்டி எதுவும் இல்லாத காரணத்தினால் வகுப்பில் ப்ரோட்பாண்ட் எடுத்திருந்த பையன்களோடு போட்டி போட்டு ஆங்கில படங்களை தரவிறக்கி பார்த்துவிட்டு க்ளாஸில் போய் சுற்றி க்ளாஸ் தோழர்கள் இருக்க நடுவில் அமர்ந்து கதையை நாமும் ஏழெட்டு பிட்டு சேர்த்து சொல்வதில் ஒரு சிறு பெருமை. ஆனால் அப்போதிருந்த கம்ப்யூட்டரில் 80gb ஹாட்-டிஸ்க் இருந்த காரணத்தினால் அப்போதும் படங்கள் சேகரிக்க முடியாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாக என் கணனியை அப்டேட் பண்ணி இப்போது தான் என்னால் கொஞ்சம் கனவளவை அதிகரிக்க முடிந்தது.

ஆனா ஒரு ஓடர் இல்லாமல் Folderகள் டொரண்ட சைட்களில் ரிலீஸ் பண்ணுபவர்களின் பேர்களுடன் ஒரு அழகு இல்லாமல் இருந்தது கண்ணை உறுத்தவும் நான் அப்போது இருந்த படங்களை ஒன்றொன்றாக ரீநேம் பண்ணி கொஞ்சம் அழகாக்கினேன். பின்னர் ஒரு இமேஜ் பைலை Folder.jpg எனப் பெயரிட்டால் அது போல்டரின் கவராக மாறும் எனத் தெரிந்தபின் மீண்டும் கூகுள் இமேஜில் பட போஸ்டர்களை டவுன்லோட் செய்து ஒவ்வொரு போல்டரையும் அழகாக்கினேன்.

திரைப்படம் இப்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு வலைத்தளத்தில் நான் வாசித்து தெரிந்து கொண்ட ஒரு அருமையான மென்பொருள் (கள்) பற்றித் தான் இன்று இந்தப் பதிவு மூலம் கூறப் போகிறேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

XBMC என்பது தான் இந்த மென்பொருளின் பெயர். இதை நீங்கள் Ember Media Manager என்ற மென்பொருளுடன் சேர்த்து பயன்படுத்தும்போது திரைப்படங்கள் ஆட்டோமட்டிக்காக பெயர், வருடம் என பெயரிடப்பட்டு உள்ளே உள்ள ஃபைல்களும் சரியாக பெயரிடப்படும். பேஸிக்காக பார்த்தால் Ember Media Manager திரைப்படத்தை ஒழுங்குபடுத்த தேவையான விடயங்களைப் பெற்று அவற்றை சரியாக பெயரிட்டு அந்தந்த போல்டர்களில் போட XBMC அதை அழகாக ஷோகேஸ் பண்ணும் வேலையை செய்கிறது. இதற்காக சில ஸ்கின்ஸ் போன்றவை இந்த மென்பொருளிற்காக இதன் தளத்தில் கிடைக்கிறது.

பயன்கள் -

நீங்கள் அதிகமான திரைப்படங்களை உங்கள் கணனியில் சேமித்து வைத்திருந்தால் இந்த மென்பொருள் அவற்றை அழகாக காட்சிப்படுத்த, நண்பர்களுக்கு உங்கள் கலெக்ஷனைக் காட்ட மிகவும் உதவும். மேலும் ஒரு திரைப்படத்தின் பெயரையும் அதன் பெயரையும் வழங்கினால் பெரும்பாலும் இது IMDBஇல் இருந்து அப்படத்தின் கதை, ரேடிங், நடிகர்களின் பெயர்கள் போன்ற பல தகவல்களையும் பெற்றுத்தரும். மேலும் இதை உங்களுக்கு விருப்பமான வகையில் அழகாக வடிவமைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருள் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் உங்களிடமுள்ள மியூசிக் ஃபைல்ஸ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி நாடகங்களையும் ஓழுங்குபடுத்த உதவும்.

நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு HDTVயும் ஒரு சாதாரணமான பழைய (அதுக்காக எங்கிட்ட PII பீ.ஸீ ஒன்னு இருக்கு பரவால்லியா என்றெல்லாம் கேக்கப்படாது. ஒரு சாதாரண வேகமுள்ள பீ.ஸீ) ஓரமாக வைத்திருந்தால் அதை ஒரு ஹோம்-தியேட்டர் கம்ப்யூட்டராக பயன்படுத்தலாம். இதற்காக பூட் ஆகக்கூடிய வர்ஷன் ஒன்றும் இந்த மென்பொருளின் தளத்தில் கிடைக்கிறது. எனவே வின்டோஸ் எல்லாம் ஒன்றும் இல்லாமல் டீவியில் வெறும் படங்கள், நாடகங்கள் மட்டுமே பார்க்க அந்த கணனியை பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் மெனக்கெட்டால் Universal Remote ஒன்றின் மூலம் கன்ட்ரோல் பண்ணக்கூடிய வகையிலும் செய்து கொள்ளலாம்.

எல்லாம் வடிவமைத்து முடித்தபின்னர் உங்கள் கலெக்ஷனில் உள்ள படங்களை ஆக்ஷன், த்ரில்லர், அனிமேஷன் என ஜென்டராக ப்ரவுஸ் பண்ணலாம். அல்லது IMDBஇல் வழங்கியுள்ள ரேடிங் அடிப்படையில் ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஒரு படத்தில் நடித்துள்ள நடிகரின் பெயரின் அடிப்படையில், அல்லது ஒரு இயக்குனரின் பெயரின் அடிப்படையில் அவர்கள் பங்காற்றி இருக்கும் வேறு படங்கள் உங்களிடம் இருந்தால் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு பல அம்சங்கள் இதில் உள்ளன.

