நம்மள இங்க கண்டுக்கலாம் FacebookGoogle PlusRSS FeedEmail

RSS FeedSubscribe to My Feed! 

Drive [2011]

இன்றைய பதிவில் நான் சொல்லப்போகும் படத்தின் பெயர் Drive. படத்தின் பெயரைப் பார்த்துவிட்டு Fast & Furious சீரிஸ் போலவோ, Transporter சீரீஸ் போல இருக்கும் என நம்பிறாதீங்க. படத்தின் கதைக்கு சம்பந்தப்பட்ட தலைப்பாக இருந்தாலும் கதையும் கதை சொல்லப்பட்ட விதமும் டோடலி டிஃபரண்ட்.

இது 2011ம் ஆண்டின் சிறந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக IMDBயால் பட்டியலிடப்பட்டுள்ளது. படம் வெளிவர முன்பே 2011ம் ஆண்டின் கானஸ் (Cannes) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகவும் பாராட்டப்படப்பட்டது, மற்றும் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் நிக்கோலஸ் வைன்டிங் ரெப்ன்க்கு (Nicholas Winding Refn) பெற்றுக்கொடுத்தது. இப்படம் IMDBல் 8.1 ratings பெற்று அத்தளத்தின் சிறந்த 250 படங்களில் 186வதாக இடம்பெற்றுள்ளது. நானும் படத்தைப் பார்த்து விட்டு இன்டர்நெட்டில் தேடிப்பார்த்ததுக்கு அனேகமாக எல்லாமே பாஸிடிவ்வான விமர்சனங்களே இருந்தன. சரி ... பில்டப் போதும். நாம படத்தைப் பற்றிப் பார்ப்போம்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


படத்தின் கதை :

ஊர் பேர் தெரியாத ஒரு கேரக்டர். நமக்கு அந்தப் பாத்திரத்தைப் பற்றித் தெரிந்தது, அதன் பெயர் Driver. நம் ட்ரான்ஸ்போட்டர் போல காசுக்காக கொள்ளைக்காரர்கள் தப்பித்துப் போக வாகனம் செலுத்துபவன். அவன் மேலும் ஒரு ஷனொன் (Shannon) என்பரின் கராஜில் மெக்கானிக்காகவும், மேலும் ஒரு ஸ்டண்ட் ட்ரைவராகவும் வேலை பார்க்கிறான்.



ட்ரைவர் அதிகம் பேசாத ஒரு கரெக்டர். தப்பித்து செல்ல உதவுபவர்களிடம் சொல்லும் கண்டிஷன்கள், "உங்களுக்கு ஐந்து நிமிடம் டைம். அந்த ஐந்து நிமிடங்களில் எது நடந்தாலும் நான் பொறுப்பு. அந்த ஐந்து நிமிடங்கள் கடந்து விட்டால் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை". அவன் ஒரே ஆளிற்கு இருமுறை வேலை செய்வதில்லை.

படம் இப்படி ஒரு கொள்ளை சம்பவத்துடன் தொடங்குகிறது. படம் பெரிய சேஸிங்ஸ், கார் வெடித்தல்கள் என்று ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மெதுவாக ஸைலன்டாக மூவ் பண்ணுகிறது. நமக்கு திடீர் என்று பொலிஸ் கார் முன்னால் வந்து நிற்கும் போதும், ஹெலிகாப்டர் லைட்டை கார் மீது வீசும் போதும் பீ.பி எகிறும். ஆனால் ட்ரைவர் ஒன்றும் ஆகாத ரியாக்ஷனுடன் மெதுவாக செல்லும், திடீர் என்று அக்ஸலரேட்டரை மிதித்து ஸ்பீடாக சைலண்டாக வண்டியை செலுத்துவான்.



ட்ரைவர் வேலை செய்யும் வொர்க் ஷொப் ஓனரான ஷனொனுக்கு ஒரு ரேஸ் கார் ஒன்றிற்கு ஓனராக வேண்டும் என்று கனவு. இதற்காக பர்னி எனும் ரவுடியிடம் 300,000 டொலர்கள் கடனாக கேட்கிறார். பர்னியும் ட்ரைவரின் ட்ரைவிங் திறமைகளை பார்த்து விட்டு காசைக் கொடுக்கிறார்.

இந்நேரத்தில் ட்ரைவரின் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஐரீன் (Irene) என்ற ஒரு பெண் தன் சிறு மகனுடன் வசிக்கிறாள். ட்ரைவருக்கும் அவளுடன் பழக்கம் ஏற்பட்டு அவளுக்கு உதவுகிறான். மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்திற்கும் ட்ரைவருக்கும் இடையில் ஒரு உறவு ஆரம்பிக்கிறது. பின்னர் அக்குடும்பத்துடன் ட்ரைவர் நிறைய நேரம் செலவளிக்க ஆரம்பிக்கிறான். இதற்கிடையில் ஐரீனின் கணவன் ஸ்டான்டர்ட் (Standard) ஜெயிலிலிருந்து வருகிறான். அவன் குக் (Cook) எனும் ஒரு காங்ஸ்ட்டருக்கு சிறையில் இருக்கும்போது அவனுக்கு பாதுகாப்பு அளித்ததற்கு 2000 டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. காசை திருப்பிக் கொடுக்காததால் குக் அவனை அடித்து, பணத்தை திருப்பிக் கொடுக்க ஒரு அடகுக் கடையை களவெடுக்கச் சொல்கிறான். அவ்வாறு செய்யாவிட்டால் ஐரீனையும் மகனையும் தாக்குவதாக மிரட்டுகிறான். ட்ரைவரும் அவ் இருவருக்காகவும் ஸ்டாண்டடுக்கு உதவ சம்மதிக்கிறான் ... அவனின் அதே கண்டிஷன்களுடன்.