உங்களிடம் நிறையப் படங்கள் இருந்தால் அவற்றை முதன் முதலாக ஒழுங்கு படுத்துவது கொஞ்சம் கடினமான (கஷ்டம் என்றால் கொஞ்சம் நேரம் போகும்) விடயமாக இருந்தாலும் ஃபைனல் ரிஸல்டைப் பார்க்கும்போது நேரம் சும்மா வீணாகவில்லை என்பது தெரியும்.

என்னவோ சொல்ல வந்து, என் ஹிஸ்ட்ரியை உளறியதால் இந்த பதிவு அளவு மீறி பெரிதாக போய்க்கொண்டிருப்பதால் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். (நீங்க க்ர்ர்ர்ர்ர்ர் ங்கறது கேக்குது பாஸ்)அதற்கு முன்பு ஃபைனல் ரிசல்ட் எவ்வளவு அழகாக வரும் என்பதை காட்டுவதற்காக  நான் கஸ்டமைஸ் செய்து ஒழுங்குபடுத்தியுள்ள என் திரைப்பட லைப்ரரியின் சில ஸ்க்ரீன் ஷாட்ஸ். (படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம்)






மென்பொருள் தொடங்கியவுடன் வரும் ஸ்க்ரீன்


ஹோம் ஸ்க்ரீன் அண்மையில் சேர்த்த படங்களுடன்

அடிக்கடி Background Image மாறும் ஹோம் ஸ்க்ரீன்

ஹோம்-ஸ்க்ரீனில் டீ.வி ஸீரீஸ்

எனக்கு பிடித்த காமெடி டீ.வி ஸீரிஸ் (The Big Bang Theory)

தற்பொழுது மிக இன்ட்ரெஸ்டாக பார்க்கும் டீ.வி ஸீரிஸ் (Dexter)

ஒரு சீரீஸில் உள்ள சீசன்கள் தோன்றும் விதம்

ஒரு சீசனிலுள்ள எபிசோட்கள் அவற்றின் கதைச் சுருக்கத்துடன்

டீ.வி ஸீரீஸ்களை பார்க்கும் இன்னொரு வியூ

லிஸ்ட் ஆரம்பம்

இதுவும் படங்களின் வரிசை

படங்களின் லிஸ்ட் காட்சியளிக்கும் விதம். இன்னும் பல வியூஸ் உண்டு.
அடுத்த பதிவில் போடுகிறேன்.

பைரேட் ஒவ் தி கரேபியன் சீரீஸ் பில்டர் பண்ணி

வெவ்வேறு பெயரிகளில் வரும் சீரீஸ் ஒன்றை தேடும்போது வரும் ரிசட்ஸ்
(இங்கு ஜேம்ஸ் பாண்ட்)

ஹோம் ஸ்க்ரீன்

நடிகர்களின் லிஸ்ட்

டாம் ஹாங்க்ஸ் நடித்துள்ள/குரல் கொடுத்துள்ள படங்களை தனியாக பார்க்கும் போது

படத்தை Pause செய்து வைக்கும்போது காட்டப்படும் படம் பற்றிய தகவல்கள்,
முடியும் நேரம் என்பன சோ கூல்
!!!


பகுதி இரண்டைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.



நல்லாயிருக்கா???

முடிஞ்சா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்க.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

10 comments:

  1. Thanks for sharing a good post. I am looking for this kind of software to organize my media collections. Good Work.

    ReplyDelete
  2. பாஸ்,
    என் கிட்ட நிறைய படம் இருக்கு, 600GB, எனக்கும் படம் கலக்சன் மேல நல்ல ஆர்வம். பட் “Un Organized” ஆக இருக்கு..
    டவுன்லோட் பண்ணி பார்த்துட்டு வந்து என்னோட அனுபவத்தை சொல்லுறானே.

    ReplyDelete
  3. அடுத்த பதிவில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி எழுதுகிறேன். பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. // அப்பா செல்லமாக கன்னத்தில் ரெண்டு தட்டு தட்டி (கொஞ்சமாக வீங்கும் அளவிற்கு) சொன்னதாலும் //
    நல்லா சொன்னீங்க... :) இப்பவும் அப்படித்தானா?.. :)

    என்னதான் Google ல தேடிக்க முடியுமென்றாலும் XBMC & Ember Media Manager - க்கு லிங்க்ஸும் கொடுத்திருக்கலாம்.

    நல்ல உபயோகமுள்ள பதிவு. உபயோகப்படுத்தி விட்டு அனுபவத்தை சொல்றேன். தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. @முகில்

    பதிவின் இரண்டாம் பாகத்தில் Ember Media Managerக்கு லிங்க் போட்டுள்ளேன்.

    மூன்றாம் பாகத்தில் XBMC பற்றிய தகவல்களும் லிங்குகளும் தரப்படும். :)

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள தகவல். நன்றி.
    External Hard Disk இருக்கும் திரைப்படங்களையும் இந்த சாப்ட்வேர் கொண்டு ஒழுங்கு படுத்த முடியுமா.

    ReplyDelete
  7. @arunambur0

    நிச்சயமாக. External Drive இன் Drive Letter ( C: D: ... ) மாறாத வரை எந்தப் பாதிப்பும் இன்றி பார்க்கலாம்.

    ReplyDelete
  8. நன்றி சகோ நண்பர்களுக்கு இதை பகிர்கிறேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete
  9. நீண்ட நாள் உள்ளத்தில் நினைத்துகொண்டு இருந்தேன்.இது போல ஒரு சாப்ட்வேர் கண்டேன் படித்தேன் பலனடைந்தேன் மிக்க நன்றி

    ReplyDelete
  10. Thanks,I have collected lot of movies.This may be useful to me.

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...