நான் சொன்ன இவ்வளவுமே சும்மா ட்ரைலர் தான். இனி தான் PG-13 ஆக வந்திருக்க வேண்டிய படம் R ரேடிங்குடன் வந்ததற்கான காரணங்களுடன் மற்றும் நிறைய திருப்பங்களுடன் மெயின் பிக்சர் ஸ்டார்ட்.

அவர்களின் கொள்ளைத் திட்டம் சக்ஸஸ் ஆகியதா? அந்தக் கொள்ளைக்கு பின்னணியானவர்கள் யார்? ட்ரைவர் ஐரீன் ரிலேஷன்ஷிப் என்ன ஆகியது? ஷனொனின் கார் ஓனர் கனவு நிறைவேறியதா? இவற்றை படத்தைப் பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படத்தின் முக்கிய பலம் திரைக்கதையும் அது சொல்லப்பட்டிருக்கும் விதமும். படம் மிக மெதுவாகவே நகர்ந்தாலும் அடுத்து என்ன என பார்ப்பவரை யோசிக்க வைக்கும் ஒரு சிறந்த த்ரில்லராக இருப்பதால் நேரம் போவது தெரியவில்லை. ட்ரைவர் பற்றிய ஒன்றையுமே நமக்கு கூறாமல் அவனைப் பற்றி யோசிக்க வைத்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது. ட்ரைவர் யார்? ஏன் அவன் ஏன் யாரென்று தெரியாத ஒரு குடும்பத்திற்காக ரத்தம் சிந்த வேண்டும்? இவை அனைத்துமே உங்கள் கற்பனைக்கு.

இன்னொரு முக்கியமான பலம் என்று கூறக்கூடியவர் ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரயன் கோஸ்லிங் (Ryan Gosling). அதிகம் பேசாத, ஒரு டைட்டான கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்துக் கொடுத்திருக்கிறார். அதிலும் அவரின் சாதாரண இயல்பிற்கும், திடீரென லிப்டில் தாக்க வரும் மனிதனை கொலைவெறியுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க அடித்துக் கொல்லும் காட்சியிலும் அவரின் டைனமிக் அக்டிங் பிரமிக்கத்தக்கது.


இன்னொரு பலம் என்று சொல்லக்கூடியது படத்தின் பின்னிசை. ஆரம்ப சேஸ் காட்சிகளின் போதும் சரி, படத்தின் போதும் சரி, மிகச் சரியாக பிரயோகிக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என என்னால் காரண்டி கொடுக்க முடியாது. நீங்க ஆக்சன் படம்னா தொடங்கியதிலிருந்து சும்மா கணக்கே இல்லாமல் புல்லட்கள் பறக்கணும், காரு பஸ்ஸுலருந்து பக்கத்துல நிக்குற நாய் மட்டும் எல்லாம் வெடிக்கணும் அப்படின்னு நினைக்கிறவரா இருந்தா இந்தப் படம் எந்தளவு ஒத்துப் போகும் அப்படின்னு தெரியல. ஆனால் ஒரு வித்தியாசமான நல்ல கதையை பார்க்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கிளியர் மைண்டோட இந்தப் படத்த பாருங்க. நிச்சயம் பிடிக்கும் !!!

படத்தின் ட்ரெயிலர் இங்கே :




Drive - 8.5/10


எக்ஸ்ட்ரா பிட் I - நான் முன்பே கூறியது போல பல பத்திரிகைகளிலும் தளங்களிலும் 2011ம் ஆண்டிற்கான சிறந்த ஒரு படங்களில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. மேலும் 2011ம் ஆண்டிற்கான Golden Globe விருதில் சிறந்த துணை நடிகருக்கான விருதிற்காக (Albert Brooks) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


எக்ஸ்ட்ரா பிட் II - இந்தப் படமும் 2005ம் ஆண்டில் இதே பெயரால் வெளியிடப்பட்ட நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது.

இப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்!

6 comments:

  1. அட இத்தன நாளா எங்க இருந்தீங்க..சாரி நான் எங்க இருந்தேன்னு தெரில..இப்பதான் உங்க வலை பக்கத்துக்கு வந்தேன்..செம்மையா எழுதுறீங்க போங்க.
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

    அப்புறம் ஒரு கெட்ட செய்தி : படம் இன்னும் பார்க்கல..

    ReplyDelete
  2. நல்ல திரைப்பட விமர்சனம்.

    ReplyDelete
  3. @Kumaran

    நேரம் ஒதுக்கி ப்ரீயாப் பாருங்க பாஸ். இல்லன்னா போரடிக்கிற மாதிரி ஃபீல் ஆகும். ஆனா செம இன்ட்ரஸ்டான மூவி.

    ReplyDelete
  4. @arunambur0

    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி அருண்.

    ReplyDelete
  5. சரியா சொன்னீங்க,//படம் மிக மெதுவாகவே நகர்ந்தாலும் அடுத்து என்ன என பார்ப்பவரை யோசிக்க வைக்கும் ஒரு சிறந்த த்ரில்லராக இருப்பதால் நேரம் போவது தெரியவில்லை//

    கொழந்த தான் இந்த படத்தைக் கொடுத்து பார்க்க தூண்டிவிட்டாரு

    ReplyDelete

எழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...